இவங்கதான் டைட்டில் வின்னர்!? பணப்பெட்டியை அவங்க தான் எடுப்பாங்க! ரகசியத்தை லீக் செய்த நடிகை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இன்று பணப்பெட்டி டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.
அதில் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் ஆக போகிறார்கள்? அதுபோல யார் பணப்பெட்டியை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவு குறித்து முன்னாள் போட்டியாளரான சனம் ஷெட்டி பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அர்ச்சனா அல்லது தினேஷ் தான் தேர்வார்கள் என்றும் பணப்பெட்டியை விசித்திரா தான் எடுப்பாராக இருக்கும் என்றும் சனம் கூறி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று 93-வது நாளில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீசனில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். அதுபோல டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் முடிவடைந்து கடந்த வாரத்தில் விஷ்ணு நேரடியாக இறுதி போட்டி நிகழ்ச்சிக்கு போகும் போட்டியாளராக தேர்வாகி இருக்கிறார்.
அதை தொடர்ந்து மீதமிருக்கும் 7 போட்டியாளர்களும் இந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பணப்பெட்டி டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே ஒரு லட்சம் ரூபாயோடு பணப்பெட்டி போட்டியாளருக்காக காத்திருக்கிறது.
இந்த வாரம் யார் பணத்தை தூக்கி கொண்டு வெளியே போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும் இருக்கிறது. இந்த டாஸ்க் தொடங்குவதற்கு முன்பு நேற்றைய பொழுதிலே முழுக்க முழுக்க பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லா போட்டியாளர்களும் பணப்பெட்டியை யார் தூக்கப் போகிறார்கள் என்று தான் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை ரிவியூ வரும் நிலையில் இந்த சீசனில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் யார் யாரெல்லாம் பைனலுக்கு போவார்கள் என்று தன்னுடைய அனுமானத்தை twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் என்னுடைய கருத்துப்படி பைனல் லிஸ்ட் ஆக முதல் இடத்தில் விஷ்ணு, மணி, அர்ச்சனா, தினேஷ், மாயா என 5 போட்டியாளர்களும் போவார்கள். அதில் இந்த வாரத்தில் விஜய் வர்மா மற்றும் பூர்ணிமா என இரண்டு பேரும் இந்த வார எவிக்ஷனில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் யூகிக்கப்படுகிறது. அது போல பணப்பெட்டியை விசித்திரா தான் தூக்கிக்கொண்டு வெளியேறுவார் என்று எனக்கு தோன்றுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த சீசனின் டைட்டில் வின்னராக அர்ச்சனா அல்லது தினேஷ் இருப்பார்கள் என்று எனக்கு தோணுகிறது. மாயா பூர்ணிமா பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது அன் பேர் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருவதால் இதுதான் நடக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது என்று சனம் கூறியிருக்கிறார். ஒருவேளை இதுதான் பைனலாக நடக்கப் போகிறதா என்று ரசிகர்கள் குழப்பத்தோடு காத்திருக்கிறார்கள்.
அதுபோல ஏற்கனவே ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் எதிர்பார்த்தது கடைசி நேரத்தில் நடப்பது கிடையாது. அதனால் கடைசி நேரத்தில் மாயா டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் அறிவித்து விடுவாராக இருக்குமோ என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.. அதுபோல ஏற்கனவே சனம் ஷெட்டி கலந்து கொண்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் சனம் அதிக நாட்கள் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசி நேரத்தில் சனத்தை திடீரென்று எவிக்ஷன் காரணம் காட்டி வெளியே அனுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அப்போது கூட பிக்பாஸ் குறித்து அதிகமான ரசிகர்கள் திட்டி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது சனம் அதையெல்லாம் மறந்து மக்கள் கருத்துபடி பிக் பாஸில் நடக்கும் என்று கூறியிருக்கிறாரே? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று ரசிகர்கள் கலாய்த்து கமாண்டுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications