சௌந்தர்யா கொடுத்த ரியாக்ஷனை மறக்கவே மாட்டேன்.. மாற்றி பேசுனாங்க..! மஞ்சரியின் அம்மா குற்றச்சாட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் மஞ்சரி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் சௌந்தர்யா கொடுத்த ரியாக்ஷனை மறக்க மாட்டேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசன் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுபோல இந்த நிகழ்ச்சி முடிவடைந்தாலும் இணையத்தில் இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த சீசனில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்துக் கொண்டும், ஃபேன்ஸ் மீட்டிங்கில் கலந்து கொண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் மஞ்சரி பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் மஞ்சரியும் அவருடைய அம்மாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
அதில் மஞ்சரியின் அம்மா பேசுகையில் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மஞ்சரி ஒதுக்கப்பட்டாங்க. அதை பார்க்கும்போது நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். மஞ்சரி அங்கு அழும்போது நாங்க இங்க எல்லோருமே சேர்ந்து அழுதோம். அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அதுபோல மஞ்சரி பேசும்போது சௌந்தர்யா கொடுத்த ரியாக்ஷன் மறக்கவே முடியாது.
இப்போ கூட அந்த வீடியோக்கள் இணையத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எல்லாம் பார்த்தால் கவலையாய் இருக்கும். எதுக்காக இப்படி எல்லாம் ரியாக்ஷன் கொடுக்குறாங்க என்று எங்களுக்கு வருத்தம் இருக்கிறது. அதுபோல அருணும் மஞ்சரியை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காரு என்று மஞ்சரியின் அம்மா பேசியிருக்கிறார்.

அதை தொடர்ந்து பேசிய மஞ்சரி, அருணும் என்னை ஆரம்பத்தில் கஷ்டப்படுத்தினாரு, ஒதுக்கி வச்சாரு. அதற்குப் பிறகு என்ன புரிந்து கொண்டார். ஒரு டாஸ்க் நடைபெற்றது அதில் நான் ஏறிய பஸ்ஸில் அருண் ஏற மாட்டேன் என்று சொன்னார். அதற்கு பிறகு என்னுடைய திறமையையும், வலிமையும் பார்த்துதான் நீங்கள் வெற்றி பெற்றவர் உங்கள் பக்கத்தில் கூட இருக்க முடியாது அதனால்தான் நீங்க ஏறுன பஸ்ல நான் ஏற மாட்டேன் என்று சொன்னதாக அவர் சொன்னது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று நான் நினைக்கிறேன் என அந்த பேட்டியில் மஞ்சரி தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications