Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க மனசுல நினைச்ச மாதிரி கிடையாது.. உண்மையை உடைத்த பிக்பாஸ்.. பெட்டியை தூக்க போகிறவர் இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான 102 வது நாளின் முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.

கடைசி வாரத்தில் இதுவரைக்கும் வாழ்ந்த நாட்கள் மற்றும் டாஸ்க்களின் நினைவுகளாக பிக் பாஸ் வீட்டிற்குள் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

அமுதவாணன் தனக்கு பிடித்த பொருளை எடுத்ததும் பிக் பாஸ் எதிர்பாராத பதிலை கூறியிருக்கிறார்.

இதுவரைக்கும் அமுதவாணன் உங்களுடைய மனதில் நீங்கள் ஒரு காமெடியன் என்று நினைத்து இருந்தாலும் என்னுடைய அமுதா ஒரு முழு கலைஞர் என பிக் பாஸ் பாராட்டி இருக்கிறார்.

மீண்டும் வந்த நினைவுகள்

மீண்டும் வந்த நினைவுகள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் இருக்கிறது. கடைசி வாரத்தில் இறுதி போட்டியாளராக இருக்கும் விக்ரமன், அசீம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி இவர்களுக்கு இந்த வாரத்தில் புது டாஸ்க் பிக்பாஸ் கொடுத்திருக்கிறார். இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் வாழ்ந்த நினைவுகளோடு உடைய புகைப்படங்கள் மற்றும் டாஸ்க்களை நினைவுபடுத்தும் விதமாக பிக் பாஸ் வீடு முழுக்க அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

மறக்க முடியாத பொம்மை

மறக்க முடியாத பொம்மை

கடைசி வாரத்திற்குள் நுழைந்திருக்கும் இறுதிப்போட்டியாளர்கள் ஐந்து பேரும் தங்களுக்கு இந்த வீட்டில் மறக்க முடியாத மற்றும் பிடித்துப்போன பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் சொன்னதும் அமுதவாணன் முதல் ப்ரோமோவில் தனக்கு பிடித்த பொருளை எடுத்து இருக்கிறார். அந்த வகையில் அவர் யாரும் எதிர்பார்க்காதபடி இந்த வீடு இரண்டாவதுற்க்கு காரணமே பொம்மை டாஸ்க் தான். அதனால் இந்த பொம்மையை எடுத்துக் கொள்கிறேன் என்று அமுதவாணன் கையில் தூக்கி பேசிக்கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸின் பாராட்டு

பிக் பாஸின் பாராட்டு

அங்கே இங்கே என அனைத்து புகைப்படங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு அமுதவாணன் பொம்மைகளை எடுத்தது பலருக்கும் வியப்பாக இருந்தாலும், அதை பிக் பாஸ் வேறு விதமாக பாராட்டி இருக்கிறார். அமுதவாணன் நீங்கள் இதுவரைக்கும் உங்கள் மனதில் ஒரு காமெடியன் என்று நினைத்துக் கொண்டு இருக்கலாம் ஆனால் நான் என்னுடைய அமுது ஒரு முழு கலைஞன் என்று மனதார பாராட்ட, உணர்ச்சிவசப்பட்டு அமுதவாணன் மேடையில் முத்தமிட்டு பிக் பாஸுக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறார். இந்த பிரமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

பெட்டி யாருக்கு

பெட்டி யாருக்கு

இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் பணம் மூட்டை வைத்த கொஞ்ச நேரத்தில் கதிரவன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மூன்று லட்சத்தோடு எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். அதனால் மீண்டும் நேற்று பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் கடைசியாக ஷிவின் தான் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறப் போகிறார். அதுவும் 11 லட்சத்தோடு வெளியேறப் போகிறார் என்று தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் மைனாவும் பணப்பெட்டியை எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. முதல் இடத்தை பெறுவதற்கு கூட அவருக்கு அதிகமான வாய்ப்பு இருப்பதால் அது கண்டிப்பாக ஷிவின் எடுக்க மாட்டார் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்கள் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+