மீண்டும் பிக் பாஸ்க்குள் பிரதீப்.. பார்த்ததும் மாயா கொடுத்த ரியாக்ஷன்.. அதுக்கு இப்படி ஒரு விளக்கமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் இந்த சீசனில் நடந்த நிகழ்வுகள் சிலவற்றை குறும்படமாக வெளியிட்டிருந்தார். அப்போது பிரதீப்புடைய கிளிப்ஸ் வரும்போது மாயா கொடுத்த ரியாக்ஷனை பார்த்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த சீசனில் டைட்டில் வின்னராக பிரதீப் தான் இருப்பார் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாயா மற்றும் அவரோடு சேர்ந்த சில போட்டியாளர்கள் உரிமை குரல் தூக்கி கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாகத்தான் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த ஆக்ஷன் பைட் என்ற ஒரு தலைப்பில் உள்ளே நடந்த சண்டைகள் அனைத்தும் வீடியோவாக காட்டப்பட்டது அப்போது பிரதீப் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருக்கும் சண்டை காட்சிகள் எல்லாம் வந்த போது மாயா அதை பார்த்து கடுமையாக தன்னுடைய முகத்தை மாற்றி வைத்திருந்தார். இதை வெளியிட்டு ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

Bigg Boss released a short film seeing Mayas reaction when Pradeeps clips come

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக இதன் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் இந்த வாரம் கிராண்ட் பினாலே வாரத்தை கொண்டாடுவதற்காக வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று அட்சயா மற்றும் அனன்யா இருவரும் ஆரம்பத்தில் வீட்டிற்குள் வந்திருந்தனர். அந்த நேரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவித்திருந்தார். அதாவது மாலை 6:00 மணிக்கு பிறகு இங்கு குறும்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல முதலில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சிறப்பான சில ஹைலைட் வீடியோக்கள் பிளே செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆக்சன் வீடியோஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரதீப் கூல் சுரேஷிடம் சண்டையிட்டது, அதுபோல மாயா மற்றும் பிரதீப்புடைய சண்டை பிறகு பிரதீப் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்று விதிமீறலில் ஈடுபட்டது போன்ற கிளிப்சுகள் வீடியோவாக ஒளிபரப்பாக அதைப் பார்த்து அதுவரைக்கும் சிரித்துக் கண்டிருந்த மாயா முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்.

இப்போது இந்த புகைப்படங்களும் வீடியோவும் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதுபோல இந்த சீசனில் தான் எப்படியும் ஜெயிக்க மாட்டேன் என்று மாயா அனன்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணத்தையும் மாயா சொல்லி இருக்கிறார். அதாவது நான் இந்த வீட்டிற்குள் எல்லாமே நெகட்டிவாக தான் செய்து இருக்கிறேன். அதனால் மக்கள் மத்தியில் இப்போது நான் தான் வில்லியாக இருப்பேன்.

Bigg Boss released a short film seeing Mayas reaction when Pradeeps clips come

ஆனால் இங்கே இருக்கும் ஒரு போட்டியாளர் கேமரா முன்பு தான் என்ன செய்தாலும் பதிவு செய்து கொண்டே இருக்கிறார். அவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னராக வேண்டும் என்பதற்காக அவர் இப்படி ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதை பத்தி எனக்கு கவலை இல்லை. எனக்கு இந்த சீசன் டைட்டில் எல்லாம் பெரிய விஷயமே இல்ல. நான் இந்த சீசன் டைட்டிலை ஜெயிக்கவில்லை என்றாலும் வெளியே போனால் எனக்கு 5 வேலை இருக்கிறது.

ஆனால் டைட்டில் ஜெயிக்கிறவருக்கு என்ன தெரியும் என்று நக்கலாக பேசியிருந்தார். இந்த வீடியோவும் இப்போது இணையத்தில் பரவி வரும் நிலையில் பிக் பாஸ் செய்த ஒரு மோசமான வேலையை குறித்தும் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். அதாவது நேற்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் புகைப்படம் அடங்கிய ஒரு பேனர் வைக்கப்பட்டிருக்கிறது.

அதில் பிரதீப் மற்றும் பவா செல்லதுரையின் புகைப்படத்தை தவிர மீதம் இருக்கும் எல்லா போட்டியாளர்களின் புகைப்படங்களும் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் இதைக் குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+