பிக் பாஸ் விட்டு வந்த பூர்ணிமாவிற்கு தெருவில் வைத்து குடும்பத்தினர் செய்த செயல்.. லீக்கான புகைப்படம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று பூர்ணிமா பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். அவருக்கு அவருடைய குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு கொடுத்திருக்கின்றனர்.
அதிலும் தெருவில் வைத்து பூர்ணிமா போட்ட குத்தாட்ட வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டிற்கு வந்ததும் வெள்ளை புடவையில் நடுத்தெருவில் வைத்து சில இளைஞர்களோடு பூர்ணிமா குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

அதுபோல பூர்ணிமாவின் பெற்றோர் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவர்களை வரவேற்பதற்காக மேள தாளத்தோடு மாலை மரியாதை எல்லாம் செய்து பார்க்கும் ரசிகர்களை மிரட்டி வருகிறார்கள்.

இதைப் பார்த்து பலர் ஒவ்வொரு முறையும் திட்டி தீர்த்து வருவதையும் பார்க்க முடியும். ராணுவத்தில் மக்களுக்காக உயிரை பனையம் வைத்து வேலை பார்த்தவர்கள் கூட வீட்டிற்கு வரும்போது அமைதியாக வருகிறார்கள். ஆனால் நூறு நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து விட்டு பெரிய சாதனை படைத்தது போல எதற்கு இந்த வீணான ஆடம்பரம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ஆனாலும் இப்போது நடக்கும் ஒரு சில சீசன்களில் தொடர்ச்சியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போட்டியாளர்களுக்கு வரவேற்பு பலமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று 16 லட்சம் பணப்பெட்டியில் இருந்த பணத்தை தூக்கிக் கொண்டு வெளியே வந்த பூர்ணிமாவுக்கு அவருடைய குடும்பத்தினர் ஏகபோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர்.

அதுவும் நடு ரோட்டில் வைத்து ஆள் உயர மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து கூடவே சில நண்பர்களோடு டான்ஸ் ஆடி இருக்கிறார். அப்போது ரோட்டில் போகும பஸ் கூட இவர்களுக்காக ஒதுங்கி போகிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு பூர்ணிமா தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணிமாவின் அம்மா மற்றும் அப்பா வந்திருந்த நிலையில் இப்போது அவருடைய தங்கையும் அந்த புகைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை நேரத்தில் பூர்ணிமா இந்த வாரத்தில் எப்படியும் தான் வெளியேறி விடுவோம் என்பதை சரியாக புரிந்து கொண்டு பணப்பெட்டியை தூக்கி இருப்பது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications