வெளியேறும் முன்பு அமுதவாணன் கூறிய வார்த்தை.. கதறி அழுத விக்ரமன்.."அதை"புட்டு புட்டு வைத்து விட்டாரே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட்டில் அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தார்.
அமுதவாணன் வெளியேறும்போது விக்ரமனிடம் சில வார்த்தைகளை பேசி இருந்தார்.
அமுதவாணனின் வார்த்தைகள் மற்றும் வெளியேற்றத்தை பார்த்து விக்ரமன் முதல் முறையாக கதறி அழுது இருக்கிறார்.
விக்ரமனிடம் ஆரம்பத்தில் எத்தனையோ முறை அமுதவாணன் சண்டை இட்டு இருந்தாலும் கடைசி நேரத்தில் விக்ரமனின் வெற்றியை குறித்து அமுதவாணன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

கதிரவனின் எதிர்பாராத செயல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வந்தது. இந்த வார தொடக்கத்தில் ஆறு போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தனர். அந்த நிலையில் கதிரவன் ஆரம்பத்தில் பிக் பாஸ் பணம் மூட்டை வைத்ததும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மூன்று லட்சத்தோடு தூக்கிக்கொண்டு வெளியேறி இருந்தார். அனைவரும் தடுத்தாலும் கதிரவன் எனக்கு இது போதும் என்று கூறிக்கொண்டு வெளியேறி இருந்தார்.

அமுதவாணனின் முடிவு
அதற்குப் பிறகு 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் மீண்டும் வைக்கப்பட்ட பணப்பெட்டியில் 13 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறி இருந்தார். அவர் வெளியேறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு நான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறப் போகிறேன் என்று சொன்னதும் பலர் இது நல்ல முடிவு அமுதவாணன் தான் சரியாக முடிவை எடுத்திருக்கிறார். ஏற்கனவே டைட்டில் வின்னர் விக்ரமன் அல்லது அசீம் தான் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அமுதவாணனின் இந்த செயல் சரியானது என்று பலரும் பாராட்டி வந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் பலர் பாராட்டி இருந்தாலும் வெளியேற்றம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. காரணம் தன்னுடைய காமெடியால் பிக் பாஸ் வீட்டை சிரிக்க வைத்து கொண்டிருந்தார்.

பெரிய மாற்றம் வரும்
இந்த நிலையில் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு அமுதவாணன் வெளியேறுவதற்கு முன்பு விக்ரமனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது கலங்கிய கண்களோடு பேசிய அமுதவாணன், "எனக்கு ரொம்ப எல்லாம் தெரியாது, நான் அப்டேட் எல்லாம் கிடையாது, காமெடியை டான்ஸ் ஷோ பண்ணுவேன் அவ்வளவுதான். ஆனால் நீங்க அறிவார்ந்த ஒரு ஆளாக இருக்கீங்க, எனக்கு கிடைக்கிற வெற்றியை விட உங்களுக்கு கிடைக்கணும். எனக்கு கிடைச்சா என்ன சுத்தி இருக்க கொஞ்சம் பேருக்கு ஹெல்ப் பண்ணுவேன். ஆனா அதை முன்னாடியே செஞ்சிட்டு தான் இருக்கேன். அதை எப்படியாவது பண்ணிட்டு தான் இருப்பேன். எல்லோருக்கும் உதவி பண்ணுவேன். அதற்கான வழி எப்படி வந்துவிடும். ஆனால் நீங்க ஜெயிக்கும் போது பெரிய மாற்றமே வரும்.

மனப்பூர்வமான பாராட்டு
இது மூலமா உங்க கருத்து போய் சேர்ந்ததுன்னா பெரிய மாற்றம் வரும் அதுதான் நல்லது. அதுதான் கரெக்ட் அதனால ஒரு நல்ல விஷயம் நடந்துச்சுன்னா சந்தோஷம். மத்தபடி நம்ம கலாச்சி பேசி இருக்கிறோம், கோவப்பட்டு இருக்கிறோம். இதெல்லாம் ரொம்ப சிம்பிளான விஷயம் தான்" என உருக்கமாக பேசியிருக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த விக்ரமன் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆரம்பத்தில் இருந்தாலும் பிறகு அவரையும் அறியாமல் கதறி அழுதுவிட்டார். இந்த நேரத்தில் அசல் மற்றும் சக போட்டியாளர்கள் விக்கிரமனை தேற்றுகின்றனர்..இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை யாரும் எதிர்பார்க்காததால் கடைசி நேரத்தில் அமுதவாணனுக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமுதவாணன் தன்னுடைய ஏவி ஒளிபரப்பாகும் போது விக்ரமனை பார்த்து நீ ஜெயிக்கணும் என்று கூறியிருந்தார். அதையே வெளியே செல்லும்போதும் கூறியிருக்கிறார் என்று அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications