பிக் பாஸ் 8: கோயம்புத்தூர்ல சாப்பிட்டீங்களான்னு கேட்போம்.. நடிகர் ரஞ்சித்தை நெளிய வைத்த விஜய் சேதுபதி
சென்னை: பிக்பாஸ் 8 சீசன் துவங்கியிருக்கும் நிலையில், முதல்நாளே பல்வேறு பரபரப்புகளை தந்துவிட்டு சென்றுள்ளது.. இதில் முதல்நாளே டிரெண்டாகியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதேசமயம், ஒருசாராரின் அதிருப்தியை பெற துவங்கியிருக்கிறார்.
7 சீசன்வரை கமல் தொகுத்து தந்த நிகழ்ச்சியை, விஜய் சேதுபதி எப்படி வழங்கப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் ஏற்பட்டு வந்தது.. ஆனால், முதல்நாளிலேயே அனைவரது எதிர்பார்ப்பையும் விஜய் சேதுபதி பூர்த்தி செய்துவிட்டதாகவே தெரிகிறது.

ரஞ்சித்: போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் வெல்கம் செய்துவந்தபோது, நடிகர் ரஞ்சித்தையும் வரவேற்று, புகழ்ந்து பேசினார் விஜய் சேதுபதி.. அப்போது உங்களுடன் யார் வந்திருக்காங்க என்று விஜய் சேதுபதி கேட்கவும், என் ஃபிரண்ட்ஸ் வந்திருக்காங்க என்றார் ரஞ்சித்.
சாப்பிட்டீங்களா: உடனே ரஞ்சித்தின் நண்பர்கள் 2 பேரும், விஜய் சேதுபதிக்கு வணக்கம் வைத்தனர். அதில் ஒருவர் வணக்கம் வைத்ததுமே, "சாப்பிட்டீங்களா?" என்று கேட்டார்.
இந்த கேள்வியை விஜய் சேதுபதி சற்றும் எதிர்பாராமல், சாப்பிட்டேன், நீங்க சாப்பிட்டீங்களா? என்று கேட்டார்.. உடனே ரஞ்சித்தின் நண்பர், எங்க ஊர் கோயம்புத்தூர்ல யாரையாச்சும் பார்த்தால், இப்படித்தான் முதல்ல கேட்போம் என்றார்.
வெளியே போ: அதற்கு விஜய்சேதுபதி, "எங்க ஊர்லயும் இப்படித்தான் கேட்போம்.. எல்லா ஊர்லயும் யாரையாச்சும் முதல்ல பார்த்தால் இப்படித்தான் கேட்பாங்க.. எல்லா ஊரிலும் அப்படித்தான் கேட்பார்கள். இது வழக்கம்தான். வீட்டுக்கு வந்தவர்களை எந்த ஊரிலும் வெளியே போ என்று சொல்ல மாட்டார்கள்.. நீங்க யாரையாச்சும் அப்படி சொல்லுவீங்களா" என்று ஆடியன்ஸை பார்த்து கேட்டார்.
இந்த பதிலை கேட்டதுமே, ஆடியன்ஸ் கைகளை தட்ட, ரஞ்சித் மற்றும் அவரது 2 நண்பர்களும் சங்கடத்தால் நெளிய ஆரம்பித்துவிட்டார்கள்.. இதற்கு பிறகு ரஞ்சித்துக்கு விஜய் சேதுபதி வாழ்த்து சொல்லி வீட்டிற்குள் அனுப்பி வைத்தாலும், ரஞ்சித் ரசிகர்கள் தரப்பினர் அப்செட் ஆகிவிட்டதாகவே தெரிகிறது. இது தொடர்பான விவாதமும் சோஷியல் மீடியாவில் வெடித்து கிளம்பியிருக்கிறது.
பேச்சுத்திறமை: முதல்நாளே விஜய் சேதுபதி தன்னுடைய பேச்சு திறமையை காட்ட வேண்டுமா? ரஞ்சித்தை வெல்கம் செய்வதுடன் நிறுத்தி கொண்டிருக்கலாமே? அந்த நண்பர் அப்படி என்ன தப்பாக கேட்டுவிட்டார்? யதார்த்தமாக கேட்டதைகூட, இப்படி பெரிதுபடுத்தியிருக்கக்கூடாது, விஜய்சேதுபதி வன்மத்தை ரஞ்சித் மீது கக்குகிறார்.
முதல் நாளே இப்படி போட்டியாளர்களையும் போட்டியாளர்களுடைய உறவினர்கள், நண்பர்களையும் மூக்கு உடைப்பது போல முகத்தில் அடித்தாற்போல பேசியிருப்பதை விஜய் சேதுபதி தவிர்த்து இருக்கலாம் என்றெல்லாம் கமெண்ட்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன.
ஆனால், மற்றொரு தரப்பினரோ, யாரையாச்சும் முதன்முதலில் சந்திக்கும்போது, நல்லா இருக்கீங்களா? என்றுதான் கேட்பார்கள்.. இப்படி முதல் கேள்வியே சாப்பிட்டீங்களா? என்று கேட்க மாட்டார்கள். தன்னுடைய ஊர் பெருமை பேசுவதற்கான இடம் பிக்பாஸ் களம் கிடையாது.. விஜய்சேதுபதி தவறான பதில் எதையும் சொல்லவில்லை.
அதேசமயம், கோவைக்கு மாற்றாக அவருடைய ஊர் பெருமையையும் பேசவில்லை.. எல்லா ஊரிலும் இப்படித்தான் விசாரிப்பார்கள் என்று சொல்லி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் சமப்படுத்திதான் பேசியிருக்கிறார்" என்று ஆதரவுகள் பெருகி கொண்டிருக்கின்றன.
வைரல் வீடியோ: ரஞ்சித்தை செய்துவைத்தபோதே தன்னுடைய பாணியில் தக்லைஃப் சம்பவத்தை விஜய் சேதுபதி செய்ததுதான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ரஞ்சித்தை வெச்சு செய்துவிட்டார் என்று அந்த வீடியோவையும் ஷேர் செய்து வருகிறார்கள் இணையவாசிகள்.. !!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications