சிலருடைய சுயரூபம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது...இன்று பேசப்போகும் கமல்..யாரைப் பற்றி தெரிகிறதா
சென்னை: இந்த வாரம் நடந்த பிரச்சனைகளை பற்றி கமல் பேசுவாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ப்ரமோவில் பதில் அளித்துள்ளார்.
இந்த வார சனிக்கிழமை எபிசோட் இதில் யாருடைய பஞ்சாயத்தை துவங்க போகிறார் கமல் என்று ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஆர்வத்தோடு எதிர்ப்பார்த்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் வழக்கம் போல இன்றைய சனிக்கிழமை எபிசோடுக்காண புரோமோ மிகவும் லேட் ஆகவே வந்துள்ளது. இதை பார்த்ததும் ரசிகர்கள் எப்போதும் போல தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு சீசனிலும் நடப்பதுதான் என்றாலும் இந்த வாரத்தில் இப்படி செய்யலாமா என்று பலர் கோபங்களை அதிகமாக வெளி காட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்த வாரம் அடி பிடி வரைக்கும் சென்றிருக்கும் நேரத்தில் இதில் கமல் எந்த மாதிரி பஞ்சாயத்து செய்வார் என்று பலர் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மொத்த சீசனில் ஹைலைட்
இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் பலர் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இது அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் ஹைலைட் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்கு இடையே நடந்த அடிதடி சண்டையை பார்த்து பலர் சமூக வலைத்தளங்களில் கமல் பேசப்போகும் வார்த்தைக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் இருவரில் யாருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே தூக்க படுமா என்று பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

வாத்தியாரின் வேலை பலிக்குமா
எந்தப் பிரச்சனைகள் நடந்தாலும் வாத்தியார் என்கிற முறையில் கமல் அதை கூலாகவே கேண்டில் பண்ணுவதில் தலைசிறந்தவர் என்று பலர் கூறி வருகின்றனர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல போட்டியாளர்களுக்கு முகம் சுளிக்காமல் அறிவுரைகளை குத்தலாக வழங்கிவருகிறார். ஆனால் இந்த வாரம் நடந்த பிரச்சனையில் இப்படி செய்தால் நன்றாக இருக்காது என்று பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் புரோமோவில் கமல் பேசியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரமோவில் மிரட்டும் கமல்
பாதியில் வந்த அமீர் இறுதிப்பட்டியயில் முதல் ஆளாய் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். கலகலப்பாய் இருந்த வீடு கைகலப்பு வரை வந்துள்ளது. சிலரது சுயரூபம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை பற்றி இன்று பேசலாம் அவர்களுடன் என்று மொத்த ரசிகர்களின் கேள்விக்கும் பதில் இன்று தருகிறேன் என்று கமல் கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் எப்போதும்போல ப்ரமோவில் மட்டும் பேசிவிட்டு எபிசோடில் பேசாமல் இருந்து விடாதீர்கள் என்று பலர் வேண்டுகோள் எடுத்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications