பிக் பாஸ் 8: ரவீந்தர் சிக்கிட்டாரா? "நெற்றியில்" ஒட்டிய ரஞ்சித்.. பரபர பிக்பாஸ் வீடு.. Bigg Boss 8
சென்னை: பிக்பாஸ் வீட்டில் தினம் தினம் பரபரப்புகள் நடந்து, ரசிகர்களையும் திணறடித்து கொண்டிருக்கிறது.. அந்தவகையில், இன்று வெளியாகியிருக்கும் புரோமோக்களை பார்க்கும்போது, பிக்பாஸ் வீட்டில் "சம்பவம்" நிச்சயம் இருக்கு என்றே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த முறை, பிக்பாஸ் சீசனுக்கு டிஆர்பி இல்லாமல் போய்விடுமோ என்ற கலக்கம் விஜய் டிவிக்கு இருக்கவே செய்தது.. அதனால்தானோ என்னவோ, நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலிருந்தே பரபரப்புகளை அள்ளிவீசிவிட வேண்டும் என்பதில் பெரும் சிரத்தைமேற்கொண்டு வருகிறது.

டிஆர்பி: ஆனால் டிஆர்பிக்காக செய்யும் ஒவ்வொரு விஷயமும் பிக்பாஸுக்கே மைனஸாகிவிடுவதையும் பார்க்க முடிகிறது.. முதல் 24 மணி நேர எவிக்ஷன் முதல் பிராங்க் காமெடி வரை, வித்தியாசமாக செய்வதாக நினைத்து கொண்டு, ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்களை விஜய் டிவி பெற்று கொண்டிருக்கிறது. அதேசமயம் டிஆர்பியையும் ஒரே மாதிரியாக தக்க வைத்து வருகிறது.
அந்தவகையில், இன்றைய தினம் வெளியாகியிருந்த புரமோவில் ரவீந்தர்தான் ஹைலைட்டாகி இருக்கிறார்... இன்றைய டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் யார் ஒரிஜினலாக இருக்கிறார்கள்? யார் போலி வேஷம் போடுகிறார்கள்? என்று சொல்ல சொல்கிறார்கள். இதில், ரஞ்சித் ரவீந்தருக்கு தான் அதிக ஓட்டுக்கள் விழுந்துள்ளது.. ஆனால், இந்த விவகாரமே சண்டையாகவும் வெடிக்கிறது.
நாமினேஷன்: நாமினேஷனில் இருக்கும் 3 பேர் எனக்காக தான் இதை செய்தோம் என்று சொன்னால் அது எமோஷன் என்கிறார் ரஞ்சித்.. ரவீந்தர் ஆடிய பிராங்க் கேமை எதிர்த்து ரஞ்சித்யும் கேள்வி கேட்கிறார்..
ஆனால், ரவீந்தரோ, "நான் ஆடியது கேம் கிடையாது. இந்த வீட்டில் தர்ஷாவும் தர்ஷிகாவும் ஆடியது தான் கேம்.. நான் என்னுடைய கேமை ஆடறேன்.. இதில் இத்தனை பேருக்கு எப்படி கோபம் வரலாம்? என்று ரவீந்தர் கோபமாக கேள்வி எழுப்புகிறார்..
அதற்கு ரஞ்சித் "எதுக்காக என்னுடைய பெயரை யூஸ் பண்ணீங்க? உங்களுடைய கேமை நீங்கள் ஆடுங்க. ஆனால் அதில் ஏன் என்னுடைய பெயரை இழுக்கறீங்க" என்று கேள்வி எழுப்புகிறார்.
ரவீந்தர்: இந்த கேள்வியும் ரவீந்தருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.. உடனே ஆவேசத்துடன் பேச ஏதாவ முயல்கிறார்.. பிறகு தன்னுடைய வாயை மூடிக்கொள்கிறார். இதெல்லாம் தான் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இப்படி ஆளுக்கொரு பக்கம் எகிறி எகிறி கேள்வி கேட்பதுதான் புரோமோவில் வெளியாகியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, ரவீந்தர் பொய்யாக நடிப்பதாக அதற்கான டேக்கை அவர் நெற்றியில் ஒட்டுகிறார் ரஞ்சித் .. அவரை தொடர்ந்து பேசிய விஷாலும் அவர் பேசும் கருத்து உண்மையாக இல்லையோ என எனக்கு தோன்றுகிறது என்று கூறி நடிக்கிறார் என்பதற்கான டேக்கை அவர் நெற்றியில் ஒட்டுகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் ரவீந்தரின் ஆட்டம் ஆரம்பம் என்றே தெரிகிறது.
பரபரப்பு: ஏற்கனவே ஒருபக்கம் ஜாக்குலின் Vs சுனிதா பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.. இப்போது ரஞ்சித் Vs ரவீந்தர் இடையிலும் தகராறு வெடிக்க துவங்கியிருக்கிறது.. இதனால் பிக்பாஸ் வீடே பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கு நடுவில், நாளைய தினம் யார் வீட்டை விட்டு வெளியே செல்வார்கள் என்பது குறித்தும் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications