Bigg Boss : பிக் பாஸில் நேற்று திவாகரை அவசரமாக வெளியேற்ற காரணம் இதுதானா? மறைக்கப்பட்ட உண்மை?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வு நேற்று நடந்து முடிந்தது! தனது லூட்டிகளால் பலரையும் முகம் சுளிக்க வைத்த போட்டியாளர் திவாகர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வெளியேற்றம் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டாலும், அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களுக்குக் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

திவாகரின் தில்லாலங்கடி வேலைகள்
வெளியில் தான் அவர் ஜாதிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் அதே செயல்களைத் தான் திவாகர் செய்து கொண்டிருந்தார். பல இடங்களில் அவர் மற்றப் போட்டியாளர்களைத் தரக்குறைவாகப் பேசியது, பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தரம் பேசும் திமிர்ப்பேச்சு
குறிப்பாக, சக போட்டியாளரான கானா வினோத்தை பல இடங்களில் அவர் அவமானப்படுத்தி இருந்தார். "நீ என்னுடையத் தகுதிக்கும் தராதரத்துக்கும் சரியானது கிடையாது. நீ சீப்பானவன்" என்பது போன்று பேசி, அவரது நடவடிக்கையைத் தொடர்ந்து விமர்சித்தார். வினோத் கானா பாடல்கள் ஏதோ அசிங்கம் என்பது போலவே எல்லாம் திவாகரின் பேச்சு நடவடிக்கை இருந்தது.
ஆபாச செயல்கள்
இதுமட்டுமல்லாமல், பெண்களின் முடியை முகர்ந்து பார்ப்பது, பெண்களின் கைகளைத் தொடுவது போன்ற எல்லை மீறிய செயல்களிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இதனால், இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் "இவரை வெளியேற்ற வேண்டும்" என்று தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தனர்.
தன்னைத் தானே "வாட்டர்மெலன் ஸ்டார்"* என்று சொல்லிக்கொண்டு, "இந்த உலகத்திலேயே எனக்கு மட்டும் தான் நடிக்கத் தெரியும். ரஜினிக்கு வயதாகிவிட்டது. விஜய் அரசியலுக்கு போய்விட்டார். அஜித் ரேஸுக்கு போய் விட்டார் இனி தமிழ் சினிமாவைக் காப்பாற்றப் போவது நான் தான்" என்று திவாகர் பேசியதெல்லாம், சமூக ஊடகங்களில் கடும் கேலிக்கு உள்ளானது.
டிவி சேனல் சூழ்ச்சி
தொடர்ச்சியாகப் பலரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, வேறு வழியின்றி இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திவாகர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஆனால், அவருக்குக் கடைசியில் ரெட் கார்டு கொடுக்காமல் விட்டுவிட்டது ஏன் என்பதுதான் இப்போதுப் பெரியப் பேசுபொருளாக இருக்கிறது.
ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட நபரை மீண்டும் நிகழ்ச்சியில் கூட்டிக் கொண்டு வர முடியாது. ஆனால், திவாகர் வெளியே வந்தாலும், எதிர்கால பிக்பாஸ் நிகழ்ச்சிகள் அல்லது மற்ற விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இவரை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதுதான் விஜய் டிவியின் சூழ்ச்சியாக இருக்கிறது என்றுப் பலருடைய கருத்தாக இருக்கிறது.
அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கும், "நாங்கள் திவாகரை வெளியே அனுப்பிவிட்டோம்" என்றுச் சொல்வது போலத்தான் விஜய் தொலைக்காட்சி இந்தத் திட்டத்தைப் போட்டு இருக்கிறது என்றுப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
திவாகர் வெளியேற்றப்பட்டது ஒருபுறம் ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும், இத்தனை சர்ச்சைக்குரிய ஒரு நபருக்குக் கடுமையான தண்டனையான ரெட் கார்டு கொடுக்காமல் விட்டது, பிக்பாஸ் என்றாலே அதிக வியூஸ்க்காகவும் பரபரப்பான எதிர்பார்ப்புக்காக எதையும் செய்வார்கள் என்பதையே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
"இப்படி ஒரு நாடகத்தனமான வெளியேற்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?"
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications