மைக் பிடி, ஓட்டு கேளு...தொடங்கிய பிரச்சாரம்...பிக் பாஸின் புதுமுயற்சி
சென்னை: கடைசி வாரத்தில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர்.
இதுவரைக்கும் ஓட்டு அளித்த ரசிகர்களிடம் கடைசி வாரத்தில் உருக்கமாக தங்களது கருத்துக்களை போட்டியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு ஏற்பட்ட குழப்பம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நேரத்தில் போட்டியாளர்கள் தற்போது ஐந்து பேர்தான் மீதமிருக்கின்றனர்.இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கின்றது. ஆரம்பத்திலிருந்து ராஜுவின் பெயரை ரசிகர்கள் கூறிவந்தாலும் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட வழி இருக்கிறது என்று ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம். அதனாலே இந்த வாரம் ஓட்டுக்கள் குவிய தொடங்க ஆரம்பித்துள்ளது.

கோல்டன் மைக்
இந்த வாரத்திற்கான முதல் நாளில் இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக ரசிகர்களிடம் தங்களுடைய கருத்துக்களை கூறி தன்னை எதற்காக ஓட்டளிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறி, தலைவர் பதவியில் தன்னை தேர்ந்தெடுப்பதற்காக தனக்காக வாக்களிக்கும்படி பிரச்சாரத்தை தொடங்குவதற்காக பிக்பாஸ் புது வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் கோல்டன் மைக் பிடித்து போட்டியாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர்.

பிரியங்காவின் பூரிப்பு
பல நாட்களுக்குப் பிறகு மைக்கை கையில் பிடித்ததும் பிரியங்காவின் முகத்தில் பூரிப்பு தாங்கமுடியவில்லை. எவ்வளவோ சாதனைகள் பெற்றிருந்தாலும், பல நாட்களுக்கு பிறகு கையில் மைக் கிடைத்த சந்தோஷத்தில் திகைத்துப்போய் அவர் சிரித்த சிரிப்பை பார்த்ததும் ரசிகர்கள் பலர் பிரியங்கா பேசாமலே அவருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கமெண்ட் களில் கேட்டு வருகின்றனர். ஒருபக்கம் பிரியங்காவை கலாய்த்து வரும் ரசிகர்கள் இந்த ஒரு மூவ்மெணட் பார்த்ததும் எப்படியும் விஜய் டிவியை சார்ந்த பிரியங்காவை தான் ஜெயிக்க வைக்க போகிறார்கள் நாங்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று ஒரு சிலர் மனக்குமுறலை கொட்டி வருகின்றனர்.
Recommended Video

கமெண்டுகளில் ரசிகர்களின் கருத்து
பிக் பாஸ் கொடுத்து இருக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்களை கவரும் விதத்தில் போட்டியாளர்கள் பேசி ரசிகர்களின் மனதை மாற்ற வைப்பதற்கான முயற்சியில் ஆளாளுக்கு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். யாருடைய முயற்சி எடுபட்டிருக்கிறது என்று இந்த வார இறுதியில் தெரியும் என்று ஒரு சிலர் கூறி வந்தாலும் இதுவும், சுவாரசியம் இல்லாத ஒரு போட்டிதான் என்று ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்னதான் சில ரசிகர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கமெண்ட்டுகளில் ஓட்டு அளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications