பிக் பாஸ் ராணவ் அப்பா யாரு தெரியுமா? இந்த அரசியல் பிரபலம் தான்.. மகன் பற்றி உருக்கமாக சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராணாவின் அப்பா யார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ராணா அப்பா காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரபலமாக இருந்திருக்கிறார். அதோடு குடும்ப புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பதினெட்டு போட்டியாளர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு 6 வயது காடு போட்டி அவர்கள் வந்தனர் அதில் ராணவ், ரயான், மஞ்சூரி, ரியா, வர்ஷினி, சத்யா என்ற ஆறு பேர் இருந்தனர் அதில் ரியா,வர்ஷினி, சத்யா என்ற மூன்று வயதுகாடு போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்த நிகழ்ச்சி சில வாரங்களாக பரபரப்பு ஏற்படுத்தவில்லை. ஆனால் சமீபத்தில் நேற்று நடந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
அதாவது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராணவ் ஒரு டாஸ்க் விளையாடி கொண்டு இருந்தபோது ராணவ் கைகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

அதுபோல ராணவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து பல போட்டியாளர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர். இவருக்கு எதுவும் புரியவில்லை, மந்தமாக இருக்கிறார் என்றெல்லாம் கூட முகத்துக்கு நேரே விமர்சித்தனர். அதிலும் சௌந்தர்யா ஆரம்பத்தில் இருந்தே ராணவுடன் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டு இருக்கிறது.

நேற்று ராணவ் கையில் அடிபட்டபோது கூட சௌந்தர்யா, அன்ஷிதா, ஜெஃப்ரி போன்றோர் ராணவ் நடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு உண்மையில் ராணவ்க்கு அடிபட்டு இருக்கிறது அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் என்று தெரிந்த பிறகு கூட ஜெஃப்ரி, சௌந்தர்யா அலட்சியமாக நடந்து கொண்டதை பார்க்க முடிந்தது.

ராணவ் கையில் அடிபட்டு இருப்பதை பார்த்து ஒரு சிலர் அவருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் போது கூட ஜெஃப்ரி விசிட்டிங் ஹவர்ஸ் முடிய போகிறது பார்க்கிறவர்கள் போய் பார்த்துட்டு வாங்க, இவனால டாஸ்க் நின்னு போயிடுச்சு என்று நக்கலாக பேசிக் கொண்டிருந்தார். இது குறித்து சிலர் விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் ராணவ்வின் அப்பா யார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதாவது ராணவ் அப்பாவின் பெயர் கராத்தே சந்துரு தான். அவருடைய முன்னோர்கள் பர்மாவில் இருந்து அகதிகளாக வந்திருக்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் தான் குடும்பத்தோடு இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு சந்துருவின் அப்பா சாக்கு வியாபாரம் செய்வதற்காக குடும்பத்தோடு சென்னைக்கு வந்திருக்கிறார்.

அவர் கடுமையாக உழைத்ததால் சென்னையில் ஓரளவு பொருளாதார வசதி வந்திருக்கிறது. அதுபோல சந்துருவிற்கு ஆரம்பத்திலே அரசியல் ஆர்வம் வந்ததால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வடசென்னை மாவட்ட செயலாளராக சில வருடங்கள் இருந்திருக்கிறார். அதுபோல ராணவ் வீட்டில் மூன்று குழந்தைகளாம்.

ராணவ் தான் மூத்தவராம். அவருக்கு ஒரு தம்பியும், ஒரு சகோதரியும் இருக்கிறாராம். அதுபோல ராணவ் படிக்கும்போதே நன்றாக படித்ததால் பனிரெண்டாம் வகுப்பில் 1067 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். இவர் நன்றாக படிப்பார் என்பதால் தான் அவருடைய அப்பா அவரை வழக்கறிஞராக வேண்டும் என்று கல்லூரியில் சேர்த்து இருந்தாராம்.

ஆனால் ராணவ் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவருடைய குடும்பத்தினர் அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்களாம். ஆரம்பத்தில் விஜய் சேதுபதி நடித்த இறைவி, விஜய் நடித்த மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல சமீபத்தில் தான் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறாராம்.

ஆனந்த தாண்டவம், செல்லமே படத்தை இயக்கிய காந்தி கிருஷ்ணா தான் அந்த படத்தை டைரக்ஷன் செய்திருக்கிறாராம். அந்த படம் இன்னும் இரண்டு மாதத்தில் வெளியாக இருக்கிறதாம். இது பற்றி கூட ஒரு முறையை பிக் பாஸ் வீட்டிற்குள் ராணவ் சொல்லி இருந்தார்.

அதற்கு முத்துக்குமரன் கூட ராணவை பார்த்து கிண்டல் செய்து இருப்பார். ராணவ் 10 கோடி படத்தில் நடித்து முடித்து வந்திருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ராணவிற்க்கு பிக் பாஸ் வீட்டிற்குள் அடிபட்டு இருப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று அவருடைய அப்பா சொல்லியிருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஏற்கனவே இதுபோல பொம்மை டாஸ்க்கில் ஜெஃப்ரி ராணவ் கழுத்தில் குத்தி இருந்தார்.
அப்போது ராணவ் எனக்கு கழுத்து வலிக்கிறது என்று சொன்னதை பார்த்து ராணவின் அம்மாவிற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டதாம். காரணம் ராணவ் வீட்டில் தனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் சொல்லவே மாட்டாராம். முடியாத பட்சத்தில் தான் தனக்கு வலிக்கிறது என்று சொல்வாராம்.

இதனால் தன்னுடைய மகனுக்கு எவ்வளவு வலிச்சிருந்தால் அவர் வலி இருக்கிறது என்று வெளியே சொல்லி இருப்பான் என்று அவருடைய அம்மா புலம்பிக்கொண்டே இருந்தாராம். அதுபோல சௌந்தர்யா உட்பட உள்ள சிலர் தன்னுடைய மகனை கூமுட்டை என்று திட்டுவது தனக்கு வருத்தமாக இருக்கிறது, அவனுக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும். அவ்வளவு பொறுப்பான பையன். ஆனால் அவனை இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் அவமானப்படுத்துறாங்க என்று ராணவின் அம்மாவும் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+