கலவரமான பிக் பாஸ் வீடு.. ராணவ்க்கு “அடி”.. இன்று ஜாக்குலினுக்கு “கடி”.. இப்படியும் பேசுவாங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜாக்குலின் காலை பவித்ரா கடித்திருக்கிறார். அதனால் மஞ்சரி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் சில நாட்களாகவே இந்த நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகளும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

bigg boss tamil 8 bigg boss 8 8

ஏற்கனவே கடந்த சனிக்கிழமை எபிசோடில் பிரபல ஓடு நிறுவனத்தின் விளம்பரத்தை நிகழ்ச்சியில் படித்ததற்காக தீபக், விஜய் சேதுபதி, மற்றும் விஜய் டிவி மீது ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்கும்போது நேற்று டாஸ்க் விளையாடிக் கொண்டிருக்கும்போது ராணவ் கையில் அடிபட்டு அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒரு சில போட்டியாளர்கள் நடிக்கிறார் என்று அவர் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட அவருக்கு உதவாமல் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்று நடந்த டாஸ்க்கிலும் சில சம்பவங்கள் அதுபோலத்தான் நடந்திருக்கிறது. அதாவது நேற்று டாஸ்க் விளையாடும் போது ஏற்கனவே ஒருவருக்கு அடிபட்டுவிட்டதால் இன்று கவனமாக விளையாடும் படி பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார்.

அதோடு கொடுக்கப்பட்ட கற்களை பாதுகாக்க வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லி இருந்தார். என்னதான் ரூல்ஸ்கள் இருந்தாலும் அதை மீறுவதும் அதில் பிரச்சனை பண்ணுவதும் தானே போட்டியாளர்களின் மனநிலையாக இருக்கிறது. அதுபோலத்தான் இன்று கூட நடந்தது.

bigg boss tamil 8 bigg boss 8 8

உள்ளிருக்கும் போட்டியாளர்களில் நான்கு அணியினரும் இரண்டு இரண்டு அணியாக ஒன்று சேர்ந்து கூட்டாக விளையாட தொடங்கி விட்டார்கள். அப்போது சில போட்டியாளர்கள் கற்கள் மேல் படுத்து கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்ததால் அடுத்த போட்டியாளர்களால் அவர்களிடமிருந்து கற்களை எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது.

இதனால் பிக் பாஸ் யாரும் கற்கள் மேல் உட்கார கூடாது, அது போல கற்களை கீழே பரப்பி வைக்க கூடாது ஒரு கற்கள் மேலே இன்னொரு கற்கள் என்று ஒய்யாரமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். அப்படி வைக்கும்போதுதான் மற்ற போட்டியாளர்களுக்கு இவர்களிடம் இருந்து பிடுங்குவதற்கு எளிமையாக இருக்கும் என்று பிக் பாஸ் சொல்லி இருந்தார்.

அதுபடி பிறகு விளையாட்டை தொடங்கி இருந்தார்கள். அப்போது ராயன் யாருக்காவது அடிபட்டுவிட்டால் உடனடியாக டாஸ்கை நிறுத்திவிட்டு அடிபட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள் வலியால் துடிக்கும் போது கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று சொன்னார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

அதற்கு ஜாக்குலின் அவரவர் விருப்பப்படி விளையாட்டை விளையாட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தொடர்ந்து விளையாடலாம். இல்லை அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறவர்கள் உதவுவார்கள் என்று சொல்லி இருந்தார். ஆனால் அவர் சொன்னது இப்போது அவருக்கே ஆப்பாக வந்திருக்கிறது.

அதாவது இப்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பவித்ராவிடமிருந்து கல்லை பிடுங்குவதற்காக ஜாக்குலின் முயற்சி செய்கிறார். அப்போது ஜாக்குலின் காலை பவித்ரா கடித்தது போல காட்டப்படுகிறது. இதை பார்த்த மஞ்சரி பவித்ரா கடிக்கிறா என்று கத்த அதற்கு பவித்ரா நான் கடிக்கல என்று சொல்கிறார்.

அப்போது ஜாக்குலின் இவ்வளவு கேவலமா விளையாடக்கூடாது என்று கோபப்பட்டு வெளியே வருகிறார். அதோடு தொடர்ந்து மஞ்சரி பவித்ரா தான் கடிச்சாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பவித்ரா நான் தெரியாமல் பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதனால் உண்மையில் பவித்ரா கடித்தாரா அல்லது மஞ்சரி தன் மீது குற்றம் சுமத்திக் கொண்டே இருந்ததால் பவித்ரா மன்னிப்பு கேட்டாரா என்று தெரியவில்லை. இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும். நேற்று கூட ராணாவிற்கு அடிபட்டபோது சௌந்தர்யா ஜாக்குலின் போன்றோர் அவன் நடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு ராணவிற்கு உண்மையில் அடிபட்டு இருக்கிறது என்று அவர் மருத்துவமனைக்கு போயிட்டு வந்த பிறகு முதலில் பவித்ரா தான் மன்னிப்பு கேட்டார். அது பற்றி அவர் சொல்லும்போது கூட உண்மையில் நான் அந்த இடத்தில் இவன் நடிக்கிறார் என்று சொல்லவே இல்ல. ஆனால் உண்மையில் அவனுக்கு அடிபட்டு இருக்கிறது என்று தெரிஞ்சதும் எனக்கு கஷ்டமா இருந்தது.

அந்த இடத்தில் அவன் நடிக்கிறான்னு சொன்னவங்க யாரும் மன்னிப்பு கேட்கல. அது அவனுக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும் என்று தான் நான் முதலில் மன்னிப்பு கேட்டேன் என்று பெருந்தன்மையாக பேசியிருந்தார். அதனால் அது போலத்தான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறாரா? இல்லை உண்மையில் கடித்தாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+