காதலால் பட்ட வேதனை.. நடு ரோட்டில் பாட்டிலால் தலையில் அடி.. பிக் பாஸ் சௌந்தர்யா அனுபவித்த கொடுமை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியளராக இருக்கும் சௌந்தர்யா நேற்று அவருடைய காதல் கதையை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. சிரித்த முகமாக எந்த கவலையும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வரும் சௌந்தர்யாவிற்கு பின்னாடி இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதா? என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்கள் சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஆனால் ஒரு சில போட்டிகள் எந்த வம்புக்கும் போகாமல் இருந்த இடம் தெரியாமல் அமைதியாக இருந்து விட்டு போய்விட வேண்டும் என்ற சிந்தனையோடு வருகிறார்கள். அந்த வரிசையில் எட்டாவது சீசனிலும் ஒரு போட்டியாளராக சௌந்தர்யா அறிமுகமாகி இருக்கிறார்.

முதல் நாள் விஜய் சேதுபதியின் முன்பு தன்னை பற்றி அறிமுகம் செய்யும்போது நான் மாடலாக இருக்கிறேன் ஆனால் என்னுடைய குரலுக்காக நான் பல இடங்களில் அவமானம் சந்தித்திருக்கிறேன். அதற்காக நான் மிமிக்ரி செய்வது போன்று தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று அவருடைய வேதனையை பற்றி பேசி இருந்தார்.
அதற்கு விஜய் சேதுபதி உங்களுடைய நிஜ குரலே அருமையாக இருக்கிறது என்று அவரை பாராட்டி நிகழ்ச்சிக்கு அனுப்பி இருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்குள் சென்றதுமே தர்ஷிகா அவரிடம் பொம்பள வாய்ஸில் பேசு என்ன குரல் இது என்று கேட்டது பெரும் விமர்சனத்தை சந்தித்தது. இவர் மேடையில் தன்னுடைய கஷ்டங்களை கூட சிரித்த முகமாக சொல்லியிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அவர் சந்தித்த அவமானம் இத்தனை வருடங்களாக அவர் வெளியிலே எவ்வளவு சந்தித்திருப்பார் என்பதை காட்டியது.
ஆனால் சௌந்தர்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாருடனும் அதிகமாக பிரச்சனைகளில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் ஏதாவது இந்த நிகழ்ச்சியில் செய்ய வேண்டும்.. செய்தால் தான் மக்கள் மத்தியில் நாம் தெரிவோம் என்று சின்ன சின்னதாக செயல்களை செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

சௌந்தர்யாவுக்கு தான் இந்த சீசனில் அதிகமான ஃபேன்ஸ் பேஜ் தொடங்கப்பட்டிருக்கிறது. அதோடு இரண்டு வார நாமினேஷனில் இவர் இருந்தாலும் இவர்தான் அதிகமான வாக்குகள் பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் இது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அதில் சௌந்தர்யா தான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு நபரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். முதலில் பார்த்ததும் பிடித்து விட்டது. அதனால் அந்த காதல் கல்லூரி வரைக்கும் தொடர்ந்து வந்தது. ஆனால் நான் வெளியே செல்வது நான் காதலித்த அந்த நபருக்கு சுத்தமா பிடிக்காது. வேறு யாரோடும் பேசக்கூடாது என்று சொல்வார்.
அடிக்கடி அவரிடம் நான் அடி வாங்கி இருக்கிறேன். கல்லூரி படிக்கும் நேரத்தில் நான் மாடலிங் பண்ணுறது அவருக்கு சுத்தமா பிடிக்கல. ஒரு நாள் அவருக்கு தெரியாமல் நான் ஒரு மாடலிங் போட்டோ சூட் எடுத்து இருந்தேன். அந்த புகைப்படங்களை என்னுடைய ஃபோனில் ஹைப் பண்ணி வைத்திருந்தேன். அதை ஒரு முறை அவர் பார்த்துவிட்டார். நடு ரோட்டில் வைத்து என்னை அடித்தார்.
அதற்கு முன்பு ஒரு முறை ஒரு சின்ன பிரச்சனை வந்த போது ஜாஸ் பாட்டிலை தூக்கி அடித்துவிட்டார். அதற்குப் பிறகும் நான் அவரிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன் ஆனால் போட்டோ சூட் எடுத்ததற்காக என்னை நடுத்தெருவில் வைத்து அடித்த பிறகு தான் இனி இவர் நம்மளுக்கு தேவை இல்லை என்று விலகி விட்டேன். எனக்கு என்னுடைய கேரியர் முக்கியம் என்று முடிவெடுத்தேன் என்று அழுதப்படியே சொல்லி இருக்கிறார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications