கானா வினோத் என்னை வச்சி பிரபலமாகலாம்னு பார்த்தாரு! இதுதான் நடக்கும்னு அப்பவே தெரியும்! திவாகரின் அலம்பல்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் தன்னுடைய ஆணவமான பேச்சை விடுவதாக இல்லை! தான் செய்த தவறுகளுக்குச் சப்பைக் கட்டு கட்டுவது ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் வீட்டிற்குள் தனக்கு நெருக்கமானவராக இருந்த கானா வினோத் பற்றியும் ஒரு புதிய குற்றச்சாட்டைக் கிளப்பி, இப்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் இரண்டு வாரங்கள், கானா வினோத் மற்றும் திவாகர் இருவரின் உரையாடல்களும் அதிகமாக ரசிக்கப்பட்டது. இருவரும் பேசும் காமெடிகள், மற்றும் சண்டைகள், இவர்கள்தான் அடுத்த கவுண்டமணி - செந்தில் என்றெல்லாம் மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களாக இணையத்தில் வலம் வந்தன.

திருப்பம்
ஆனால், இந்த சலசலப்பை பற்றித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி சொன்னதும், திவாகருடைய நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. கானா வினோத் எது சொன்னாலும், அதற்குப் பிறகு திவாகர் கோபப்பட்டு அவரைத் திட்டத் தொடங்கினார். அதுமட்டுமின்றி, கானா வினோத் பக்கமே போகாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் ஆரம்பித்தார்.
அம்பலமான உண்மை
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த Wild Card போட்டியாளர்கள் கூட, "நீங்கள் இருவரும் ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்ததுதான் மக்களால் ரசிக்கப்பட்டது" என்று வெளிப்படையாகச் சொல்லியிருந்தனர். ஆனாலும் திவாகர் அதைக் கண்டுகொள்ளவில்லை. நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகும், ஜாக்லினுடன் நடந்த பேட்டியில், திவாகர் கானா வினோத் மீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தான் செய்தது நியாயம் என்பதை நிலைநிறுத்த, வினோத்தைக் குறிவைக்கிறார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
திவாகரின் குற்றச்சாட்டு
"வினோத் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே சொன்னாரு, எனக்குச் சோசியல் மீடியாவில் பிரபலம் கிடையாது; அதிகமான ஃபாலோவர்ஸ் கிடையாதுன்னு." "ஆனால், விஜய் சேதுபதி க்ஷ 'நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்கிற கூட்டணி நல்லா இருக்கு'னு சொன்னதும், அவருடைய (கானா வினோத்) ரியாக்ஷன் அப்படியே மாறிவிட்டது. என் பின்னாடியே சுத்தத் தொடங்கிட்டாரு."
"எனக்கு ஏற்கனவே ரொம்ப ஃபேமஸ் இருக்கு. மக்கள் என்னை ரசிக்கிறாங்க. என்னைப் பத்தி இளைஞர்கள் வரைக்கும் எல்லாருக்கும் தெரியும். அதை வைத்து அவரும் ஃபேமஸ் ஆகலாம்னு பார்த்தாரு. அதனால என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தாரு.""நான் எங்க போனாலும் எதையாவது பேசுறது, என்ன உருவக் கேலி செய்வதுதான் அவருடைய வேலையா இருந்துச்சு. அதனாலதான் நான் அவர் பக்கமே போகக் கூடாதுன்னு நினைப்பேன். மத்தபடி நான் ஜாலியான ஆளு தான். சிலர் என்னிடம் நடந்துகொண்ட விதத்தால் தான் நான் கோபப்பட்டேன்" என்று மீண்டும் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் தான் போட்ட அதே ரீல்ஸை வெளியேவும் திவாகர் தொடர்ந்தார்.
திவாகரின் இந்தப் பேச்சைக் கேட்ட ரசிகர்கள், "இவரு பிரபலம், அவர் பிரபலமில்லையா இவருக்குக் கிடைத்த நெகட்டிவ் பப்ளிசிட்டிக்கு வினோத் பின்னாடி ஏன் சுத்தணும்?" என்று கேள்வி எழுப்பி கிண்டலடித்து வருகின்றனர்.
உள்ளிருக்கும் போட்டியாளர்களில் யார் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்று கேட்டபோது, திவாகர், "உள்ள இருப்பவர்களில் யாரையும் அப்படிச் சொல்ல முடியல. எல்லாருமே ஒருவிதமா விளையாடிகிட்டு இருக்காங்க" என்று பட்டும் படாமலும் பதிலளித்தார்.
ஆனால், வினோத் பற்றி மீண்டும் கேட்கப்பட்டபோது, "வினோத் சீக்கிரமா வெளிய வந்துருவாரு. அவர் அடுத்தவங்களை அசிங்கப்படுத்திட்டே இருக்கிறார்" என்று மீண்டும் மீண்டும் வினோத்தைக் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
மொத்தத்தில், திவாகர் பிக்பாஸ் வீட்டிற்குள் "தகுதி, தராதரம்" என்று பேசியதற்கும், வெளியே வந்த பிறகு "நான் ஹீரோ மெட்டீரியல்" என்று பேசியதற்கும் ஒரே ஒரு பொதுவான பாயிண்ட் தான் இருக்கிறது. அது, 'தானே உலகின் மையம்' என்ற அவருடைய ஆட்டிடியூட் தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications