Bigg Boss: கண்ணீரோடு இன்று வெளியேறிய கானா வினோத்! பிக்பாஸ் சொன்ன அந்த வார்த்தை, அரோராவிற்க்கு விழும் அர்ச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்கில் 18 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கானா வினோத் வெளியேறி இருக்கிறார். அவர் கண்ணீரோடு வெளியேறும்போது பிக் பாஸ் சொன்ன வார்த்தை அவருக்கு மட்டுமில்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் பூஸ்ட் ஆக இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படுகிறது. அந்த டாஸ்க் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும். அதாவது இவங்க எல்லாம் இந்த நிகழ்ச்சியில் இருப்பதற்கு இந்த பணத்தை கிடைத்த வரைக்கும் லாபம் என்று தூக்கிக்கொண்டு வெளியே போய்விட்டால் நல்லது என்று ரசிகர்கள் நினைப்பார்கள், ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட போட்டியாளர்கள் செய்யாமல் யாரும் எதிர்பார்க்காத சில போட்டியாளர்கள் அந்த பணத்தை எடுத்து இருக்கிறார்கள்.

அதே போலத்தான் தற்போதைய ஒன்பதாவது சீசனிலும் நடந்திருக்கிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருந்தாலும் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் அதிகமான சோசியல் மீடியா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகள் தான் இந்த நிகழ்ச்சியின் தாரக மந்திரமாக இருந்தது.
அதனால் யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று யோசிக்க முடியாத வகையில் தான் இருந்தது. அதிலும் இருப்பதிலேயே கானா வினோத் கொஞ்சம் பெட்டர் பா என்று சொல்ற மாதிரி அவருடைய விளையாட்டு ரசிகர்களை கவர தொடங்கியது. இப்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்கு இருக்கும் நிலையில் அதில் கானா வினோத் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று பலரும் கூறிவந்தனர்.
ஆனால் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டி டாஸ்க்கில் 18 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கானா வினோத் வெளியேறி இருக்கிறார். ஆனால் நேற்று இரவு லைவில் கானா வினோத்தை பணத்தை எடுக்கும்படி அரோரா மனதை மாற்றியிருக்கிறார்.
இந்த வாரம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போனால் கூட அடுத்த வாரமே வந்துவிடலாம், நமக்கு பணப்பெட்டியில் இருக்கும் பணமும் கிடைக்கும், இத்தனை நாள் இருந்ததுக்குள்ள சம்பளமும் கிடைக்கும்.. இது டபுள் போனஸ் ஆனால் நான் பைனலுக்கு டிக்கெட் ஜெயித்து விட்டேன். இதனால் தான் எடுக்கல நான் டிக்கெட் 2 பினாலே டாஸ்க்கில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பா இந்த பணத்தை எடுத்து இருப்பேன் என்று அவர் சொல்ல, அப்போதே வினோத்துக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து இன்று பணப்பெட்டியில் அரோரா விளையாட்டு காட்டிக்கொண்டே இருக்க, அப்போது திடீரென வினோத் பெட்டியை தூக்கி இருக்கிறார். இதை அங்கிருந்தவர்களே நம்ப முடியவில்லை. அப்போது இந்த விளையாட்டு இத்துடன் முடிகிறது என்ற வருத்தத்தில் கானா வினோத் அழுது இருந்தார்.
எனக்கெல்லாம் இவ்வளவு நாள் வந்ததே பெருசு, இந்த பணம் எனக்கு ரொம்ப முக்கியம் டா என்று சபரியிடம் சொல்லி இருந்தார். அப்போது பிக் பாஸ், கானா வினோத் நீங்க இதிலிருந்து எடுத்தது சில லட்சங்களாக இருக்கலாம். ஆனால் அது இனி கோடிகளாக மாறும் நாள் வெகு தூரம் இல்லை என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அப்போது அரோரா சிரித்துக்கொண்டிருக்க, அதை பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் இந்த ப்ரோமோவில் அரோராவை திட்டி தீர்த்து வசைப்பாடி வருகின்றனர். இந்த சீசனில் உண்மையான டைட்டில் வின்னர் வினோத் தான், அரோரா அவரை மனக்குழப்பம் செய்ய வைத்து விட்டார்.. அரோரா ஒரு சூனியக்காரி என்றெல்லாம் பல கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications