Bigg Boss: எனக்கு இன்னைக்கு பீரியட்ஸ்! விஜே பார்வதி சொன்னதும் திவாகர் செய்த செயல்! இவரா இப்படி!
சென்னை: விஜய் டி.வி-யின் பிக் பாஸ் தமிழ் 9 ஆரம்பிச்ச நாள்ல இருந்தே சண்டை, சச்சரவு, கண்ணீர்னு ஒரே அலப்பறைதான்! ஆனா, ஆட்டம் ஆரம்பிச்ச முதல் வாரத்துக்குள்ளேயே இவ்வளவு பஞ்சாயத்து நடக்கிறது, ரசிகர்களுக்கே தலை சுத்தும் அளவுக்கு இருக்கு! இந்த வீட்டின் புத்தம் புதிய டிராமா, 'லக்சுரி ஹவுஸ் சுத்தம்' பஞ்சாயத்துதான்!

திவாகர் & பார்வதிக்கு வேலை
இந்த சீசன் விதிப்படி, பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள், லக்சுரி ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் சொல்லும் வேலையைச் செய்யணும். அதுப்படி, லக்சுரி ஹவுஸைச் சுத்தம் செய்ய, VJ பார்வதியும், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டாங்க.
லக்சுரி ஹவுஸில் இருந்த போட்டியாளர்கள், குறிப்பா ரம்யா ஜோ மற்றும் சுபி, இவங்க ரெண்டு பேரையும் வேலை வாங்குறோம்னு சொல்லி நடத்திய விதம் ரொம்பவே அதிர்ச்சியைக் கொடுத்தது. 'என்னடா இது, கூலி வேலைக்கு ஆள் கூப்பிடுற மாதிரி இருக்கு'ன்னு அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனாங்க.
பீரியட்ஸ் வலிக்குக் கிடைத்த கண்டெண்ட்
இந்த வேலையை சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தப்போதான், VJ பார்வதியும், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரும் பேசிக்கிட்டது, இப்போ இன்டர்நெட்டையே கலக்கிக் கிட்டு இருக்கு!
VJ பார்வதி, "இன்னைக்குனு பாத்து எனக்கு பீரியட்ஸ் அண்ணா. சீக்கிரமே இந்த இடத்தை விட்டு போகனும்."என்று சொல்ல, அதற்கு வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், "அய்யய்யோ.. அது இன்னும் வலியாகத்தானே இருக்கும். கிராம்ப்ஸ் எல்லாம் இருக்குமே. பீரியட்ஸோடு நீ ஏன் வேலை செய்யுற. எங்கிட்ட கொடு நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று அக்கறையுடன் சொன்னார். VJ பார்வதி "பரவாயில்லை அண்ணா. முதலில் இந்த இடத்தை விட்டுப் போனால் போதும்" என்று சொன்னார். இந்த உரையாடலைப் பார்த்த இணையவாசிகள், ஒரு நிமிஷம் உறைந்துபோய், திவாகரைப் பாராட்டித் தள்ளிட்டாங்க!
திவாகருக்கு மாறிய பெயர்
ஆரம்பத்துல இருந்தே, தன் தற்பெருமையாலும், 'வாட்டர்மெலன் ஸ்டார்'ங்கிற அலப்பறையாலயும் ஹவுஸ்மேட்ஸ் கிட்ட வெறுப்பைச் சம்பாதிச்ச திவாகர், இப்போ 'மனிதப் புனிதனா' மாறிவிட்டார்!
ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளின கமெண்ட்கள் வேற லெவல்: "பெண்ணின் நம்பிக்கையை வெல்வது கடினம். வென்று விட்டாய் மனிதனாக. ஆண்களில் உயர்ந்தவரே" என்று எல்லாம் கமெண்ட் போட்டு திவாகரை ரசிகர்கள் கொண்டாடுறாங்க.
இன்னும் சிலரோ, திவாகரை இந்த சீசனின் 'கண்டெண்ட் கிங்' என்றும், VJ பார்வதியை 'கண்டெண்ட் குயின்' என்றும் பட்டம் சூட்டி, இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் இந்த டிராமாவை ஓட்டுறாங்கன்னு கிண்டல் அடிக்கிறாங்க!
மொத்தத்துல, "என் வயித்தப் பாத்து பேசாதீங்க!"ன்னு அழுத அதே திவாகர், இப்போ ஒரு பெண்ணின் வலியை உணர்ந்து, வேலை செய்ய வந்த இடத்துல பாசத்தைக் காட்டுறது, ரசிகர்களுக்கு செம ஃபீலிங்கைக் கொடுத்திருக்கு! ஹவுஸ்மேட்ஸ்கிட்ட திவாகர் வாங்கின அத்தனை அடியும், வெளியில அவருக்கு அனுதாப ஓட்டா மாறி, இப்போ 'நல்லவன்' பட்டம் வேற கிடைச்சிருக்கு! இனிமேல் திவாகர் இன்னும் என்னென்ன அலப்பறைகள் பண்ணி, ரசிகர்களின் பாசத்தைக் குவிப்பார்னு தெரியல!
திவாகரின் இந்த அக்கறை, உண்மையானதா? இல்லன்னா, பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் போட்ட ஒரு 'மாஸ்டர் பிளான்'னு நினைக்கிறீங்களா?
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications