தினேஷுக்கு எதிராக வெளிப்படையாகவே ரச்சிதா வெளியிட்ட திடீர் பதிவு.. கடைசியில் ஆதரவு யாருக்கு பாருங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் பல போட்டியாளர்களின் குடும்பத்தினர் இன்று வருகை தந்து இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் தினேஷ் உடைய குடும்பத்தினராக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதிலும் ரச்சிதா தினேஷுக்காக பிக் பாஸுக்கு வருவாரா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

ஆனால் இன்று ரச்சிதா வெளியிட்ட திடீர் பதிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோக்களில் பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம், மணி போன்றோரின் குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் அதிகமான ரசிகர்கள் தினேஷ் உடைய குடும்பத்தை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர். தினேஷ் பல இடங்களில் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பற்றி பேசிக் கொண்டிருப்பதால் தினேஷ்காக ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.
ஏற்கனவே காதல் திருமணம் செய்து பல வருடங்களாக மகிழ்ச்சியாக இருந்த ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் சமீப காலமாக பிரிந்து இருக்கின்றனர். இவர்களுடைய பிரச்சனை சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான். இது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு இவர்கள் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்றும் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் 7: மீண்டும் மீண்டும் தன்னை பற்றி பேசும் தினேஷ்.. ரச்சிதா வெளியிட்ட திடீர் பதிவு.. இதுதான் பதிலாம்
இப்படியான நிலையில் இன்று ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில விசித்திராவிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து, பெண்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது அதிகமாக தினேஷ் மற்றும் விசித்திராவிற்கு இடையே தான் பிரச்சனை வெடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ரச்சிதா விசித்திராவிற்கு ஆதரவு கொடுத்து இருக்கும் நிலையில் தினேஷ் மீது உள்ள கோபம் வெளிப்படையாக தெரிகிறது.
கடந்த சீசனில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரச்சிதாவிற்கு ஆதரவாக தொடர்ச்சியாக முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரைக்கும் தினேஷ் பதிவு வெளியிட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது ரச்சிதா செய்திருக்கும் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷுக்கும் விசித்திராவிற்கும் இடையே பிரச்சனை வரும்போது எல்லாம் விசித்திரா தினேஷ் அவருடைய குடும்பத்திலும் கூட இப்படித்தான் இருப்பாரு போல என்று அடிக்கடி குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ரச்சிதா இப்போது விசித்தராவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் தினேஷின் மீது கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது தெரிகிறது.
அது போல தினேஷுடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தியிருந்த ரச்சிதா அதை மறைத்து இப்போது அதில் வேறு டாஸ்க் போட்டு இருக்கிறார். அதனால் இனி ரச்சிதா மற்றும் தினேஷ் சேர்வதற்கு வாய்ப்பில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனாலும் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு என்ன முடிவெடுக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications