Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் செல்வி என் பொண்ணு.. பகுத்தறிவு அதிகம், பார்வதி பற்றி அம்மா பெருமை! பாயிண்ட்டை பிடித்த பேன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முடிவடைந்து சில வாரங்களே ஆனாலும், அந்த சீசனைச் சுற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டாலும், அந்த சீசனில் அதிகமாக பேசப்பட்ட பெயர்கள் என்றால் அது பார்வதி மற்றும் கம்ருதீன் தான் என்று சொல்லலாம். இருவரும் நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்களால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர். இருந்தாலும், வெளியே வந்த பிறகும் அவர்களது சர்ச்சைகள் குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இறுதியில் கிராண்ட் பினாலே மேடையிலேயே இருவரையும் அழைத்து, அவர்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு வழங்கப்பட்டதும் பெரிய விவாதமாக மாறியது. "ரெட் கார்டு வாங்கியவர்களை இப்படி மேடையில் கௌரவிக்க வேண்டுமா?" என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், தற்போது பார்வதியும் கம்ருதீனும் தனித்தனியாக ஃபேன்ஸ் மீட்டிங் நடத்தி, சில தனியார் யூடியூப் சேனல்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.

Bigg Boss Tamil Vijay TV

அந்த வரிசையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பார்வதியும், அவரது அம்மாவும் கலந்து கொண்ட வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், பார்வதியின் அம்மா தனது மகள் குறித்து பெருமிதத்துடன் பேசிய வார்த்தைகள் தான் தற்போது சர்ச்சைக்கு தீனி போட்டு இருக்கிறது.

அவர் பேசும்போது, "என்னுடைய மகள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் போது நான் வேண்டாம் என்று தான் சொன்னேன். இரண்டு மூன்று வருஷமாகவே அந்த நிகழ்ச்சிக்கு போக முயற்சி பண்ணினா, ஆனா கிடைக்கல. இந்த கேம் ரொம்ப யோசித்து விளையாட வேண்டிய இடம். என் பொண்ணு ரொம்ப பகுத்தறிவு உள்ளவள், அதே நேரத்தில் டக்குனு கோபப்படுவாள். அதனால இது அவளுக்கு செட் ஆகாது என்று நினைத்தேன்," என்று கூறியுள்ளார்.

மேலும், "நிறைய பேர் அவளை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்புங்க, அவ ஜெயிச்சுட்டு வருவாள் என்று சொன்னாங்க. இப்ப கூட டைட்டில் அவள் ஜெயிக்கலன்னாலும், மக்கள் மனதை ஜெயித்திருக்கிறாள். இப்போ என் பொண்ணு தான் 'மக்கள் செல்வி'ன்னு எல்லாரும் பாராட்டுறாங்க," என்று அவர் கூறியது தான், நெட்டிசன்களை இரு தரப்பாக பிரித்துள்ளது.

இந்த வீடியோ வெளியாகியதும், சமூக வலைதளங்களில் கருத்து மழை கொட்டத் தொடங்கியது. "ரெட் கார்டு வாங்கிட்டு வெளியே வந்த பிறகும் இப்படி பேசுறாங்களே... இவங்களுக்கு கொஞ்சமாவது கூச்சம் இல்லையா?" "டைட்டில் வின்னர் வேற, மக்கள் செல்வி வேறன்னு புதுசா பட்டம் போடுறாங்களா?" என்று சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், "பார்வதியை போலவே அவளுடைய அம்மாவும் கெத்தாக பேசுறாங்க," "அம்மாவுக்கு அம்மாதான்... பொண்ணுக்காக நின்னு பேசுறது தப்பா?" என்று ஆதரவு கருத்துக்களையும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

இதோடு நிற்காமல், பார்வதியின் அம்மா கம்ருதீன் குறித்து பேசிய கருத்தும் கவனம் ஈர்த்துள்ளது."கம்ருதீன் ரொம்ப டக்குனு கோபப்படுவார். இவ்வளவு கோபம் யாருக்கும் நல்லது இல்லை. கொஞ்சம் அதைக் குறைச்சுக்கிட்டா நல்லா இருக்கும்," என்று கூறியுள்ளார்.

மேலும், பார்வதியின் திருமணம் குறித்து பேசும்போது, "என் பொண்ணு இப்போதான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்கா. மனசுல இருக்குற ஆசை கொஞ்ச நாள் போகட்டும். அதுக்கப்புறம் அவளுடைய பயணத்தைப் பார்த்து தான் நாங்கள் முடிவு எடுப்போம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுகளுக்குப் பிறகு, "பார்வதி மட்டுமல்ல, அவங்க அம்மாவும் பேசுறதுல கலக்குறாங்க" என்ற கமெண்ட்களும், "இது எல்லாமே தேவையில்லாத பில்டப்" என்ற விமர்சனங்களும் ஒரே நேரத்தில் வைரலாகி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+