Bigg Boss 9 Finale: பார்வதி என்ட்ரி.. பிக் பாஸ் 9 ஃபினாலே சூட்டிங் நிறுத்தம்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆனால் வெற்றியாளர் யார் என்பதைக் காட்டிலும், ஃபினாலே மேடைக்கு பின்னால் நடக்கும் "ஆஃப்-ஸ்கிரீன் டிராமா" தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் - ரெட் கார்டு வாங்கி வெளியேறிய பார்வதியின் மர்மமான ரீ-என்ட்ரி!
பிக் பாஸ் அரங்கில் இருந்து கிடைத்த தகவல்படி, ஃபினாலே ஷூட்டிங் மதியம் 4 மணிக்கே தொடங்கியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், "பார்வதி உள்ளே வர்றாரா?" என்ற கேள்விக்கு, உள்ளே இருந்தவர்களுக்கே தெளிவான பதில் இல்லை. காரணம், பார்வதி சுமார் 6 மணி வரைக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல், தனியாக காரில் கருப்பு நிற உடையில் அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இதை பார்க்கும் போது, "இது பிக் பாஸ் வீடா... இல்ல ஏர்போர்ட் பிக்கப் & ட்ராப் கவுண்டரா? உள்ளே போக டைம் ஆகுது, கார்ல வெயிட் பண்ண சொல்லுறாங்க!" என்று சிலர் கலாய்த்து வந்தனர்.
பின்னர் திடீரென பார்வதி உள்ளே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் ஃபினாலே மேடையில் நீண்ட நேரம் இருப்பாரா என்றால், அதற்கு 'இல்ல' என்ற பதில்தான் அதிகமாக கேட்கிறது. "கொஞ்ச நேரம் வந்துட்டு, காட்சி காட்டிட்டு, கிளம்பிடுவார்" என்றே கூறப்படுகிறது.
இதற்கு பின்னணி என்னன்னா, ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிறகு, பார்வதி விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் நிர்வாகத்தை மறைமுகமாக விமர்சிக்கும் பல பதிவுகளை சமூக வலைதளங்களில் போட்டு வந்தார். நேரடியாக வீடியோ போட்டு குற்றச்சாட்டு வைக்கவில்லை என்றாலும், "எனக்கு அநியாயம் நடந்துடுச்சு" என்ற பாணியில் அவர் போட்ட பதிவுகள் பெரும் பேசுபொருளானது.
அதனால்தான், "இவரை மீண்டும் விஜய் டிவி உள்ளே கூப்பிடவே மாட்டாங்க" என்று சொன்னவர்களே அதிகம். ஆனால் பிக் பாஸ் என்றாலே ட்விஸ்ட் இல்லாம இருக்குமா? பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் பிக் பாஸ் டீமுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகே, இந்த ஃபினாலே ரீ-என்ட்ரி முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, "ரெட் கார்டு - ஃபைனல் டிசிஷன்" என்ற பழைய அர்த்தம், சீசன் 9-ல் "சிட்யூயேஷன் அப்ளை" ஆக மாறிவிட்டது போல.
இதையெல்லாம் பார்த்து ரசிகர்கள் கேட்கும் கேள்வி இதுதான்: "கம்ருதீனை மாதிரி பார்வதியையும் மேடையில் நிற்க வைத்து விஜய் சேதுபதி பேசுவாரா?" ஆனால், இதற்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், "பொறுத்திருந்து பாருங்க" என்றே உள்ளே இருப்பவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இதற்கிடையில், ரெட் கார்டு விவகாரமே பிக் பாஸ் 9-ன் பெரிய சர்ச்சை. பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் எதிராக ரசிகர்கள் மற்றும் சில தரப்புகளில் இருந்து கடும் விமர்சனங்கள் வந்ததால்தான், அதிரடியாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் ரெட் கார்டு கொடுத்த பிறகு, அவர்களை முறையாக மேடையில் நிற்க வைத்து வழி அனுப்பவில்லை, விஜய் சேதுபதி தெளிவாக பேசவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதை சரி செய்ய இப்போ பிக் பாஸ் முடிவு எடுத்து இருக்கிறது.
"அப்போ அநியாயமா போச்சு... இப்போ அந்த அநியாயத்தை 'ஃபினாலே ஸ்பெஷல்'னு சரி பண்ண முயற்சியா?" என்று ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அதுபோல பிக்பாஸ் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பார்வதியை எப்படி உள்ளே அனுப்பப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு சிறிது நேரம் ஷூட்டிங் நிறுத்திவிட்டு பார்வதியை உள்ளே அனுப்பி சில கண்டண்ட் மட்டும் பேச வைத்து விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
கம்ருதீன் நேற்றே சூட்டிங் வந்து தயாராக இருந்ததால் அவரிடம் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று எல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் பார்வதி இன்று தான் சூட்டிங்க்கு வந்திருக்கிறார். இதனால் அவரை அதிக நேரம் உள்ளே வைக்க மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications