Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசி நேரத்தில் அசீம் பற்றி பிரசாந்த் போட்ட பதிவு.. கேள்விகளை எழுப்பி வச்சி செய்யும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 102 வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்சியில் இருக்கும் அசீம் பற்றி சினிமா விமர்சகர் பிரசாந்த் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தான் இதுவரைக்கும் பிக் பாஸ் பார்த்ததில்லை ஆனா அசீம் நல்லவன் என்று கடைசி வாரத்தில் அசீமுக்கு ஆதரவாக பிரசாந்த் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை அசீமுக்கு ஆதரவாக வெளியிட்டு வரும் பிரசாந்தை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் அதிகமாக கிண்டல் செய்து வருகின்றனர்.

விக்ரமனுக்கு ஆதரவாக அறம் வெல்லும் எனும் கோலம் பரவி வரும் நிலையில் அதில் தன்னுடைய முகத்தை வரைந்து இருக்கலாம் என ரசிகர்களை சீண்டிப் பார்த்திருக்கிறார்.

கடைசி கட்ட வாக்கு சேகரிப்பு

கடைசி கட்ட வாக்கு சேகரிப்பு

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தில் 5 போட்டியாளர்கள் மட்டுமே எட்டி இருக்கின்றனர். அவர்களுக்கு அவர்களுடைய ரசிகர்களும் குடும்பத்தினரும் அதிகமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். அதில் ரசிகர்களால் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்களாக இருந்து வரும் விக்ரமன், அசீம், ஷிவின் போன்றோருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான பிரபலங்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். விக்ரமனுக்கு அவர் இருக்கும் கட்சியை சார்ந்தவர்களும் ரசிகர்களும் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். அசீமிற்க்கு அவருடைய ரசிகர்கள் குடும்பத்தினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் அசீமிற்க்கு ஆதரவாக PR டீம் செயல்படுவதாகவும் பல்வேறு குற்றசாட்டுகள் குவிந்து வருகின்றது.இந்த நிலையில் சினிமா விமர்சகர் பிரசாந்த்தும் அசீமிற்க்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஷிவினுக்கு ஆதரவாக திருநங்கைகள் குரல் கொடுத்து வருகிறார்கள். கடந்த சீசனில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்துவும் ஷிவினுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்த நிலையில் அசீமிற்க்கு ஆதரவாக பிரபல சினிமா விமர்சனம் ஆன பிரசாந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லை ஆனால் அசீம் நன்றாக விளையாடுகிறார்கள் என்று மக்கள் சொல்லி கேள்விப்பட்டேன் அதனால் மக்கள் செல்வன் அசீம் தான் என்று பதிவிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அசீம் இந்த சீசனின் வெற்றியாளர் என்று பதிவிட்டு வரும் நிலையில் அசீமிற்க்கு ஆதரவாக பல்வேறு ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகி வருகின்றது. இந்த நிலையில் பிரசாந்த் பதிவை சமூக வலைத்தளத்தில் அதிகமான நெட்டிசன்கள் கலாய்த்து பதிவு வெளியிட்டு வருகின்றனர். ஒரு சினிமா விமர்சகர் திரைப்படத்தை பார்க்காமலே விமர்சனம் செய்வாரா? அதுபோல பிக் பாஸை பார்க்காமலே ஒருவருக்கு ஆதரவு கூற முடியுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

அந்த சப்போர்ட் இருக்கிறதா

அந்த சப்போர்ட் இருக்கிறதா

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே அசீமுடைய சண்டைகளும் காரணம் என்று ரசிகர்கள் அவருக்கு அதிகமான ஆதரவு கொடுத்து வருகின்றனர். அசீம் மற்றும் தனலட்சுமி இல்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமே இருக்காது, அது அமைதியாகவே சென்று இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக் கொண்டிருக்கும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அசீமிற்க்கு ஆதரவாக PR டீம் செயல்படுகிறது என்று பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கிறது.அசீமை ஒரு கதாநாயகனாக காட்ட பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் PR டீம் அரசியல் கட்சிகளுக்கு உதவுவது போல பிக்பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் அசீமை பிரபலப்படுத்தி வருகிறது என்று பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வலைத்தளத்தில் கலாய்ப்பு

வலைத்தளத்தில் கலாய்ப்பு

இந்த நிலையில் கடைசி நேரத்தில் சினிமா விமர்சகர் பிரசாந்த் அசீமிற்க்கு ஆதரவு தெரிவித்து விக்ரமன் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கலாய்த்து கொண்டிருப்பதை தொடர்ந்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். இதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கலாய்த்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த சீசனில் டைட்டில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று யாராலும் உறுதியாக கூற முடியாத வகையில் தான் குழப்பமான தகவல்கள் ஒவ்வொரு முறையும் வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு கடைசி நேரத்தில் வைத்திருக்கும் பண போட்டியை தூக்கிக்கொண்டு யார் செல்ல போகிறார்கள் என்றும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது இப்ப வரைக்கும் கடைசியாக பண பட்டியில் 7, 46,000 வந்திருக்கிறது. யார் வெளியேற இருக்கிறார் யார் ஜெயிக்க எதிர்பார்ப்பு ஒரு பக்கம் என்றால் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் ஆதரவை பற்றியும் சமூக வலைத்தளத்தில் ஒரு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+