முதல் கணவர் மரணம், கொலை குற்றச்சாட்டு.. பாவனியின் வாழ்க்கையில் நடந்த துயரம்.. திருமணத்தில் பச்சை புடவை சென்டிமென்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனியின் திருமணம் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே பாவனி பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். அவர் 2017ல் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதற்குப் பிறகு பாவனி பற்றி பல்வேறு வதந்திகள் பரவி இருந்தன. அது குறித்து பாவனி பேசியிருந்தார். பாவனி பற்றி சமூக வலைதளத்தில் பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில் அது பற்றி பார்க்கலாம்.
பாவனி ரெட்டி சோசியல் மீடியா பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கினார். சன் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களில் சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல பிரபலத்தை கொடுத்தது.

பிக்பாஸ் ஜோடி
அந்த நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு மேலாக தாக்கு பிடித்திருந்தார். கடைசி நாள் வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்திருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பாவனியை ஒருதலையாக அமீர் காதலித்து வந்தார். அதற்கு பிறகு அமீர் மற்றும் பாவனி இருவரும் பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்றதும் பாவனி தன்னுடைய காதலை அவரிடம் தெரிவித்து இருந்தார்.
முதல் திருமணம்
அதுபோல பாவனி ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது சீரியலில் ஒன்றாக நடித்த நடிகர் பிரவீன் குமாரை கடந்த 2016 இல் காதலித்து வந்தார். அப்போது 2016இல் ஒரு பங்க்ஷனில் எங்கேஜ்மென்ட் செய்து கொண்டனர். பிறகு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் பிரவீன் குமார் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
வாக்குவாதம்
அந்த நேரத்தில் பாவனி தான் அவரை கொலை செய்துவிட்டார் என்று கூட சில வதந்திகள் பரவி வந்தது. அது குறித்து பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளக்கம் கொடுத்திருந்தார். சம்பந்தப்பட்ட நாளில் எனக்கும் பிரவீனுக்கும் வாக்குவாதம் வந்தது. நான் பேசிக் கொண்டு இருந்தபோது பிரவீன் ரொம்ப கோபப்பட்டு கொண்டே இருந்தார். கையில் இருந்த பாட்டிலை எல்லாம் உடைத்துவிட்டார். இதனால் நான் பயந்து போய் ஒரு ரூமுக்குள் கதவை பூட்டிக் கொண்டேன்.

கணவர் தற்கொலை
கதவை திறக்க சொல்லி பிரவீன் சொல்லிக் கொண்டே இருந்தார். நான் வெளியே வந்தால் பிரச்சனை அதிகமாகும் என்று உள்ளே அழுது கொண்டிருந்தேன். பிறகு சிறிது நேரம் கழித்து எந்த சத்தமும் இல்லை என்பதால் கதவை திறந்து வெளியே வந்தேன் அப்போது பிரவீன் இன்னொரு அறையில் தற்கொலை செய்து என் கண் முன்பே உயிரற்ற உடலாக கிடந்தான். அப்போது பிரவீன் மீது தான் எனக்கு கோபமாக இருந்தது. எதற்காக என்னை ஏமாற்றிவிட்டு இப்படி செய்தாய் என்றுதான் நான் ஒவ்வொரு நாளும் அவனை திட்டிக் கொண்டே இருக்கிறேன்.
வதந்திகள்
அந்த நேரத்தில் சிலர் என்னை மேலும் காயப்படுத்துற மாதிரி அவனுடைய தற்கொலைக்கு காரணம் நான் தான் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் பிரவீன் உடைய குடும்பத்தினர் என்னை புரிந்து கொண்டதால் அவர்கள் நாங்கள் உனக்காக இருக்கிறோம் என்று சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் பாவனி மற்றும் அமீர் திருமணத்தில் பாவனி பச்சை வண்ண பட்டுப்புடவை அணிந்திருந்தார்.

பட்டு புடவை
இந்த புடவை குறித்து அவர் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதை பற்றி பேசும்போது இந்த புடவை ஒரு கோவிலில் அம்மனுக்கு கட்டி இருந்தது. இந்த புடவையை என் திருமண நாளில் கட்ட வேண்டும் என்று நினைத்தேன். எனது இந்த திருமணம் நிலைக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று எமோஷனலாக பேசி இருக்கின்றார்.

கையில் டாட்டூ
முதல் கணவரின் பெயரை பாவனி இன்னும் கையில் டாட்டூ போட்டு இருக்கும் நிலையில் அது குறித்து அமீர் பேசும் போது பாவனி இன்னும் அவருடைய முதல் கணவரை மறக்கவில்லை. நான் இந்த டாட்டூவை அழித்துக் கொள்ளவா? என்று ஒரு முறை கூட என்னிடம் கேட்கவே இல்லை. அவர் அவருடைய முதல் கணவரை இன்னமும் காதலிக்கிறார். என்னிடம் கூட ஏதாவது சின்ன பிரச்சனை என்றாலும் நான் ராசி இல்லாதவள், எனக்கு திருமண வாழ்க்கை செட்டாகாது என் கூட யாரும் கடைசி வரைக்கும் இருக்க முடியாது என்று அழுது கொண்டிருப்பார். ஆனால் நான் எந்த சூழ்நிலையிலும் பாவனியை விட்டு விலக மாட்டேன் என்று அமீர் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications