என்னமோ நடக்குது, மர்மமா இருக்கு! பிக் பாஸில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்: டபுள் எவிக்ஷன், கப்பில்ஸ் வைல்ட் கார்ட்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சலசலப்புக்குப் பஞ்சமில்லாமல் சர்ச்சைக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் முதல் நிகழ்ச்சி நிர்வாகம் வரை எல்லாமே ஒரே 'ரிப்பேர்' ஆகிப் போன நிலையில், விஜய் டிவி இப்போது ஒரு அதிர்ச்சியான முடிவை எடுத்து, இந்த வாரம் நிகழ்ச்சியில் பெரிய 'திருப்புமுனை'யைக் கொடுக்கத் தயாராகிவிட்டது.

டபுள் எவிக்ஷன்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று ஒரு தகவல் வெளியாகி, ரசிகர்களைப் பதட்டமடையச் செய்துள்ளது. 'அரோரா'வின் டபுள் மீனிங் பேச்சு, திமிரான நடவடிக்கைகள் காரணமாக அவரை வெளியேற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த அழுத்தத்தைப் பொறுத்து, விஜய் டிவி அவரை இந்த வாரம் வெளியேற்ற முடிவெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இது நடக்குமா என்பது சந்தேகம் தான்!
திருநங்கை அப்சரா நிலை
அரோராவிற்கு அடுத்தபடியாக, இந்த வார வாக்குகளின் அடிப்படையில் அப்சரா* வெளியேற்றப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த வார வாக்குகளின் அடிப்படையில் அப்சரா தான் அதிக கடைசி இடத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இரண்டு வெளியேற்றங்கள் மூலம் வீட்டை ஒரு 'சுத்தம்' செய்யப் பிக் பாஸ் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இரட்டை வைல்ட் கார்டு கப்பிள்ஸ்
ஒரு பக்கம் டபுள் எவிக்ஷன் என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் யாரும் எதிர்பாராத இரட்டை வைல்ட் கார்டு போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இதுவரையிலான பிக் பாஸ் சீசன்களில் நடக்காத ஒரு சம்பவம் இது என்று கூறப்படுகிறது.
ஆனால், இதில் ஒரு காமெடி ட்விஸ்ட் இருக்கிறது!
ஆரம்பத்தில், சமூக வலைதளங்களில் 'கப்பிள்ஸ் விலாக்போடும்' பிரபலங்களைத் தான் நிகழ்ச்சிக்குள் கொண்டு வர விஜய் டிவி திட்டமிட்டதாம். ஏனெனில், அவர்கள் சண்டைகள் மூலம் அதிகக் கன்டென்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மீது இருக்கும் 'ரிப்பேரான' பெயர் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக, அந்த முடிவை விஜய் டிவி கைவிட்டு விட்டதாம். காரணம், ஏற்கனவே பிக் பாஸை ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், மேலும் சர்ச்சைக்குரிய நபர்களை உள்ளே அனுப்பினால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று பயந்துவிட்டதாகத் தெரிகிறது.
பிக் பாஸே நீங்கதானா? போட்டியாளர்கள் பேச வாய்ப்பு கொடுங்க!” விஜய் சேதுபதியை கலாய்த்த பிரவீன் காந்தி!
அதனால், இப்போது விஜய் டிவி பிரபலங்கள் ஜோடியை தான் இந்த நிகழ்ச்சியில் களமிறக்கப் போகிறார்களாம்! அதிலும் நான் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்த பிரஜன் மற்றும் சான்றா தம்பதியின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது அதைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமாகி காதலித்து திருமணம் செய்த தீபிகா மற்றும் ராஜா பெயர் இருக்கிறதா ஆனால் இவர்களில் யார் வரப்போகிறார்கள் என்று இன்னும் உறுதியாக கூறப்படவில்லை எப்படியும் தீபாவளி நாளில் இவர்களுடைய என்ட்ரி இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரசிகர்கள் கிண்டல்
"எப்படியாவது ரிப்பேரான பெயரைச் சரி செய்ய வேண்டும்" என்று விஜய் டிவி எடுத்துள்ள இந்த முயற்சி, எந்த அளவிற்கு வெற்றி கொடுக்கும் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு, உடனடியாக இரண்டு புதிய ஜோடிகளை உள்ளே அனுப்புவது, 'பிக் பாஸ் கன்டென்ட் பற்றாக்குறையில் திணறுகிறதா?' என்று ரசிகர்களைக் கலாய்க்க வைத்துள்ளது.
எது எப்படியோ, இரட்டை வைல்ட் கார்டு கப்பிள்ஸ் மற்றும் டபுள் எவிக்ஷன் என இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பல டுவிஸ்ட்டுக்கு மேல் டுவிஸ்ட் அரங்கேறப் போவது உறுதி! விஜய் டிவியின் இந்த 'மெகா ட்ரை', ஏற்கெனவே சர்ச்சைக்குப் பெயர் போன பிக் பாஸுக்கு ஒரு 'சீரான' பெயரைக் கொடுக்குமா, அல்லது மேலும் 'ரிப்பேர்' ஆக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications