ஆசிட் அடிச்சிடுவேன்னு மிரட்டுறாங்க! அதுவும் இவங்கதான்.. பரபரப்பான புகாரை வெளியிட்ட அர்ச்சனா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்ற அர்ச்சனாவை பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முத்துக்குமாரனின் ரசிகர்கள் ஆசிட் அடித்து விடுவேன் என்று மிரட்டி கமெண்ட் போட்டு இருப்பதாக அர்ச்சனா சில ஸ்க்ரீன் ஷாட்டை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு விளையாட்டு என்பதை மறந்து ஒரு சிலர் அதில் இருக்கும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்காக மற்றவர்கள் மீது கோபத்தை காட்டி வருவதை பார்த்திருப்போம். முதல் சீசனிலிருந்து இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஓவியாவின் ரசிகர்கள் ஜூலியை திட்டி வருவதும், ஆரியின் ரசிகர்கள் பாலாஜியை திட்டி வருவதும் பலர் பார்த்தது தான்.

அதுபோலத்தான் இப்போது கூட முத்துக்குமாரனின் ரசிகர்கள் அருணுக்கு சப்போர்ட் செய்ததற்காக அர்ச்சனாவை கெட்ட வார்த்தைகளால் திட்டி ஆசிட் அடித்து விடுவேன் என்று மிரட்டியும் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இதை அர்ச்சனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் ஏழாவது நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்து தன்னை எதிர்த்த புல்லி கேங்கை தனி ஆளாக எதிர்த்து நின்று கெத்து காட்டிய அர்ச்சனா ஏழாவது சீசன் டைட்டில் வெற்றி பெற்றார். ஆனால் வெற்றி பெற்ற பிறகு தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் எதிர்த்தவர்களோடு நட்பாக தான் பேசி பழகி வருகிறார்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் காதலர் அருண் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அருண் நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் அருணுக்கும் முத்துக்குமாரனுக்கும் அடிக்கடி பிரச்சினை முட்டிக்கொள்கிறது.
அருணுக்கு சப்போர்ட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனா ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் அருண் என்னுடைய நண்பர். ஒரு தோழியாக அருணுக்கு ஆதரவளித்து வருவதாகவும், அவரின் செயல்களுக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த பதிவிற்கு முத்துக்குமாரனின் புகைப்படத்தை வைத்த சில ஐடிக்களில் இருந்து அர்ச்சனாவை ஆபாசமாக திட்டியும் மிரட்டியும் கமெண்ட் போடப்பட்டிருக்கிறது.
அது குறித்து அர்ச்சனா வெளியிட்ட பதிவில் வாழ்க்கை என்பது கிரிக்கெட் மாதிரி தங்களுக்கு பிடித்த அணி கடைசி போட்டி விளையாடினாலும் அவர்களுக்கு ஆதரவளிக்க தவறுவதில்லை. எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. ஆசிட் வீசுவதாக மிரட்டுகிறார்கள். நான் பகிர்ந்து உள்ள ஸ்க்ரீன்ஷாட் ஒரு எக்ஸாம்பிள் தான்.
எனக்கு இதுபோல எக்கச்சக்கமான மிரட்டல்கள் வந்துள்ளது. இது எல்லை மீறிய ஒன்று. தவறான தகவல்களை பரப்புபவர்கள் கவனத்திற்கு நான் சம்பந்தப்பட்ட பக்கங்கள் மீதும், அதன் அட்மின்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன்னை பற்றி மோசமாக வந்து கமெண்ட்டுகளை ஸ்கிரீன்ஷாட் ஆகவும் அந்த பதிவில் அர்ச்சனா பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications