தப்பா நடந்த நடிகர் யார்? பிக் பாஸுக்குள் அதை பேச காரணம் இதுதான்! உண்மையை உடைத்த விசித்திரா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த எபிசோடு என்றால் அது சோக கதையை சொல்லும் டாஸ்க்கில் விசித்திரா தனக்கு சினிமா துறையில் நடந்த அவலங்கள் பற்றி சொன்னதுதான். தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றியும், அதற்கு யாருமே தனக்குத் துணை நிற்கவில்லை என்பது பற்றியும் விசித்திரா வெளிப்படையாகவே பேசி இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பேட்டியில் விசித்திராவிடம் அந்த தெலுங்கு நடிகர் யார் என்பது பற்றி கேட்ட கேள்விக்கு விசித்திரா நீண்ட ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு என்றால் அது கதை சொல்லும் டாஸ்க்கில் விசித்திரா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தனக்கு நடந்த அவலங்கள் குறித்து பேசியதுதான். அதாவது அந்த டாஸ்க்கில் விசித்திரா முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமானேன். சூட்டிங்கில் அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். ஆனால் அவர் என்னுடைய பெயரை கூட கேட்காமல் என்னை இரவு ரூமுக்கு வர சொன்னார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால் நான் அந்த ரூமுக்கு போகவில்லை. அதனால் அந்த நடிகர் ஆட்களை வைத்து இரவு முழுவதும் என்னுடைய ரூமை தட்ட வைத்தார். அதுபோல ஒரு நாள் அந்த சூட்டிங்கில் ஆக்சன் காட்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த சண்டை கலைஞர்கள் என்னை தவறான முறையில் தொட்டார். அது குறித்து நான் மாஸ்டரிடம் சொன்னபோது, அவர் அந்த நபரை அடிக்காமல் என்னை கன்னத்தில் அறைந்து விட்டார். இது குறித்து நடிகர் சங்கத்திடமும் புகார் கொடுத்தேன். அவர்களும் இதை விட்டு வேற வேலையை போய் பாருமா என்று சொல்லிவிட்டார்கள்.
ஒருவர் கூட என்னோடு நிற்கவில்லை இதனால் தான் நான் நடிப்பிலிருந்து வெளியேறினேன் என்று பேசி இருந்தார். இது அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதோடு அந்த நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும் தெலுங்கில் வெளியான பாலலடிவி பாசு என்ற திரைப்படத்தில் தான் இந்த மாதிரி பிரச்சனை நடந்தது என்றும் அதுபோல அந்த ஸ்டாண்ட் மாஸ்டர் ஆர் விஜய் என்றும் விசித்ரா கொடுத்த புகாரை எடுக்க மறுத்த தலைவர் ராதா ரவி தான் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வெளியே வந்த விசித்திராவிடம் அந்த நடிகர் யார் என்று ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விசித்திரா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நான் பிக் பாஸில் சொன்னது மில்லியன் கணக்கான மக்களுக்கு செல்ல வேண்டும் என்று தான் அந்த நிகழ்ச்சியில் நான் பேசினேன். அது பலருக்கு உத்வேகமாக இருக்கும். நான் யார் பெயரையும் அந்த நிகழ்ச்சியில் சொல்லவில்லை.
ஆனால் ரசிகர்கள் அக்கு வேரா ஆணி வேரா தகவலை எடுத்து விட்டனர். ரசிகர்கள் இப்படி எடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும்... அதனால் தான் நான் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெயர் எதையுமே குறிப்பிடவில்லை. அது நிஜமான விஷயம் தான். என்னுடைய வாழ்க்கையில் இன்னும் கருப்பு புள்ளியாக இருக்கிறது என்று விசித்திரா பேசி இருக்கிறார்.
அதனால் ரசிகர்கள் விசித்திரா மீண்டும் வெளியே வந்து பேசியிருக்கிறார் என்றால் அந்த நடிகர் பாலகிருஷ்ணா தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது தான் விசித்திரா பெயரை சொல்லவில்லை. ஆனால் வெளியே வந்த பிறகாவது அது பற்றி தெளிவாக சொல்லி இருக்கலாமே என்பதும் இணையத்தில் பலருடைய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications