பிக் பாஸ் அபிஷேக் ஞாபகம் இருக்கா? காதலியின் போட்டோவை வெளியிட்டு சொன்ன வார்த்தை! கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சிலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் அபிஷேக் ராஜா. இவர் ஏற்கனவே திரைப்படங்களை தன்னுடைய யூடியூப் சேனலில் ரிவ்யூ செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதேபோல அபிஷேக் ராஜாவுக்கு ஏற்கனவே காதல் திருமணம் முடிந்திருந்த நிலையில் அந்த திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இப்போது அபிஷேக் ராஜா மீண்டும் தான் காதலிப்பதாக இணையத்தில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல யூடியூபராக யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அபிஷேக் ராஜா அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு இருந்தார்.
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலகலப்பாக இருக்கும் போது அபிஷேக் பிரியங்கா மற்றும் பாவனியோடு அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வதும் பிறகு வார இறுதி நாட்களில் சமரசம் ஆகி விடுவதும் வாடிக்கையாக இருந்தது.
அதனாலேயே அவர் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார். பிறகும் இவருக்கு அந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆனாலும் அதிக நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் அபிஷேக் ராஜா பற்றிய சர்ச்சைகளும் அதிகமாக பேசப்பட்டது.

காரணம் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை பற்றியும் கமல்ஹாசனை பற்றி கழுவி கழுவி ஊற்றிய வீடியோக்களும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது வைரலாகி வந்தது. அதுபோல அபிஷேக் ராஜாவின் முதல் மனைவி பிரச்சனைகளும் அந்த நேரத்தில் பூகம்பமாக வெடித்தது.
இப்படியான நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்த அபிஷேக் ராஜா இப்போது தன்னுடைய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. அதோடு அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் ஒன்றையும் அபிஷேக் ராஜா கொடுத்திருக்கிறார்.
அதாவது அதில் குறைபாடு உள்ள எண்ணை கணிசமான நபராக மாற்றியதற்கு நன்றி... எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுக்காததற்கு உனக்கு நான் நன்றியை சொல்கிறேன் என்று தன்னுடைய காதலியின் instagram ஐடியை டேக் செய்து இனிய பிப்ரவரி 14 என்று கூறியிருக்கிறார். அதோடு ஆதிப்ரூஸ் பார்ட்டிக்கு பிறகு நான் எதனால் பிரபாஸ் மாதிரி இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை என்று அதில் கூறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி வந்தாலும் கலாய்த்தும் வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications