யுகேந்திரன் பிக் பாஸ் போனது இதற்காகத்தான்.. இவ்வளவு நாள் தான் அங்கு இருப்பார்.. மனைவி ஓபன்டாக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் யுகேந்திரன் பற்றி அவருடைய மனைவி பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் யுகேந்திரன் எதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனார் என்பது பற்றியும் எத்தனை நாட்கள் பிக்பாஸுக்குள் இருப்பார் என்பது போன்றும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதோடு இன்று பிக் பாஸ் வீட்டிற்கு யுகேந்திரன் விதியை மீறிவிட்டார் என்று அவர் மீது பிக் பாஸ் ஆக்சன் எடுத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த சீசன் 2 வீடுகள் இருக்கும் நிலையில் முதல் நாளே கேப்டனை கவர தவறிய பாவா செல்லத்துரை, நிக்ஸன், ரவீனா, வினுஷா, அனன்யா, ஐஸ் போன்ற 6 போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்றும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் சொல்வதைதான் சமைக்க வேண்டும் என்றும் ரூல்ஸ் போடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த யுகேந்திரன் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து சமைக்க வந்தவர்களுக்கு உதவியாக சமையல் செய்திருந்ததால் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அவர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லி இருந்தார்.

அதே நேரத்தில் நேற்று இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்யப்பட்டது. அதில் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் ஆகி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் நடிகர் யுகேந்திரனின் மனைவி பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் யுகேந்திரன் பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார். அதில் யுகேந்திரன் மலேசியா வாசுதேவனின் மகன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பதும், பாடகர் என்பதும் ஒரு சிலருக்கு தான் தெரியும். அதனால்தான் தன்னை பற்றி ஒரு அடையாளம் உருவாக்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல யுகேந்திரனுக்கு குடும்பம் என்றால் ரொம்ப பிடிக்கும். குடும்பத்தை பற்றி அவர் யோசிக்காத வரை சரியாக விளையாடுவர். குடும்பத்தை பற்றி அவர் நினைக்க தொடங்கிவிட்டால் வீட்டுக்கு போக வேண்டும் என்று நினைத்து விடுவார். அதுபோல அவர் வீட்டில் இல்லாததால் எங்கள் வீட்டில் கிச்சனை இப்போது மூடிவிட்டேன். ஏனென்றால் எங்க வீட்டில் வித்தியாசமாக அவருக்காக தான் சமையல் செய்ய வேண்டும். எங்க பசங்க எதுவென்றாலும் சாப்பிடுவாங்க. அதனால் அவர் வருவது வரைக்கும் கொஞ்ச நாள் கிச்சன் மூடி இருக்கும் என்பது எங்களுக்கு சந்தோசம் தான்.
அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததும் யுகேந்திரன் முதலில் பாடகர் வெங்கட் பிரபு மற்றும் சரண் போன்றவரிடம் தான் சொன்னாரு. அவங்க முதலில் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னாங்க. பிறகு சரி நீ பார்த்து இருந்துட்டு வா என்று அனுப்பி வச்சாங்க. இந்த சீசனில் நிறைய ரசிகர்களுக்கு பிரபலமான இளம் தலைமுறையினர்கள் இருப்பதால் யுகேந்திரன் சீக்கிரமாக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் அவர் இரண்டு வரம் தான் உள்ளே தாக்கு பிடிப்பார் என்று தெரிகிறது என்றும் யுகேந்திரனின் மனைவி அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications