பிக் பாஸில் கூட இருந்தவங்களே இப்படி பண்ணுனாங்க! அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. அனிதா சம்பத் எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே அவருடைய தந்தை இறந்து போயிருந்த வேதனையான தருணத்தை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு பிக் பாஸில் தன்னனுடன் இருந்த ஒரு சிலரைப் பற்றியும் அதில் பேசியிருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக பலருக்கும் பரிச்சயமான அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிகமாக பிரபலம் அடைந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகமாக தன்னுடைய சோக கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பலர் அவரை கலாய்த்து கொண்டிருந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய இழப்பு ஏற்பட்டது. அதாவது அவருடைய தந்தையின் இழப்பு... இந்த நிலையில் தன்னுடைய தந்தையின் இறப்புக்கு பிறகு தான் எப்படி அதிலிருந்து மீண்டு வந்தேன் என்பது பற்றி கண்ணீரோடு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் என்னுடைய அப்பா நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக போறேன் என்று சொன்னபோது சந்தோஷமாக போயிட்டு வா என்று சொன்னார். ஆனால் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் என்னவென்று தெரியாது. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு போகிறேன் என்று மட்டும் நினைத்து இருந்தார்.
பிறகு பிக் பாஸ் வாசலில் என்னுடைய கணவர் மற்றும் அம்மா, அப்பா மூன்று பேரும் எனக்கு டாட்டா காட்டி அனுப்பி வைத்தார்கள். நான் உள்ளே 80 நாட்களுக்கு மேலே இருந்தேன். அதேபோல 20 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தேன். அதைத்தொடர்ந்து 100 நாட்கள் கழிந்து ஆசையாக என்னுடைய தந்தையை பார்க்கலாம் என்று நான் வீட்டிற்கு வந்த நிலையில் என்னுடைய தந்தை இறந்து போய்விட்டார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும் போது என்னுடைய தந்தையை எப்படி வெளிநாட்டிற்கு கூட்டிட்டு போகலாம் என்று நான் ரொம்பவே யோசித்து கொண்டு இருந்தேன். ஏன்னா அவர் அந்த மாதிரி இடங்களுக்கு போனதே கிடையாது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கூட இருந்த போட்டியாளர்களிடம் நான் நீங்க வெளிநாட்டுக்கு போயிருக்கீங்களா? அப்போ எவ்வளவு காசு ஆகும் என்று விவரங்களை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன்.
அப்போ கூட எனக்கு இதில் கிடைக்கிற சம்பளத்தை வைத்து அம்மாவுக்கு அஞ்சு பவுனில் தாலி செயின் எடுத்து கொடுக்கணும். அப்பாவை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போனும் என்று கனவு கண்டு கொண்டே இருந்தேன். ஆனால் வெளிய வந்ததும் என்னுடைய அப்பா இல்லை என்ற வருத்தம் என்னை முடக்கி போட்டு விட்டது. அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் 80 நாட்களாக என்னோடு இருந்த சில போட்டியாளர்கள் ஒரு வார்த்தைக்கு கூட எங்க வீட்டுக்கு வந்து என்னிடம் பேசவே இல்லை.
எனக்குன்னு ஒரு சின்ன ஆறுதல் கூட சொல்லவே இல்லை. மொத்தம் நாளே பேர் மட்டும் தான் எங்க வீட்டுக்கு வந்தாங்க. பிக் பாஸ் முடிந்ததும் எல்லோரும் பப்புக்கு போனாங்க பல பேருடைய ஃபங்ஷனுக்கு போனாங்க. ஆனா என்னுடைய அப்பாவின் இறப்புக்கு யாரும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. பிக் பாஸ் வீட்டிற்கு போகும் போது எங்க அப்பா ரொம்பவும் பெருமையா என்னுடைய பொண்ணு தைரியமா இருக்கான்னு பேசிக்கிட்டு இருந்தாரு.
ஆனா நான் வெளியே வந்து பார்க்கும்போது அவர் உயிரற்ற உடலை தான் பார்த்தேன். அவர் கோயிலுக்கு போயிட்டு வரும்போது ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. உடனே அவருடைய உயிர் பிரிந்து விட்டது. அந்த நேரத்திலும் எனக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருந்தது. அது என்னை மேலும் வேதனையில் ஆழ்த்தியது. என் கையில் அன்றுதான் போனை தந்தார்கள்.
அப்பா இறந்த துக்கத்தில் நான் இருக்கிறேன் அந்த நேரத்தில் ஒரு சிலர் எனக்கு போன் பண்ணி கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு பேசலாம் என்று நான் போனை எடுத்தால் அங்கே எனக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் நான் விளையாடியது பிடிக்காமல் பலர் தவறாக கமெண்ட் போட்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் நான் செத்துப் போய் விடலாமா என்று கூட நினைத்தேன் என்று அனிதா சம்பத் கண்ணீரோடு பேசியிருக்கிறார்.
-
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications