இது தவறான உதாரணம்.. அசீமுடைய வெற்றியை பற்றிய பதிவை பகிர்ந்த விஜே மகேஸ்வரி.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது.
இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் பலருடைய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அசீம் ரசிகர்கள் ஒரு பக்கம் இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தாலும் இது தரமான தவறான முன் உதாரணம் என்று நெட்டிசன்கள் அதிகமானோர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி ரசிகர்கள் பகிர்ந்த பதிவை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

ரசிகர்களின் விருப்பம்
தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இறுதி வாரத்தில் 6 போட்டியாளர்கள் மட்டுமே நுழைந்தனர். அதில் கதிரவன் பணமூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேற, அடுத்ததாக அமுதவாணன் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறினார். கடைசி வார எலிமினேஷனில் மைனா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இறுதி போட்டியாளராக மூன்று போட்டியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். விக்ரமன், ஷிவின், அசீம் என மூவரும் இறுதிப் போட்டியாளர்களாக இருந்து வந்தனர். இதில் விக்ரமன் அல்லது ஷிவின் வெற்றி பெற வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வந்தனர்.

மரியாதை இல்லாத வார்த்தைகள்
அசீம் என்னதான் பிரச்சனை என்றால் அனைவருக்கும் ஓடி சென்று உதவி செய்தாலும், சண்டை வென்று வரும்போது அடுத்தவர்களை தரக்குறைவாக பேசுவது வாடி போடி என்று மரியாதை இல்லாமல் பிறருடைய மரியாதையை கெடுக்கும் விதமாக வார்த்தைகளை உபயோகிப்பது, பாடி லாங்குவேஜ் காட்டுவது என்பது போன்ற பல தவறான செயல்களை செய்து கொண்டிருந்ததால் இவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று அதிகமான முறை சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டு இருந்தது.

அதையெல்லாம் யோசிப்பது கிடையாது
ஒவ்வொரு வாரமும் கமல் முன்னிலையில் இவர் திட்டு வாங்கிக் கொண்டு இருந்தாலும், அடுத்த நாள் வழக்கம் போல தன்னுடைய கேரக்டருக்கு இவர் திரும்பி விடுவார். இதுகுறித்து பலர் இவரை திட்டி வந்தாலும் இவருடைய ரசிகர்கள் இதைத்தான் ரசிக்கவும் செய்தனர். ஆனால் இவரால் பாதிக்கப்படும் போட்டியாளர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் இதை பார்ப்பதால் என்ன நினைப்பார்கள் என்கிற மனநிலையை அசீம் யோசித்து கூட பார்க்கவில்லை என்று பலமுறை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது விஜே மகேஸ்வரி கூறியிருந்தார். அது மட்டும் இலலாமல் ரசிகர்களும் இதே கருத்தை சமூக வலைத்தளத்தில் கூறி இருக்கின்றனர்.

பதிவை பகிர்ந்த மகேஸ்வரி
ஆரம்பத்தில் விஜே மகேஸ்வரிக்கும் அசீமுக்கும் சண்டை ஏற்படும் போது மகேஸ்வரியை பற்றி அசீம் அதிகமாக திட்டி இருந்தார். அவர் வெளியேறியதற்கு பிறகு அவருடைய மகன் இதை கூறி அவரிடம் கேட்டதாக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த போது அசீம் மகேஸ்வரி இடம் சண்டையிடும் போது அவர் கூறி அழுதார். இந்த நிலையில் டைட்டில் அசீமிற்க்கு கொடுத்து இருப்பது தவறான முன்னுதாரணம் என்று பலர் கருத்து தெரிவித்து வரையும் நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், நிகழ்ச்சியின் படி அசீமிற்கு பட்டத்தை கொடுத்து இருக்கலாமா? அதை அவரால் கொஞ்சம் கூட அனுபவிக்க முடியவில்லை கண்டிப்பாக கமல் சார் இதை கனத்த இதயத்துடன் தான் செய்து இருப்பார். இதற்கு இந்த புகைப்படமே சான்று என்னை பொறுத்தவரை விக்ரமன் மற்றும் ஷிவின் தான் வெற்றியாளர் என்று பதிவிட, இதற்கு மகேஸ்வரி உண்மை என்று அந்த பதிவை பகிர்ந்து கருத்து கூறியிருக்கிறார்.

பல பதிவுகள்
அதுபோல வலைத்தளம் ஒன்றில் அசீம் வென்றது சமுதாயத்திற்கு ஒரு தவறான உதாரணம் என்று செய்தி ஒன்று எழுதப்பட்டு இருப்பதையும் மகேஸ்வரி தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை தனது twitter பதிவு பக்கத்தின் மூலம் பதிவாக பின் செய்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அசீமிற்கு எதிராக பல பதிவுகளை தொடர்ந்து தனது titter பக்கத்தில் ரீ ட்வீட் செய்து வருகிறார். இதை விக்ரமன் மற்றும் ஷிவினுடைய ரசிகர்களும் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் வழக்கம் போல மகேஸ்வரியின் செயலை அசீமுடைய ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications