விசித்ரா அந்த வார்த்தை சொன்னது தப்பு.. பிக் பாஸ்க்குள்ளே இதுதான் நடக்குது.. ரகசியங்களை உடைத்த விஷ்ணு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடந்தது என்பது பற்றி விஷ்ணு முதல் முறையாக பேட்டி அளித்திருக்கிறார். அதில் தன்னை பற்றி விசித்ரா விமர்சித்து பேசியது தவறு என்றும் தன்னுடைய கருத்தை விஷ்ணு வெளிப்படையாக வைத்திருக்கிறார்.
அதோடு உள்ளே சில போட்டியாளர்கள் சக போட்டியாளர்களின் பர்சனல் வாழ்க்கையை குறித்து பேசி அவர்களை டார்கெட் செய்து வந்தனர் என்றும் விஷ்ணு கூறியிருக்கிறார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கிருந்த மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலை குறித்தும் விஷ்ணு விரிவாக பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த விஷ்ணு பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில சில பெண்கள் தன்னிடம் சொன்ன வார்த்தையை நம்பி தான் தான் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தேன். ஆனால் வெளியே வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது பிரதீப் மீது எந்த தவறும் இல்லை என்பது.
அதுபோல உள்ளே சிலர் என்னை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று விஷ்ணு பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல விசித்ரா பிக் பாஸ் வீட்டிற்குள் அடுத்தவர்களுடைய பர்சனல் வாழ்க்கையை வைத்து டார்கெட் செய்து அடித்து தனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று விளையாடிக் கொண்டிருந்தார்.
விசித்ரா மேம் விளையாட்டு வித்தியாசமாக இருந்தது என்று விஷ்ணு பேசியிருக்கையில் அவரிடம் நீங்களும் போட்டியாளர்களோடு சண்டையிட்டீர்களே என்று கேட்ட கேள்விக்கு ஆமாம் நான் சண்டை போட்டேன் ஆனால் நான் யாருடைய பர்சனல் வாழ்க்கை பற்றியும் பேசல, யாரிடமாவது எனக்கு கருத்து வேறுபாடு என்றால் முகத்துக்கு நேராக பேசுவேன். இல்லையென்றால் அவர்கள் முன்பு பேசியதை தான் அவர்கள் இல்லாத நேரத்தில் கூட நான் புலம்பிக் கொண்டிருப்பேன்.
ஆனால் எந்த இடத்திலும் யாருடைய குடும்பத்தை வைத்தோ பர்சனல் வாழ்க்கையை குறித்தோ பேசியதே இல்லை. ஆனால் விசித்ரா என்னிடம் நேரடியாகவே சொன்னார், உன்னை எல்லாம் நல்லா வளர்க்கல, உங்க அம்மா அப்பா உன்னை பெத்ததுக்கு அவமானப்படனும். நான் என் பிள்ளைகளை இந்த மாதிரி எல்லாம் வளர்க்கல என்றெல்லாம் என்கிட்ட பேசினாங்க. நான் அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுத்து தான் அவங்கள திருப்பி தரக்குறைவா பேசல.
அதுபோல பிக் பாஸ்க்குள்ள ஒரு சிலருடைய விளையாட்டு வித்தியாசமா இருந்துச்சு. நானும் வார நாட்களில் கோபப்பட்டு சண்டை போட்றேன். ஆனால் வார இறுதி நாளில் கோபத்தை குறைத்துக் கொள்கிறேன் என்று எல்லாரும் சொன்னாங்க. அது என்னன்னா எனக்கு கமல்ஹாசன் சார் மேலே அவ்வளவு மரியாதை இருக்கு. அவர்தான் நடிப்புக்கு பெரிய இலக்கணமே. நம்ம அந்த அளவுக்கு அவர் மேல மரியாதை வெச்சிருக்கோம்.
ஆனால் நம்ம ஏதேனும் தப்பு செஞ்சிட்டா அவர் என்ன கேள்வி கேட்பார் என்கிற சிந்தனை எனக்கு வார இறுதி நாட்களில் வந்து விடும். அதனாலேயே நான் அதிகமா பேசுவதை குறைச்சிடுவேன். மத்தபடி ஸ்டேட்டர்ஜி வச்சு தான் நானும் கேம் விளையாடினேன். அதற்காக அடுத்தவர்களுடைய பர்சனல் வாழ்க்கையை வச்சு எந்த இடத்திலும் நான் விளையாடல என்று விஷ்ணு அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications