கொடுமை படுத்துறாங்கப்பா...கொந்தளிக்கும் தாமரை...காரணம் ஆண் போட்டியாளர்கள் தானா??
சென்னை: ஆண் போட்டியாளர்களின் செய்கையால் வீட்டிலிருக்கும் பெண் போட்டியாளர்கள் புலம்பி வருகின்றனர்.
இருக்கும் ஏழு போட்டியாளர்களுக்குள் இப்படி ஒரு கருத்து வேறுபாடா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இன்னும் பொறுப்பு வரவில்லையா? ?
பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் களைகட்ட தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். அதற்கு பிறகும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் வழியாக உள்ளே நுழைந்தனர். தற்போது இதில் 7 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றனர். பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்ற பிறகும் இவர்களுக்குள் இன்னும ஒற்றுமையும், பொறுப்புணர்ச்சியும் வரவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எங்கேயும் இப்படிதானா?
வீட்டிலும் சரி நாட்டிலும் சரி வேலை செய்பவர்கள் தான் எப்போதும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் அதைப் பார்த்து கருத்து சொல்பவர்களும், கலாய்த்துக் கொண்டு இருப்பவர்களும் எங்கேயும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ளும் நிரூபித்து இருக்கின்றனர். இவர்களைப் பார்த்ததும் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த சீசனில் அதிகமான பெண் போட்டியாளர்கள் இருந்த நிலையில் பெண் போட்டியாளர்களுக்குள் தான் அதிகமாக சண்டைகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

வீட்டு வேலையில் பாகுபாடு
ஆனால் ஆண், பெண் யாரும் பாகுபாடு கிடையாது என்று பல நேரங்களில் அனைத்து போட்டியாளர்களம் சரிசமமாக கோதாவில் இறங்கி சண்டை சச்சரவுகளில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடி வந்தனர். இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இவர்கள் சண்டையில் மட்டும்தான் நடந்து கொள்கிறார்களே தவிர வீட்டு வேலைகளில் யாரும் பொறுப்பாக இல்லை என்று பலமுறை நிரூபித்திருக்கின்றனர். ஏற்கனவே ராஜூ ஒரு கிண்ணத்தை கழுவவில்லை என்று இந்த பிரச்சனை இப்ப வரைக்கும் பூதாகரமாக தான் பேசப்பட்டு வருகிறது.
Recommended Video

வேலையில் டிமிக்கி தானா??
இந்த நிலையில் இன்று தாமரைச்செல்வி ரொம்ப கொடுமைப்படுத்துகிறார்கள்... பாத்திரம் கழுவ கூட யாரும் வர மாட்டேன் என்கிறார்கள் என்று மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக பிரியங்கா மற்றும் பாவனி இருவரும் அமர்ந்து இருந்தாலும் அவர்கள் மூவரும் பேசுவது மீதமிருக்கும் நான்கு ஆண் போட்டியாளர்களை பற்றி தான். அவர்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்களே தவிர யாருமே வீட்டு வேலைகளைச் செய்வதில்லை என்று இதன் மூலம் வெளியே தெரிகிறது. கருத்து சொல்வதில் மட்டும் கந்தசாமியாக செயல்படும் இவர்கள் காரியத்திலும் நல்லபடியாக நடந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications