கழுத்தில் கைவைத்து ... அப்படியே தலையை சாய்த்து மயக்கும் ஜூலி...!
சென்னை : பொன்னகை எல்லாம் எனக்கு எதுக்கு இந்த புன்னகையே போதும் என கூறும் வகையில், தலையை சாய்த்து சிலிர்க்கும் சிரிப்பை சிந்த விட்டுள்ளார் ஜூலி.
மாடர்ன் உடையில் தலைமுடியை ஃப்ரீயாக விட்டு, பார்வையாலேயே பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் வைரலாகியுள்ளன.
வெற்றியைப் பற்றி நான் ஒருபோதும் கனவு கண்டதில்லை . இதே புன்னகையுடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறுகிறார் ஜூலி.

சூப்பர் அங்கீகாரம்
திடீரென ஒருவர் எதார்த்தமாக செய்யும் ஒரு சில செயல்கள் தான் அவர்களுக்கு பெரும் அங்கீகாரத்தை கொடுத்துவிடும் .அந்த மாதிரி தான் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக துணிச்சலாகக் குரல் கொடுத்து யாருடா இந்த பொண்ணு என பலரும் தேடி பார்க்கும் அளவில் பிரபலமான ஜூலி .அப்போ செவிலியராக தன்னுடைய வேலையில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய பாரம்பரியம் முக்கியம் என முழக்கமிட்டவர்.

ஜல்லிக்கட்டு பிரபலம்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் .ஆனால் பிரபலமாக மாறியதும் இவருக்கு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்தி சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட வேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .ஆனால் இவர் நினைத்தது வேறு அங்கு நடந்தது வேறு.

பேரும் புகழும்
இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் இருந்த பேரையும் புகழையும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் காணாமல் போய்விட்டது. இவருக்கும் ஓவியாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு ,இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதங்களை பார்த்த ரசிகர்கள் இவர் மீது கோபம் கொள்ள ஆரம்பித்துவிட்டனர் .ஆனால் ஒரு சிலருக்கு இப்ப வரைக்கும் அதே கோபம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இவரும் ஓவியாவும் நண்பர்களாகத்தான் இருந்து வருகின்றனர்.

மாடலிங்கில் கவனம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பார்த்துவந்த செவிலியர் பணியை விட்டுவிட்டு மாடலிங்கில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டார் .தற்போது வரைக்கும் பலர் விளம்பர மாடலாக இருந்து வருகிறார் .அதனால் அடிக்கடி போட்டோக்களை எடுத்து வருகிறார் .மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் தற்போது இவர் கலந்து கொள்ளுவதால் இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ஜோடிகளில் கலக்கல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் .ஆனால் பிரபலமாக மாறியதும் இவருக்கு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்தி சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட வேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .ஆனால் இவர் நினைத்தது வேறு அங்கு நடந்தது வேறு.

Click it and Unblock the Notifications