Bigg Boss Dinesh Arrested : பிக் பாஸ் பிரபலம் தினேஷ் நெல்லையில் அதிரடி கைது! காரணம் இதுதானாம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பெயர் வாங்கிய தினேஷ் இன்று நெல்லையில் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காதலித்து திருமணம்
நடிகர் தினேஷ் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான். இவர் பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதிலும் இவர் கதாநாயகனாக நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் இவருடன் நடித்த நடிகை ரச்சிதாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
விவாகரத்து
இருவரும் விவாகரத்திற்கு அப்ளை செய்திருக்கின்றனர். அதேபோல ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தினேஷ் அவருக்கு அதிகமாக சப்போர்ட் செய்து வந்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா எப்படியாவது டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டார்.
ரச்சிதாவை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ரச்சிதாவின் ஆசையை நிறைவேற்றுவேன், நாங்கள் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நம்பிக்கையோடு இருந்தார் ஆனால் ரச்சிதா அவரோடு சேர்ந்து வாழ்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் இப்போது தினேஷுக்கு இன்னொரு பஞ்சாயத்து வந்திருக்கிறது.
தினேஷ் கைது
நடிகர் தினேஷ் மீது கருணாநிதி என்பவர் புகார் கொடுத்து இருக்கிறார். தன் மகளிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பி கேட்ட போது தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில் "சீரியல் நடிகர் தினேஷ் தன்னுடைய மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மூன்று லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்றும், 2022ல் கொடுத்த பணத்தை கேட்ட போதெல்லாம் ஏமாற்றி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் பணத்தை கேட்டு போன தன்னை தாக்கியதாகவும் புகார் கொடுத்து இருந்த நிலையில் அவரை ( தினேஷ்) நெல்லை மாவட்டம் பணகுடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications