பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்த போது இதுதான் நடந்தது.. வெளியே அதை காட்டல.. நிக்சன் சொன்ன பகீர் குற்றச்சாட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்திய நிக்சன் முதல் முறையாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.
அந்த பேட்டியில் நிக்சன் பல தகவல்களை பகிர்ந்து இருக்கும் நிலையில் தான் எதற்காக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தேன் என்பது பற்றி அதில் விளக்கி இருக்கிறார். அதோடு ரெட் கார்டு கொடுத்த அந்த நேரத்தில் நடந்த பல நிகழ்வுகள் வெளியே காட்டப்படவில்லை என்று பிக் பாஸ் மீதும் நிக்சன் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பெரிய அளவில் சர்ச்சைகள் தான். அதிலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை சொல்லவே வேண்டாம் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் சர்ச்சைகள் வெடித்துக் கொண்டிருந்தது. இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
உள்ளே A அணி மற்றும் B அணி என்று இரண்டு அணி இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இதில் கலந்துகொண்ட பல போட்டியாளர்கள் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிக்சன் இப்போதுதான் பேட்டி கொடுத்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்பு சில வாரங்களுக்கு முன்பே வெளியே வந்திருந்தாலும் பேட்டி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இப்போது பேட்டி கொடுத்திருக்கும் நிலையில் அதில் பிரதீப்க்கு தான் எதற்காக ரெட் கார்டு கொடுத்தேன் என்பது பற்றி பேசி இருக்கிறார். அந்த வகையில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது பெரிய தப்பு என்று பலர் வெளியே பேசி கொண்டு இருக்கிறார்கள். அதுபோல உள்ள இருந்த பலரும் கூட இப்ப வெளியே வந்ததும் பிரதீப் ரொம்ப நல்லவரு... என்று சொல்லிக் கொண்டுட்டு இருக்காங்க. ஆனா பிரதீப் என்னவெல்லாம் செஞ்சாருன்னு எனக்கு தான் தெரியும்.
நானே அவரிடம் பலமுறை வார்னிங் கொடுத்து இருக்கிறேன். நாங்க கமல் முன்பு உரிமைக்குரல் தூக்கி பிரதீப்புக்கு எதிராக பேசும் போது அவரை வெளியேற்றி விடுவார்கள் என்று நினைக்கல. அதுபோல அவரால கேர்ள்ஸ்க்கு பாதுகாப்பு இல்லை என்று நாங்கள் சொல்லவே இல்ல. அவர் உள்ளே நடந்துக்கிறது தான் சரி இல்லை என்று தான் நாங்கள் சொன்னோம். நாங்க உரிமை குரல் தூக்கி பிரதீப் மீது கம்ப்ளைன்ட் சொன்னதும் கமல்ஹாசன் நான் உள்ளே போய் பேசிட்டு வந்து பதில் சொல்றேன்னு போனாரு.
1:30 மணி நேரமா அந்த பிரேக் விட்டிருந்தாங்க. அதுவரைக்கும் நான் பிக்பாஸில் இருந்தபோது அப்படி பெரிய பிரேக் விட்டது கிடையாது. ஆனால் அந்த நேரத்தில் கமல்ஹாசன் உள்ளே போய் பிரதீப் நடந்து கொண்ட விதத்தை பார்த்திருக்கிறார். பிரதீப் பற்றிய பல விஷயங்கள் வெளியே ஒளிபரப்பு செய்யவில்லை. ஆனால் நாங்கள் எட்டு பேரு அவர் மீது உரிமைக்குரல் தூக்கி புகார் சொன்னதற்காக அவரை தூக்கி வெளியே அனுப்பி விட மாட்டாங்க.
ஏன்னா பிக் பாஸில் பல கோடி போட்டு தான் இந்த நிகழ்ச்சியை நடத்திக்கிட்டு இருக்காங்க. எங்க எட்டு பேருக்காக ஒருத்தர பலி ஆடா ஆக்க சம்மதிக்க மாட்டாங்க. எல்லோருக்கும் சம்பளம் கொடுத்து தானே இந்த நிகழ்ச்சியில் எங்களை கூப்பிட்டு போயிருக்காங்க. அதுபோல நான் உரிமை குரல் தூக்கி கம்ப்ளைன்ட் பண்ணினதும் அதற்கு பிறகு நடந்த சில விஷயங்கள் வெளியே காட்டவில்லை.
ஏன்னா பிரதீப் என்கிட்ட அந்த நேரத்தில் சொன்னாரு. நீ எல்லாம் வாய் பேசாத ஒரு பொண்ணோட வாழ்க்கையை நீ அழிச்சிட்டேன் சொன்னாரு. அது எந்த வகையில் உண்மைன்னு எனக்கு தெரியல. ஆனா பிறகு நான் அவரிடம் சில கேள்வி கேட்டேன் அதாவது நான் பண்ணுனது தப்புனா... அந்த பொண்ணு கிட்ட பேசுனதுனால தான் அந்த பொண்ணு வெளியே போயிட்டான்னு அவரு சொன்னாரு.
ஆனா அந்த பொண்ணு கிட்ட பிரதீப் என்னவெல்லாம் பேசினாரு தெரியுமா? அதைப்பற்றி நான் அப்போ கேள்வி கேட்டேன். அதை வெளியில் காட்டவில்லை என்று அந்த பேட்டியில் நிக்சன் பேசி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications