இன்று வறுபட போவது உறுதி.. கமல் பேசும் போது அதை மட்டும் கவனிச்சிங்களா? மாஸான பெர்பாமன்ஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல 69 ஆவது நாளில் முதல் பிரமோவில் கமல் வந்துவிட்டார்.
இந்த வாரம் நடைபெற்ற சூழ்ச்சி நேர்மையை கையில் எடுத்து பஞ்சாயத்தை தொடங்க இருக்கிறார்.
இன்றைய பிரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் இன்று அப்படியே குறும்படத்தையும் போட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

இது எதிர்பார்த்த பிரச்சினை தான்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 69 நாள் தொடங்கி இருக்கிறது இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கம்போல கமல் இந்த வார பஞ்சாயத்துக்களை பேசுவதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த விக்ரமன் மற்றும் ஜனனி பிரச்சனையை கமல் கையில் எடுத்திருக்கிறார். இதைப்பற்றி ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும் போட்டியாளர்களுக்கு ஒரு குறும்படம் போடலாம் என பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.

பொய் சாட்சிகள்
இந்த வாரம் நடைபெற்று வந்த சொர்க்கவாசிகள் மற்றும் நகரவாசிகள் டாஸ்க்கில் நகரவாசிகள் அணியில் இருந்த விக்கிரமன் சொர்க்கத்திற்குள் சென்று மீண்டும் முதல் ஆளாக கோட்டை தொட்டு வெளியே வந்து விட்டார். ஆனால் அவரை தடுக்க வந்த தனலட்சுமி,விக்ரமன் மற்றும் ஜனனி இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறும் போது ஜனனிதான் முதலில் கோட்டை தொட்டு வெளியே வந்தார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஜனனி தான் முதலில் வெளியே வந்து கையை வைத்தாள் அதை நானும் பார்த்தேன் என்று அசீம் வேற ஆஜராகி இருக்கிறார்.

விக்ரமனின் பெருந்தன்மை
விக்ரமன் எவ்வளவோ சொல்லி பார்க்கிறார் நான் தான் முதலில் கோட்டைத் தொட்டேன் என்று ஆனாலும் மொத்த போட்டியாளர்களும் விக்கிரமனுக்கு எதிராக பேச, கடைசியில் நான் மீண்டும் நகரவாசியாகவே இருந்து விடுகிறேன் ஜனனி வேணுமென்றால் சொர்க்கவாசியாக மாறட்டும் என்று விக்ரமன் விட்டுக் கொடுக்க ஜனனி சொர்க்கவாசியாக மாறி இருக்கிறார். கடைசியில் அடுத்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ சோனுக்கு ஜனனியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்கள் பலர் இது விக்ரமனுக்கு கொடுக்க வேண்டியது. அதை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று தரமான சம்பவம் இருக்கு
இதைக் குறித்து இன்றைய எபிசோடுக்காண முதல் பிரமோவில் கமல் பேசி இருக்கிறார். நேர்மையாக தீவிரமாக விளையாடிய சில பேர் வெளியே இருக்கிறார்கள். சில நேரம் நேர்மையான போராட்டங்களில் சூழ்ச்சி வீழ்த்தி விடுகிறது. ஆனால் சூழ்ச்சி எது? நேர்மை எது? என பிரித்து பார்க்க வேண்டியது நம்முடைய கடமை இல்லையா? பிருச்சிடலாமா என கேட்டிருக்கிறார். இதில் கமல் பேசும்போது நேர்மையைப் பற்றி பேசும்போது விக்ரமனையும் சூழ்ச்சி என பேசும்போது ஜனனியையும் கேமரா ஃபோக்கஸ் செய்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் ஓகே ஆண்டவர் இன்று தரமான சம்பவம் பண்ண காத்திருக்கிறார் என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications