விசித்ரா பாலியல் குற்றச்சாட்டு.. அப்போது நடிகர் சங்க தலைவர் இந்த நடிகர் தான்.. ஆனால் கணவர் எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை விசித்திரா கதை சொல்லும் டாஸ்கில்தான் நடிகையாக இருக்கும்போது தனக்கு ஏற்பட்ட அவலம் குறித்து பேசி இருந்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் சண்டை பயிற்சியாளர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்தார்கள். அப்போது திரைப்பட நடிகர் சங்கத்தினர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று விசித்திரா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இதற்கு விசித்ராவின் கணவர் அந்த நேரத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்தது விஜயகாந்த் தான். ஆனால் அவர் என்ன மாதிரி நடந்து கொண்டார் என்பது பற்றி பேசி இருக்கிறார்.
அந்த படத்தில் ஷூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அதனால் அங்குள்ள ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். அந்த ஹோட்டலில் தான் என்னுடைய வருங்கால கணவரை நான் சந்தித்திருந்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக அந்த ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தில் ஹீரோவிடம் நான் இந்த படத்தில் தான் நடிக்கிறேன் என்பதை அறிமுகம் செய்வதற்காக போனேன்.
ஆனால் அவர் என்னுடைய பெயரைக் கூட கேட்கவில்லை. நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? அப்போ நைட்டு ரூமுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் அப்படி சொன்னதுமே எனக்கு பெரிய ஷாக் ஆக இருந்தது. பிறகு நான் என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கி விட்டேன். அதனால் ஒரு சிலர் இரவில் என்னுடைய அறையை வந்து தட்டி ரகளை செய்திருந்தனர். இதனால் நான் மிகவும் பயந்தேன்.
எப்படியாவது சூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒவ்வொரு நாளும் இதே மாதிரி பிரச்சனையை நான் சகித்துக் கொண்டிருந்தேன். அந்த நடிகர் சொல்லி சில நபர்கள் தினமும் குடித்துவிட்டு வந்து என்னுடைய ரூம் கதவை தட்டி பிரச்சனை செய்தனர். இதை கவனித்து என்னுடைய கணவர் என்னிடம் என்ன பிரச்சனை உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.
அப்போது நான் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு அரை வேண்டும் நான் இங்கே தங்கி இருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னேன். அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு அறையில் தங்க வைத்தார். அது யாருக்குமே தெரியாது. இது அந்த நடிகருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.. நான் அவர்கள் எண்ணத்திற்கு ஒத்துப் போகவில்லை என்பதால் என்னை எப்படியாவது படத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று மொத்த படக்குழுவே பிளான் செய்திருந்தது.
ஒருநாள் படப்பிடிப்பு சண்டை காட்சி நடந்து கொண்டு இருந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் மக்கள் எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நபர் பின்னாடி இருந்து என்னை தவறான நோக்கத்தில் பின்பக்கத்தில் கை வைத்தார். நான் முதல் முறை தெரியாமல் நடந்தது என்று அமைதியாகிவிட்டேன். ஆனால் அடுத்த டேக்கிலும் இதே மாதிரி நடந்தது. பிறகு நான் அந்த நபரை கையும் களவுமாக பிடித்துக் கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் இடம் ஒப்படைத்தேன்.
ஆனால் அவர் அந்த நபரை எதுவும் செய்யாமல் என்னை பளார் என்று அறைந்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் யாருமே எனக்கு நடந்த அநீதியை தட்டி கேட்கவில்லை, குரல் கொடுக்கவும் இல்லை. நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்னுடைய நண்பர் புகார் கொடுக்க சொன்னார். நானும் புகார் கொடுத்திருந்தேன். அந்த செய்தி, செய்தி சேனல்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் எனக்கு திரைத்துறையில் இருந்து யாருமே உதவி செய்யவில்லை.
நடிகர் சங்கத்திடம் நான் பேசும்போது கூட அவர்கள் இதை தூக்கிப் போட்டுவிட்டு நடிப்பை போய் பாருமா என்று அந்த நேரத்தில் தலைவராக இருந்தவர் கூறினார். இதனால் தான் நான் வெறுத்துப் போய் 20 வருடமாக நடிப்பை விட்டு விலகி இருந்தேன் என்று வேதனையோடு கூறி இருந்தார்.இந்த நிலையில் விசித்திரா சொல்வது போன்று பார்த்தால் 2001 ஆம் ஆண்டில் நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் தான் இருந்தார் என்று அனைவருக்கும் தெரிய வருகிறது.
அதே நேரத்தில் விஜயகாந்த் இருந்தும் இந்த மாதிரி ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணவில்லையா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜயகாந்த் குறித்து இத்தனை வருடங்களில் முதல் முறையாக இப்படி ஒரு கம்ப்ளைன்ட் வந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விசித்ராவின் கணவர் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஆமாம் அந்த நேரத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்தது விஜயகாந்த் தான். அவரும் இதில் பேசி இருந்தார். ஆனாலும் இதில் சரியான தீர்வு கிடைக்கவில்லை. நாங்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தோம். அப்போது நடிகர் சங்கத்தினர் பெரிய இட பிரச்சினையாக இருக்கிறது என்று இதில் தீர்வு காணாமல் விட்டுவிட்டார்கள்.
ஆரம்பத்தில் இதுவும் பெரிய பிரச்சனையாக கொண்டு செல்லப்பட்டது தான். பிறகு அதை முடிவுக்கு காணாமல் விட்டு விட்டதுதான் விசித்திராவுக்கு வேதனையை அளித்தது என்று கூறியிருக்கிறார். அதோடு விசித்திரா நடிகர் சங்கத்தில் செயலாளர் தன்னை இந்தப் பிரச்சினையை தூக்கிப் போட்டு வேலையை பாரு என்று கூறினார் என்று அந்த கதை சொல்லும் டாஸ்க்கில் கூறி இருந்தார்.
அதனால் அந்த நேரத்தில் செயலாளராக இருந்தது நடிகர் சரத்குமார், ராதாரவி, நெப்போலியன், எஸ் எஸ் சந்திரன் என நான்கு பேர் இருந்த நிலையில் யார் இந்த வார்த்தையை சொல்லி இருப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது.
அது வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது விசித்திரா என்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் என்றால் 2001 ஆம் ஆண்டு நடந்ததுதான். தெலுங்கில் பிரபலமான முன்னணி நடிகர், அவருடைய ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications