Bigg Boss: வாட்டர் மெலன் ஸ்டாருக்கு மூன்று கல்யாணமா? நடந்தது இதுதாங்க! திவாகர் கொடுத்த விளக்கம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, 'வாட்டர்மிலன் ஸ்டார்' எனப் பிரபலமான திவாகர் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய திருமணத் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், மதுரையில் நடந்த 'திவ்யா' திரைப்படத்தின் ஃப்ரீ ஷோ காட்சிக்குப் பிறகு, திவாகர்செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல விஷயங்களைப் பகிரங்கமாக பேசியுள்ளார்.

விழிப்புணர்வு அவசியம்
புதிய முகங்கள் நடித்து, ராஜபாண்டி இயக்கி நடித்துள்ள 'திவ்யா' படத்தை பார்த்த திவாகர், "இந்த படத்தை பார்க்கும்போது சசிகுமார் அண்ணன் எடுத்த 'நந்தன்' படம் போன்ற உணர்வு எனக்கு இருந்தது" என்று பாராட்டியுள்ளார். சசிகுமார் அண்ணன் போலவே பல சமூகச் சீர்திருத்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் ஸ்கிரிப்ட் இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, திவாகர் அதற்குத் தெளிவாக பதில் அளித்தார்: "பிக் பாஸை ஸ்கிரிப்ட் படி நடக்கும் நிகழ்ச்சி என எல்லோரும் நினைக்கிறார்கள், ஆனால் பிக் பாஸில் எந்த வித கதை விவரமும் கிடையாது. அனைவரும் என்னை இளைத்து விட்டீர்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் பிக் பாஸில் உள்ளே சென்றவுடன் எங்களை அடைத்து விடுவார்கள். அங்கு நடந்த அனைத்துமே உண்மை" என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
வீட்டு வேலைகள்
"நான் பிக் பாஸ் வீட்டில் வீட்டு வேலை கத்து கொண்டேன். சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாத என்னை பாத்திரம் கழுவுவதில் இருந்து கழிப்பறை கழுவுவது வரை அனைத்தும் கத்துக் கொண்டோம்" என்று அவர் நிகழ்ச்சியில் செய்த அலப்பறைகளையும், கற்றுக்கொண்ட விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஒரு பள்ளியில் படித்தால் கூட ஓய்வாக இருக்கலாம், ஆனால் பிக் பாஸில் உணவுக்கு தட்டுப்பாடு இருக்கும், அவர்கள் சொல்லும் வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
குழந்தைகள் அழுகை
திவாகர் வெளியேறியபோது நிறையக் குழந்தைகள் அழத் தொடங்கியதாகப் பகிர்ந்துகொண்டார். "நடிப்பு அரக்கன்" என்ற அவருடைய வசனம் சின்னக் குழந்தை முதல் பெரியவர் வரை மிகவும் பிரபலமாகிவிட்டது என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போதைக்கு பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்று சொல்ல முடியாது என்றும், புதிய போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தால் விளையாட்டு மாறலாம் என்றும் திவாகர் கூறியுள்ளார்.
திருமண சர்ச்சை மற்றும் எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பரவிய திருமண சர்ச்சைக்கும் திவாகர் தெளிவாகப் பதில் அளித்துள்ளார். "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நிறையத் தவறான தகவல்கள் சில யூடியூபர்களால் பரப்பப்படுகிறது. நான் தனிமையில் தான் இருக்கிறேன். 3 பெண்களையெல்லாம் திருமணம் செய்யவில்லை" என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பிக் பாஸிற்கு போன பின்பு தனக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதால், தன்னுடைய நல்ல பெயரை கெடுத்து போடும் விதமாக சிலர் இப்படி செய்து வருவதாகத் திவாகர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதன் பிறகு பொய்யான தகவல் வந்தால், அதைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். திவாகர் இப்போது தான் நடித்த 'திவ்யா' படத்தின் வெற்றிக்காக காத்திருப்பதாக பேசியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications