ஒன்றுமில்லாத பிரச்சனையை ஊதி பெருசு பண்ணுவது யாரு...அட எல்லாரும் ஒருவரையே டார்கெட் பண்றாங்களா
சென்னை: பிக்பாஸ் டாஸ்க் என்கிற பெயரில் புதுவிதமாக கொளுத்தி போட்டுள்ளது.
பிசிக்கல் விளையாட்டு தான் சுறுசுறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தற்போது மீண்டும் அதிர்ச்சி ஏற்படுகின்ற மாதிரியே டாஸ்க் கொடுத்துள்ளது.

புதுவித ஐடியா
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கான ஆர்வத்தை கூட்ட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படிதான் இந்த புதுவித டிக்கெட் டூ பினாலே வைத்துள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைத்து போட்டிகளையும் சமாளித்து தன்னுடைய திறமையால் இந்த டிக்கெட்டை ஜெயிக்க வேண்டும் என்று யோசித்து இருக்கும் நிலையில் இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பிக் பாஸின் கணிப்பு
இதுவரைக்கும் எங்கள் வீட்டில் கார்த்திகை என்று சந்தோசமாக என்ஜாய் பண்ணி கொண்டிருந்த போட்டியாளர்கள் தற்போது அடுத்த போட்டியாளர்களின் மீது வெறியோடு விரோதத்தை வளர்த்து வருகிறார்கள். போட்டியாளர்களுக்குள் பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டால் தான் அங்கே தினமும் பஞ்சாயத்து நடைபெறும் என்பதை பக்காவாக பிக்பாஸ் புரிந்து வைத்துக் கொண்டு விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படிதான் நடந்துகொண்டு வருகிறார்கள்.

புது டாஸ்க்
நேற்றைய எபிசோட்டில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் இதுவும் விளையாட்டு ஸ்டேட்டர்ஸி தான் என்று பலருக்கும் புரிந்து போய் விட்டதாம். அந்த வகையில் இன்று பிக்பாஸ் புதுவிதமாக கொளுத்தி போட்டுள்ளது. இதுவரைக்கும் ஒன்றுமில்லாத பிரச்சனைகளை இந்த வீட்டிற்குள் ஊதிப் பெரிது பண்ணும் போட்டியாளர் யார் என்று தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. இதில் ராஜு பிரியங்காவை டார்கெட் செய்து தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
Recommended Video

அடுத்த கட்டத்தை நோக்கி யார்
ராஜுவை தொடர்ந்து சஞ்சீவ் பிரியங்கா தனக்குத்தானே டென்ஷனாகி விடுறாங்க என்று குறை கூறி இருக்கிறார். அடுத்ததாக பிரியங்கா சிபியின் மீது பலூனை தூக்கி எறிய சிபி காண்டாகி இருக்கிறார். எனக்கு வேற வழி இல்லை என்று அவர் சொல்லி முடித்திருக்கிறார். இதில் கடைசியாக இடத்தில் இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதில் இரண்டு போட்டியாளர்கள் இந்த டெஸ்டில் இருந்து வெளியேறி மீதமுள்ள 3 போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள்.












Click it and Unblock the Notifications