Bigg Boss: பிக்பாஸின் ADULT நாடகத்தை உடைத்த பிரவீன் ராஜ்! அவர் வெளியேறியதற்கு உண்மை காரணம் இதுதானாம்!
சென்னை: விஜய் டிவியில் அதிக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, 40 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வீட்டுக்குள் நடக்கும் சர்ச்சைகளும், அடல்ட் டாபிக்கும் வெளியில் இருந்து பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது! இந்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரவீன் ராஜ் ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே நடந்த அத்தனை நாடகங்களையும் போட்டுடைத்துள்ளார்.
யூடியூபர் விக்கல்ஸ் விக்ரம், கனி திரு, பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை, துஷர், கலையரசன், நந்தினி உள்ளிட்ட 20 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் வீடு இந்த முறை தொடங்கியது. இதில், நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ஆகியோர் இதுவரை வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில், திவ்யா கணேஷ், பிரஜன், சான்ட்ரா மற்றும் அமீர் ஆகியோர் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்து, சண்டைக்குச் சற்றும் குறைவில்லாமல் இருக்கிறார்கள்.

வெளியேறியவரின் உண்மை காரணம்
கடைசியாக வெளியேறிய போட்டியாளர் பிரவீன் ராஜ், அண்மையில் அளித்தப் பேட்டியில், தான் ஏன் வெளியேறினேன் என்பதற்கானக் காரணத்தைக் கொஞ்சம் ஓப்பனாகவே கூறியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ன செய்தால் நீடித்திருக்க (சர்வே பண்ண) முடியும் என்று எனக்கு ஒண்ணும் புரியவில்லை." "நான் வெளியேறியதற்கு யாருமே கிடையாது, என்னுடைய தன்னம்பிக்கை குறைவாக இருந்தது தான் காரணம். என்ன செய்தால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்பதேத் தெரியவில்லை."
பிரவீன் ராஜ் தனது தோல்விக்குப் பிறரைக் குறை சொல்லாமல், தன் மீதே பழிபோட்டுக்கொண்டது பாராட்டத்தக்கது! இந்தத் தன்னம்பிக்கை குறைவு, பிக்பாஸ் போன்ற உணர்ச்சிகரமான விளையாட்டில் பலருக்கு இருக்கும் ஒரு உண்மை!
பிக்பாஸை கலாய்த்த பிரவீன்
பிரவீன் ராஜ் வெளியேறியதற்கானக் காரணத்தை மனந்திறந்து சொன்னது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே நடக்கும் நாடகம் பற்றி அவர் போட்டுடைத்ததுதான் டிவி பார்ப்பவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது! "நிகழ்ச்சியில் அடல்ட் டாபிக் பற்றிய பேச்சு எங்க முன்னாடியே நடந்திருக்கிறது. அதெல்லாம் நேரில் பார்க்கும் போது தான் குமட்டிட்டு வரும். நாங்களே கூப்பிட்டு இதெல்லாம் பண்ணாதீங்கன்னு சொல்லி இருக்கோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் TRPக்காக, கேமராவுக்கு முன்னால் பலர் வேண்டுமென்றே வரம்பு மீறிச் சண்டையிடுவதும், அடல்ட் பேச்சு பேசுவதும் வழக்கமாகிவிட்டது. ஆனால், அதுவே அங்குப் போட்டியாளர்களாக இருக்கும் பலருக்கும் 'குமட்டும்' அனுபவத்தைத் தருகிறது என்று பிரவீன் ராஜ் வெளிப்படையாகக் கூறியிருப்பது, பிக்பாஸ் என்ற பெயரில் நடக்கும் நாடகங்களைச் சாட்டையடி கொடுத்துக் கலாய்ப்பது போலவே அமைந்திருக்கிறது!
பிக்பாஸ் என்ற இந்த விளையாட்டின் நோக்கமே போட்டியாளர்களின் உணர்ச்சிகளைக் கிளறி, சண்டையை தூண்டுவதுதான் என்றாலும், "சரியான விளையாட்டு எதுவென்றுப் புரியவில்லை" என்று பிரவீன் ராஜ் கூறியிருப்பது, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தவர்களின் ஆதங்கத்தைக் காட்டுவதாக இருக்கிறது!












Click it and Unblock the Notifications