Dinesh: "என்னை யாரும் கைது செய்யல!" அந்த நடிகரின் சூழ்ச்சி தான் இது! பிக் பாஸ் தினேஷ் வெளியிட்ட வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 7' நிகழ்ச்சியில கலந்துக்கிட்டுப் பிரபலமான நடிகர் தினேஷ், நெல்லை மாவட்டம் பணகுடியில் போலீஸால் கைது செய்யப்பட்டதாக சமீபத்துல ஒரு செய்தி பரவ ஆரம்பிச்சுது! இந்தச் செய்தியை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி இது பற்றி பேசி வரும் நிலையில், தினேஷ் ஒரு வீடியோ வெளியிட்டு, அந்தச் செய்தியை மறுத்து, "என்னை யாரும் கைது செய்யல; இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு!"ன்னுச் சொல்லி இருக்காரு!

யார் இந்த தினேஷ்
நடிகர் தினேஷ் கோபால்சாமி சீரியல் உலகில் மிகவும் பிரபலமானவர். இவர் ஒரு நடிகராக பல சீரியல்கள்ல நடிச்சுப் புகழ் பெற்றவர். 'பிக் பாஸ்' வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியேப் பலருக்கும் இவரை நல்லாத் தெரியும். குறிப்பாக, இவர் 'பூவே பூச்சூடவா' போன்றப் பிரபல சீரியல்களில் நடிச்சிருக்காரு. இவர் நடிப்புக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு.
தினேஷ் வெளியிட்ட வீடியோ
தன்னைக் கைது செய்ததாக செய்தி பரவ, உடனே தினேஷ் ஒரு வீடியோ வெளியிட்டு, என்ன நடந்ததுன்னுப் பதிவு செஞ்சிருக்காரு. "இன்று காலையிலிருந்து என்னைப் பத்தி ஒருச் செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு. நான் போலீஸால் கைது செய்யப்படவும் இல்லை. என் மீது கொடுக்கப்பட்ட கம்ப்ளைன்டும் உண்மையானது கிடையாது." "நான் கடந்த சில வருடங்களுக்கு ஒரு சீட்டிங் வழக்கை தொடர்ந்து வருகிறேன். அந்த வழக்கு காரணமாக விசாரணைக்கு சென்று வருகிறேன். அது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த ஒரு நபர் மீதுதான் நான் வழக்கு கொடுத்தது".
இப்போது தன் மேல் தொடரப்பட்ட பொய் வழக்கோட பின்னணி என்னன்னு தினேஷ் சொல்லும்போது, "என் மீது COMPLAINT கொடுத்த நபர், கடந்த 22ஆம் தேதி நான் அந்த நபரைத் தாக்கியதாகப் புகார் கொடுத்திருக்கிறார்! ஆனா, அன்று நான் எங்கே இருந்தேன், என்ன நடந்தது என்பது பற்றி இன்று பணகுடி போலீஸ் STATION விசாரணை செஞ்சாங்க! அவங்களிடம் நான் எல்லா ஆவணங்களையும் ஒப்படைச்சிருக்கிறேன்."
"நானும் என்னுடைய அப்பாவும் அடிச்சதாச் சொல்றாங்க. ஆனா, என்னுடைய அப்பாவுக்கு 75 வயதாகிறது. அவர் எப்படி இருப்பார் என்று பிக் பாஸ் வீட்டிலேயே எல்லாரும் பார்த்திருப்பீங்க. அவ்வளவு வயதானவர் ஒருத்தவங்களை அடிச்சாங்கன்னு சொல்றாங்க... இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு!" "சினிமாவில தான் இது போல நடக்கும். ஆனா, இப்போ நிஜத்திலே நான் சந்திக்கிறேன்!"ன்னு வருத்தத்தோடச் சொல்லி இருக்காரு.
நாய்க்குட்டி செல்வின்
இந்த வழக்கை அவருக்கு எதிராத் தொடர ஒரு பெரியக் காரணம் இருக்குன்னுச் சொல்லி ஒரு நடிகரோடப் பேரையும் தினேஷ் அண்ணன் சொல்லி இருக்காரு! "இதற்குக் முக்கியமானக் காரணம் என்னவென்றால், பணகுடி பக்கத்தில் இருக்கும் ஒரு நபர். அவரும் ஒரு நடிகர் தான். அவர் சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'நாய்க்குட்டி' என்றப் படத்தில் நடித்திருந்தார், அவரை அந்தப் பகுதியில் எல்லாரும் 'நாய்க்குட்டி செல்வின்'*னு சொல்ற நபர்தான்!" "அவரும் நான் தொடர்ந்த வழக்கில் எதிர் தரப்பாக இருக்கிறார். அதனால், இந்த வழக்கு அவருக்கு எதிராகத் திரும்புகிறது என்று நினைத்து, என் மீது இப்படித் தவறான, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கை ஸ்டார்ட் பண்றார்."
"ஒரு நடிகர் என்றால் ஈஸியாக மிரட்டிவிடலாம், மீடியாவுல அவர் பெயரை கெடுத்துவிட்டால் அவருடைய வாழ்க்கை முடிந்துவிடும் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் நடந்தது தவறு!"என்று தினேஷ் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications