தினேஷோடு சேர்வதற்கு வாய்ப்பு இல்லையா? நடிகை ரச்சிதா வெளியிட்ட எமோஷனல் பதிவு.. காரணம் இதுதானா?
சென்னை: நடிகை ரச்சிதா அவருடைய கணவர் தினேஷ் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வரும் நிலையில் இன்று ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீர் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பட்டவங்களுக்கு தான் அதோட வலி தெரியும்.. மக்கள் வலி ஏற்படுத்தியவர்களை பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று எமோஷனலாக ரச்சிதா கூறி இருக்கிறார்.

அதே நேரத்தில் ரச்சிதா இந்த அளவிற்கு வருத்தப்படுவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சின்னத்திரையில் பல நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர்கள் தான் தொடர்ச்சியாக பல வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஜோடிகளின் வரிசையில் தான் ரச்சிதா மற்றும் தினேஷ் தம்பதி இருந்து வந்தனர். முதல் சீரியலிலே இவர்கள் ஒன்றாக நடித்து நண்பர்கள் ஆகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தங்களுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கும் ஆரம்ப காலகட்டத்திலேயே இவர்கள் திருமண வாழ்க்கையில் நுழைந்து இருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியாக பல வருடங்களாக திருமண வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் தான் சில வருடங்களுக்கு முன்பு ரச்சிதா மற்றும் அவருடைய கணவர் தினேஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரச்சிதா கலந்து கொண்டிருந்தார். அப்போது ஆரம்பத்திலிருந்து தினேஷ் ரச்சிதாவிற்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. வெளியே வந்த பிறகு மீண்டும் இவர்களுடைய வாழ்க்கை தனித்தனியாக தான் போய்க்கொண்டிருந்தது. அதே நேரத்தில் தினேஷ் தன்னை போனில் மெசேஜ் செய்து மிரட்டுவதாக ரச்சிதா கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். இப்படியாக இருந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக தினேஷ் அறிமுகமாகி இருக்கிறார்.
அவர் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய மனைவி தன்னிடம் சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றும் தன்னுடைய மனைவிக்கு பிக்பாஸ் டைட்டில் ரொம்பவே பிடிக்கும் அதனால் அவருக்காக நான் இதை வாங்கி அவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து வந்தார். கதை சொல்லும் டாஸ்க்கில் கூட தான் கடந்த மோசமான காலகட்டம் என்றால் தன்னுடைய மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு அனுபவித்த காலகட்டம் தான் என்று தினேஷ் கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் இன்று ரச்சிதா தன்னுடைய instagram ஸ்டோரியில் சில வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார். அதில்," எல்லா மக்களும் வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இந்த அளவிற்கு உறுதியான முடிவில் இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு வலியை அனுபவித்து இருப்போம் என்பதை பற்றி யாரும் யோசிக்கவே இல்லை" என்று கூறி, "பட்டவங்களுக்கு தானே அதோட வலி தெரியும்" என்று கூறியிருக்கிறார்.
இதனால் தினேஷ் ஆசைப்பட்ட மாதிரி இனி ரச்சிதா தினேஷோடு சேர்ந்து வாழ போவதில்லை. அதனால்தான் தினேஷ் குறித்து மறைமுகமாக ரச்சிதா இப்படி கூறிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நண்பர்கள் பலரும் ரச்சிதாவும் தினேஷும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதுபோல ரசிகர்களும் அதையே விரும்புவதால் ரச்சிதா இப்போது இப்படி ஒரு பதில் மூலம் பலருக்கும் இதற்கு மேல் இந்த விஷயத்தை பேச வேண்டாம் என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாரா? என்றும் கேள்வி வருகிறது.












Click it and Unblock the Notifications