ஹிந்தி பிக்பாஸில் கதறி அழும் ஸ்ருதிகா.. ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்.. கணவர் வெளியிட்ட பதிவு
சென்னை: பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனில் போட்டியாளராக இருக்கும் ஸ்ருதிகா நேற்றைய எபிசோடில் தன்னுடைய குடும்பத்தை பற்றி சில விஷயங்களை சக போட்டியாளர்களிடம் சொல்லி அழுது இருக்கிறார். இந்த வீடியோவை அவருடைய கணவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
ஸ்ருதிகா நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளும்போதுதான் சொல்லி இருந்தார். ஒரு சிலர் வெளியே எப்போதும் சிரித்த முகமாக கலகலவென இருப்பார்கள் ஆனால் சின்ன பிரச்சனைகளுக்கும் அதிகமாக உடைந்து போய் அழுது விடுவார்கள்.

எந்த அளவிற்கு வெகுலியாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு சென்டிமென்ட் ஆகவும் வீக்காக இருப்பவர்களை நாம் அதிகமாக பார்த்து இருப்போம். அதுபோலத்தான் இப்போது ஸ்ருதிகாவின் செயல்பாடு இருக்கிறது. ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் எந்த தமிழ் நடிகையும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கிடையாது.
ஸ்ருதிகா தான் முதல்முறையாக கலந்து கொண்டு இருக்கிறார். முதல் நாள் இவருடைய பேச்சை பார்த்ததும் பலர் இவர் நடிக்கிறார் போலியாக இருக்கிறார் என்று கமெண்ட் கொடுத்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய இயல்பான கேரக்டரை ரசிகர்கள் புரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். அதனால் இவருக்கு அங்கு பாசிடிவ் கமெண்ட்ஸ் வர தொடங்கி இருக்கிறது.
இந்த சீசனில் டைட்டில் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்ருதிகா நடவடிக்கைகளை பார்த்து உள்ளிருக்கும் ஒரு சிலர் இவர் மீது கோபத்தை அவ்வபோது காட்டி வருகிறார்கள். நேற்றைய எபிசோடில் கூட பிக் பாஸ் ஸ்ருதிகாவை பார்த்து இந்த வீட்டின் செல்ல பிள்ளையே ஒரு இடத்தில் அமைதியாக இருங்க, என்று சொல்லி இருந்தார்.
அதுபோல இந்த வார நாமினேசன் பற்றியும் ஸ்ருதிகாவை பிக் பாஸ் பேச சொல்லி இருந்தார். இதனால் அங்கிருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் இவங்களை மட்டும் எதுக்காக வீட்டின் செல்லபிள்ளை என்று சொல்லுறாங்க? இவ கொஞ்சி கொஞ்சி பேசறதால இவ செல்லப்பிள்ளை ஆகிடுவாளா? என்று திட்டி இருந்தார்கள். அந்த காட்சிகளும் வெளியாகி இருந்தது.
அதுபோல ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னொரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஸ்ருதிகா அழுது கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார். நான் அர்ஜுனை காதலிக்கும் விஷயம் என்னுடைய குடும்பத்திற்கு தெரிய வந்ததும் எங்க கல்யாணத்துக்கு சமாதிச்சிட்டாங்க. ஆனா எங்களை விட அர்ஜுன் வீட்டில் ரிச் ஆனவங்க.
அதனால் எங்க அப்பா என்னுடைய கல்யாணத்திற்கு அவர் இத்தனை வருடங்களா சேமித்து வைத்திருந்த எல்லாத்தையும் செலவு பண்ணிட்டாரு. என்னுடைய அண்ணன் அது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனக்கு எதுவும் வைக்காமல் அவளுக்கே எல்லாத்தையும் செலவு பண்ணுறீங்களேன்னு அவர் பிரச்சனை பண்ணி இருக்கலாம். ஆனா அவர் அப்படி செய்யவே இல்ல.
என்னுடைய அம்மாவும் அப்பாவும் எனக்காக தான் அவங்களுடைய எல்லா பணத்தையும் செலவு செஞ்சாங்க. இப்போ நான் அவங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன் என்று கண் கலங்கி அழுதிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ஒரு சிலர் ஸ்ருதிகாவின் குடும்பத்தினரை பாராட்டி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் குடும்பத்தை பிரிந்திருக்கும் போது தான் அதோட அருமை எல்லாம் நினைவிற்கு வருகிறதா என்று கலாய்த்து கமெணட் போட்டு இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லோருமே அதிகபட்சமான சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் நாட்டைக் காக்க போருக்கு போனது போல எதனால் இந்த போட்டியாளர்கள் இப்படி அழுது கொண்டிருக்கிறார்கள்? நூறு நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று தானே இவர்கள் போனார்கள்! பிறகு ஏன் குடும்பத்தை மிஸ் பண்ணுகிறேன் என்று அழுகிறார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications