பிக் பாஸ்ல சௌந்தர்யா செய்தது ரொம்ப தப்பு.. எப்படி இப்படி பண்ணலாம்? தீபக் மனைவி ஆவேசம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தீபக்கின் மனைவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சௌந்தர்யா தீபக்கை தொட்டது தவறு என்று பேசி இருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்போடு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரி மாதத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் அதை தொடர்ந்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் அந்த நிகழ்ச்சியில் இருந்தனர்.

கடைசியில் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தில் சௌந்தர்யா தேர்வாகி இருந்தார். இதுவரைக்கும் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளை விடவும் இந்த சீசன் ஸ்பெஷலாக இருந்தது. இதுவரைக்கும் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால் எட்டாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி ரெஸ்ட் எடுக்க போவதாக அறிவித்து இருந்தார்.
அதனால் அடுத்து யார் வர போகிறார்கள் என்று எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் ரசிகர்கள் கருத்துப்படி விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதுபோல விஜய் சேதுபதி மக்கள் நினைத்த பல விஷயங்களை போட்டியாளர்களிடம் ஒவ்வொரு வாரமும் பேசுவதால் வார இறுதி நாட்கள் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.
அதுபோல இந்த சீசனில் சௌந்தர்யாவிற்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். ஆனால் அது ரசிகர்கள் கிடையாது பி ஆர் சப்போர்ட் தான் என்று சிலர் குற்றச்சாட்டு வைத்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் கூட சௌந்தர்யாவிடமும் விஜய் சேதுபதியிடம் இதே கருத்தை கூறியிருந்தனர். ஆனாலும் சௌந்தர்யா பைனல் நிகழ்ச்சியின் போது தனக்கு டைட்டில் கொடுக்கவில்லை என்றாலும் முத்துக்குமரனுக்கு கொடுத்தது குறித்து பெருந்தன்மையாக பேசியது பலராலும் பாராட்டப்பட்டது.
அதே நேரத்தில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தீபக் வருவார் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அவர் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. எப்படியோ நிகழ்ச்சி முடிவடைந்து.
இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு பேன்ஸ் மீட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் தீபக் அவருடைய மனைவியோடு கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தீபக் மனைவி பேசியது தான் இணையத்தில் அதிகமாக கமாண்டுகள் பெற்று வருகிறது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சௌந்தர்யா சக போட்டியாளர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது பிங்க் என்ற நிறத்தை தொடுவதற்காக அங்கு அமர்ந்திருந்த தீபக் போட்டு இருந்த சட்டையை ஓடி சென்று தொட்டு இருந்தார். அது ரொம்ப தவறு என்று அந்த நேரத்தில் தீபக் பேசியிருந்தார். ஒரு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களிடம் அனுமதி கேட்காமல் எப்படி அடுத்தவங்க தொடலாம் என்று தீபக் பேசியது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு சௌந்தர்யா மன்னிப்பும் கேட்டு இருந்தார்.
இந்த நிலையில் இப்போது நிகழ்ச்சியே முடிவடைந்துவிட்டது. அதற்கு பிறகும் சவுந்தர்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபக் அனுமதி இல்லாமல் அவரை தொட்டது தப்பு என்று தீபக் மனைவி பேசி இருக்கிறார். இதற்கு சௌந்தர்யாவின் ரசிகர்கள் அப்படி பார்த்தால் அந்த சம்பவம் நடைபெறும் போது தீபக் சவுந்தர்யா மீது கோபப்படுவதற்கு முக்கிய காரணமே விஷால்தான், வி.ஜே விஷால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து சௌந்தர்யாவின் நடவடிக்கைகள் குறித்து தவறாக பேசிக்கொண்டே இருந்தார். அதனால் தான் தீபக் கூட ஒரு பெண் ஆணை அனுமதி கேட்காமல் தொடுவதும் தப்பு என்று பேசி இருந்தார்.
ஆனால் தீபக் முன்பு விஷால் சௌந்தர்யா ஆண்களிடம் பேசுவது, பழகுவது, அவர்களை தொடுவது குறித்து தவறாக பேசிக் கொண்டிருந்தாரே அப்போது தீபக் ஏன் அமைதியாக இருந்தார் என்று அவருடைய மனைவி கேள்வி கேட்கவில்லையே? அப்போ ஒரு பெண்ணை பற்றி மட்டும் ஆண் தவறாக பேசலாமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications