ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருதிகாவை சுற்றி நடக்கும் துரோகம்.. நட்பை நம்பி ஏமாந்துட்டாங்களே
சென்னை: ஹிந்தி பிக் பாஸ் 18 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஸ்ருதிகா நட்பு என்று நம்பிக் கொண்டிருந்த சில போட்டியாளர்கள் அவரை ஏமாற்றிய வேதனையில் அழுது இருக்கிறார். அந்தப் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே சண்டைகள் அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் சுவாரஸ்யமான காட்சிகளும் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகா இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு போவதற்கு பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் ஜெயித்தவர் தான். அந்த நிகழ்ச்சியில் கூட தான் செஃப் என்பதை தாண்டி இவர் ஒரு கோமாளி போல தான் எப்போதும் ஜாலியாக கலகலப்பாக பேசிக்கொண்டே இருப்பார். அது போல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதுவே அவருக்கு சில நேரங்களில் வினையாகவும் வந்துவிடுகிறது.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு விபின் நல்ல நண்பராக இருந்தார். ஆனால் அவருக்கும் ஸ்ருதிகாவிற்கும் சில வாரங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் தான் இப்போது பிரச்சனைகள் அதிகமாக முட்டிக்கொண்டு வருகிறது. அதுபோல ஸ்ருதிகா கரண் மற்றும் சின்னு என்ற இரண்டு போட்டியாளர்களிடமும் ரொம்பவும் நட்பாக இருக்கிறார்.

இவர்கள் எனக்காக எப்போதும் சப்போர்ட்டாக இருப்பார்கள் இந்த நிகழ்ச்சியை தாண்டியும் இவர்கள் எனக்கு துணையாக இருப்பார்கள் இவர்களோடு என்னுடைய நட்பு தொடரும் என்று பல இடங்களில் பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் கூட சின்னு சக போட்டியாளர்களிடம் சண்டை போட்டு தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் போது அவருக்கு ஸ்ருதிகா மட்டும்தான் ஆறுதலுக்கு போயிருந்தார்.
ஆனால் அதை எல்லாம் மறந்து இந்த வாரத்தில் கரண் மற்றும் சின்னு இருவரும் ஸ்ருதிகாவை உதறி தள்ளி இருக்கிறார்கள். இன்று ஒரு ப்ரோமோ வந்து இருக்கிறது. அதில் ஸ்ருதிகா ரொம்பவும் அழுது கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் உள்ளே இருக்கும் சில்பா மேம் ஸ்ருதிகாவை வைத்து கிண்டல் செய்து இருக்கிறார்.

அவர் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கிறார். அதுபோலத்தான் இப்போதும் அவர் கிண்டல் செய்ய அவரோடு சேர்ந்து கரண் மற்றும் சின்னு இருவரும் சிரித்திருக்கிறார்கள். அதை தெரிந்து கொண்ட ஸ்ருதிகா நான் உங்களை இதுவரையும் என்னுடைய பெஸ்ட் நண்பர்கள் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் நீங்க எனக்காக நிற்காமல் என்னை அசிங்கப்படுத்தி சிரிக்கிறீர்கள் என்று சொல்ல அதற்கு கரண் உன்னை எனக்கு எத்தனை நாளா தெரியும்? 40 நாட்களுக்கு முன்பு நீ யாருன்னு எனக்கு தெரியாது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாம எப்படி இருப்போம்னு தெரியாது. இந்த நிகழ்ச்சியில் இருக்கிறோம் என்றுதான் பழகிக் கொண்டிருக்கிறோமே தவிர நமக்குள் எதுவும் கிடையாது என்று சொல்லி விடுகிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ருதிகா மனம் உடைந்து அழுது இருக்கிறார். ஸ்ருதிகா ரொம்பவும் வெகுளியாக இருப்பதால் எளிமையாக எல்லாரையும் நம்பி விடுகிறார். அந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு தான் இன்று ஸ்ருதிகா அழுது கொண்டிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications