பிக் பாஸில் ரசிகர்கள் சொன்ன மாதிரியே ஆகிடுச்சு! 60 கேமரா வைத்து படம் எடுக்குறாங்களா? சான்ட்ரா உடைத்த ரகசியம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய 60 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் நேற்று இரவு சான்ட்ரா ரகசியங்களை உடைத்து இருக்கிறார். இதை ஏற்கனவே ரசிகர்கள் கணித்ததுதான். இப்போது நடந்து வருவதை பார்க்கும் போது என்னங்க இப்படி எல்லாம் பண்ணுறீங்களே என்று தான் கேட்கத் தோன்றுகிறது. அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் வித்தியாசமாக தொடங்கப்பட்டது. இதற்கு முந்தைய சீசன்களில் அதிகமான திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த சீசனில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சோசியல் மீடியா பிரபலங்கள் மட்டும் நான் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் அதிகமான நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் தான் இல்லை.

எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் தான் இருந்தது. இதனாலேயே வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அப்போது கப்புள்ஸ் போட்டியாளர்களாக பிரஜன் மற்றும் சான்ரா உள்ளே வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அவர்கள் வரும்போது இது வடசென்னை கதை போல தான் வரும் அதில் எப்படி ராஜனை தூக்கியதும் சந்திரா எல்லாரையும் பழிவாங்குவாரோ அதேபோல பிரஜனை தூக்குவார்கள் அதற்குப் பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் மிஞ்சி இருப்பவர்களை சான்ட்ரா பழிவாங்குவார் என்று சொல்லி வந்தார்கள்.
அதிலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரஜன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக இருந்தது. அப்போது கூட கடைசி நேரத்தில் பிரஜனை காரில் ஏற்றி வெளியே கூட்டிக்கொண்டு சென்று விட்டு மீண்டும் உள்ளே கொண்டு விட்டார்கள். அப்போது கண்டிப்பாக வடசென்னை கதை மீண்டும் தொடங்கும் என்று பலர் சொல்லி வந்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னது போலவே கடந்த வாரத்தில் பிரஜன் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அதற்குப் பிறகு சான்ட்ரா அழுது கொண்டே இருந்தார். இந்த நிலையில் நேற்று பாத்ரூமுக்குள் சென்ற சான்ட்ரா அங்கிருந்த கேமராவிடம் பிரஜானிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகளை பார்த்துக்கொள், வெளியே எல்லாம் செட் ஆகிட்டா? நீ நார்மல் ஆகிட்டியா? என்று எல்லாம் பேசிவிட்டு கடைசியில் உன்னை வெளியே அனுப்புனவங்களை நான் பழிவாங்காம விடமாட்டேன். இனி நான் இந்த வீட்டை விட்டு ஜெயிக்காம வரமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறார்.
இதை பார்த்ததும் ரசிகர்கள் நாங்க சொன்ன மாதிரியே நடந்துடுச்சு என்று சொல்லி வருகிறார்கள். இது பலருடைய கணிப்பாக இருந்தாலும் இதை பார்க்கும் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அறுபது கேமரா வைத்து வடசென்னை 2 படம் எடுத்துட்டு இருக்காங்களா? என்று கலாய்த்து வருகிறார்கள். இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications