Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss: பார்வதியிடம் விஜய் சேதுபதி நறுக்குன்னு கேட்ட கேள்வி! இப்போதான் நல்ல வேலை பண்ணிருக்காரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டிசம்பர் 13ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் விஜய் சேதுபதி ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பார்வதி மற்றும் கம்ருதீன்க்கு பனிஷ்மென்ட் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து அதிகமான சர்ச்சைகள் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது‌. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலேயே தடை செய்ய வேண்டும் என்று சிலர் போர்க்கொடிகள் தூக்கி இருந்தனர். பிறகு அது அமைதியாகி இருக்கிறது, ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்கள் செய்யும் செயல் முகம் சுளிக்க வைக்கும் வகையில் தான் இருக்கிறது. இதை பற்றிய பல விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில் விஜய் சேதுபதி ரிமோட் உங்க கையில் தானே இருக்கிறது நீங்கள் பிடிக்கவில்லை என்றால் மாற்றி விட்டு போங்க என்று சொல்லியிருந்தார்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay Sethupathi Kemi

நீங்க என்னதான் பேசினாலும் எங்க போட்டியாளர்கள் இப்படித்தான் இருப்பாங்க என்பது போல விஜய் சேதுபதி பேசியது அதிகமான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அடுத்த வாரம் வந்து உங்களுக்காக நான் எல்லாரையும் ரிமோட்டை மாற்றி விட்டு போங்கன்னு சொல்றேன். அவங்க அப்படி மாற்றி விட்டு போனால் இந்த ஷோவை எப்படிங்க நடத்துறது என்று சாடி இருந்தார்.

இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கு, இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே பார்வதி எல்லா ப்ரோமோவிலும் நானே வருவேன் பாஸ் என்று வம்படியாக வந்து கொண்டே இருக்கிறார். போதாத குறைக்கு அவரும் கம்ருதீனும் விளையாடும் விளையாட்டு வேற மாதிரி இருக்கிறது. இது பிக் பாஸ் நிகழ்ச்சியா இல்லை கில்மா நிகழ்ச்சியா? என்று கூட சிலர் கலாய்த்து வருகின்றனர். யார் என்ன சொன்னாலும் நாங்க இப்படி தான்யா என்று பார்வதியும் கம்ருதீனும் தங்களை கொஞ்சம் கூட மாற்றிக்கள்ளவில்லை.

பூனை எப்படி கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்குமா அதே போல தான் பார்வதி மற்றும் கம்ருதீன் சென்று செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மைக்கை மூடி பேசுவது மற்றும் மைக்கை கழட்டி வைத்து பேசுவதை பார்த்து கடுப்பான பிக் பாஸ் இவர்களுக்கு மட்டுமல்லாமல் உள்ளிருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் சேர்த்து தண்டனை கொடுத்திருந்தார்.

அதாவது வீட்டுக்குள் டீ, காபி, பால், முட்டை என எல்லாவற்றையும் கட் செய்துவிட்டார். ஆனாலும் பார்வதியும் கம்ருதீனும் அடங்கவே இல்லை. இந்த நிலையில் இன்று சனிக்கிழமைக்கான ப்ரோமோவில் விஜய் சேதுபதி பார்வதி மற்றும் கம்ருதீனை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார். நீங்க யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நாங்க இப்படித்தான் இருப்போம்னு நினைக்கிறீங்க. உங்க கண்ணு முன்னாடி ஹவுஸ் மேட் எல்லாரும் கஷ்டப்பட்டாலும் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல கொஞ்சம் குற்ற உணர்ச்சி இல்லாமல் நடந்துக்குறீங்க.

உங்களுக்கு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சொன்னாலும் புரிவதில்லை, பிக் பாஸ் சொன்னாலும் புரிவதில்லை. நான் உங்களுக்கு பிரைவேசி தரேன் நீங்க இனி மைக்கை கழட்டி வைத்து விட்டு பேசிக்கோங்க என்று சொல்ல, கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் மைக்கை கழட்டி வைத்து பேசுகின்றனர்.

அப்போது பார்வதி பேசுவது எனக்கு கேட்கவே இல்லை என்று பார்வதியை அசிங்கப்படுத்துவது போல விஜய் சேதுபதி மேடையில் இருந்து கிளம்பி போகிறார். விஜய் சேதுபதி பார்வதியை இப்படி அசிங்கப்படுத்தியது ஒருவிதத்தில் ஆறுதல் கொடுத்தாலும் இது போதாது... யாருக்கு அந்த ரெட் கார்டை கொண்டு வந்து கொடுங்க பாஸ் என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஆனால் பிக் பாஸ் என்ன ட்விஸ்ட் பண்ணப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+