Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமீர்- பாவனி கல்யாணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? விளக்கம் கொடுத்த பிக் பாஸ் ஐசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருக்கும்போது காதலித்து வந்த அமீர் மற்றும் பாவனி ஜோடிக்கு நேற்று பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் அமீருக்கு உறவினராக இருந்த பிக் பாஸ் ஐசுவின் குடும்பம் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் ஐசு முதல் முறை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக டான்ஸ் மாஸ்டர் அமீர் கலந்து கொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பாவனியை காதலிப்பதாக பல இடங்களில் பேசி இருந்தார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கண்டன்ட் வருவது போல இதுவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுடைய காதல் தொடர்ந்து வந்தது.

Vijay TV Bhavani Priyanka

நான்கு வருட காதல்

ஆரம்பத்தில் அமீருடைய காதலை பாவனி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டு வெற்றி பெற்றதால் தன்னுடைய காதலை பாவனி சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு நான்கு வருடங்களாக இந்த ஜோடி காதலர்களாக வலம் வந்தனர்.

அமீர் சொன்ன வார்த்தை

அதுபோல அமிர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தனக்கு டான்ஸ் மாஸ்டராக உருவாவதற்கு உதவி செய்தது அஷ்ரப் என்பவரின் குடும்பம் தான், அஷ்ரப் அவர்களுடைய இரண்டு குழந்தைகள் என்னிடம் டான்ஸ் கற்றுக்கொள்ள வந்தார்கள். அந்த நேரத்தில் என்னுடைய அம்மாவை சிலர் கொலை செய்து விட்டதால் நான் தனியாக தவித்துக் கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு தங்குவதற்கு வீடு தந்து டான்ஸ் ஸ்கூல் நடத்துவதற்கும் தன்னுடைய வீட்டிலேயே ஒரு இடத்தை அமைத்து தந்தார்கள், அவருடைய குடும்பத்தினர் நான் அவர்கள் வீட்டில் தங்குவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக அவருடைய சொந்த குடும்பத்தினர் எல்லாரையும் ஒதுக்கி வைத்தார்கள், நான் இன்று இந்த அளவிற்கு வந்ததற்கு காரணம் அஷ்ரப் குடும்பத்தினர் தான் என்று பேசி இருந்தார்.

Vijay TV Bhavani Priyanka

ரசிகர்களின் கமெண்ட்

அதுபோல அமீருக்காக அஷ்ரப் குடும்பத்தினர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அஷ்ரப் என்பவரின் இரண்டு மகள்களும் ஏற்கனவே சில டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல அஷ்ரப்பின் மூத்த மகள் ஐசு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியதை பலரும் பாராட்டி இருந்தனர். அடுத்த சீசனில் அஷ்ரப் குடும்பத்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

Vijay TV Bhavani Priyanka

விளக்கம் கொடுக்காத அமீர்

அதுபோலவே பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் ஐசு கலந்து கொண்டார். ஐசு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பாவனி மற்றும் அமீர் குடும்பத்தோடு பல புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் ஐசு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு நிக்சனோடு நெருங்கி பழகி வந்தது சமூக வலைத்தளத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் அமீர் ஐசுக்கு சப்போர்ட்டாக எந்த போஸ்ட்டும் போடவில்லை. இது அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது.

ரசிகர்களின் கேள்விகள்

அதற்குப் பிறகு ஐசு குடும்பத்தோடு அமீர் எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் நேற்று அமீர் மற்றும் பாவனியின் திருமணம் நடைபெற்றது. அப்போது அஷ்ரப் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் சோசியல் மீடியா பக்கங்களில் அவருக்கு உதவி செய்த குடும்பத்தினரை மறந்துவிட்டார், திருமணத்திற்காவது கூப்பிட்டு இருக்க வேண்டும் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Vijay TV Bhavani Priyanka

ஐசுவின் விளக்கம்

அதுபோல ஐசு தன்னுடைய அம்மா மற்றும் சகோதரியோடு டான்ஸ் ஆடி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிலும் நீங்கள் ஏன் அமீர் கல்யாணத்திற்கு போகவில்லை என்ற கேள்விகள் அதிகமாக இருந்து வந்தது. இதனால் ஐசு விளக்கம் கொடுத்து கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதில், நாம் இங்கே நம் வேலைகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போது தவறான எண்ணங்களையும், தவறான தீர்ப்புகளையும் பெற்றுக் கொள்வது மிகவும் கடினம்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

நாங்களும் மனிதர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு கதையின் மறுபக்கத்தை பற்றி வெளிப்படையாக பேச விரும்பினால் நம்மால் முடியும். ஆனால் நாம் பேசாமல் இருக்க விரும்புகிறோம் எனவே உங்களுக்கு தெரியாத ஒன்றைப் பற்றி கருத்து தெரிவிக்க வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் தயவு செய்து அடுத்தவர்களுடைய மனநிலையையும் புரிந்துகொண்டு நடப்பீர்கள் என்று நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.

பர்சனல் பிரச்சனை

அதுபோல இன்னொரு கமெண்டில், "சமீப காலமாக தனிப்பட்ட விஷயங்களில் கருத்து தெரிவிப்பது எனக்கு பிடிக்கவில்லை. உங்கள் மனதையும் கேள்விகளையும் நான் உண்மையில் புரிந்து கொள்கிறேன். ஆனால் அனைவருக்கும் சில பர்சனல் விஷயங்கள் இருக்கும் என்பதை நீங்கள் மதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒருவருக்கொருவர் அன்பாக இருப்போம். அனைவருக்கும் தடைகள் உள்ளன. ஒரு காலத்தில் மின்னிய அனைத்தும் தங்கம் அல்ல, வாழ விடுங்கள்" என்று கூறி இருக்கிறார். இதனால் இவர்கள் குடும்பத்திற்குள் பிரச்சனை இருக்கிறது என்பது பலருக்கும் புரிகிறது. அதுபோல ஐசுவின் கமெண்ட்டுக்கு பலரும் அவருக்கு சப்போர்ட் செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+