பூர்ணிமாவிடம் இதனால்தான் பேசவில்லையா? நடிகை இந்துஜா வெளியிட்ட திடீர் பதிவு.. குவியும் அறிவுரைகள்
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் பட ப்ரொமோஷனுக்காக வந்த இந்துஜா பூர்ணிமாவிடம் சரியாக பேசவில்லை என்று பூர்ணிமா வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பூர்ணிமாவை இந்துஜா அன் ஃபாலோ செய்து விட்டார் என்று ரசிகர்கள் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். அது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நடிகை இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு பூர்ணிமா பிரச்சனைக்கு ரியாக்ட் செய்யும் விதமாக ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
இந்த சீசனில் பிக் பாஸில் பூர்ணிமா வரும்போது செமையாகவே கேம் விளையாட போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருந்தனர். ஆரம்பத்தில் சில நாட்கள் நன்றாக இருந்த பூர்ணிமா பிறகு மாயா கேங்கோடு சேர்ந்து விளையாடியது பூர்ணிமாவின் இமேஜை மொத்தமாக காலி செய்தது. முதல் நாள் தைரியமாக தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்று பூர்ணிமா பேசிய விதம் அவருடைய விளையாட்டு குறித்து ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து பிரதீப்க்கு எதிராக பூர்ணிமா சிவப்பு கொடிகாட்டி ரசிகர்களின் மத்தியில் வெறுப்பை வாங்கி கட்டிக் கொண்டார். அதுவும் எப்போதும் பூர்ணிமா மற்றும் மாயா சேர்ந்து கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவது இருவரும் சேர்ந்து பிற போட்டியாளர்களை காலி பண்ணுவதற்காக பிளான் போடுவது போன்ற பல செயல்கள் ரசிகர்களின் மத்தியில் பூர்ணிமாவிற்கு நெகட்டிவ் இமேஜை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அதுபோல ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசனிடம் பூர்ணிமா திட்டுவாங்கி அழுது கொண்டு இருப்பதும் அடுத்த நாள் பழையபடி தன்னுடைய விளையாட்டை தொடங்குவதுமாக இருக்கிறார். இந்த நிலையில் பார்க்கிங் பட ப்ரொமோஷனுக்காக நடிகை இந்துஜா மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இருவரும் வந்திருந்தனர். இந்துஜாவும் பூர்ணிமாவும் கல்லூரி படிக்கும் போது இருந்தே நெருங்கிய நண்பர்கள். இது பற்றி பற்றி பூர்ணிமா ஒரு விருது வாங்கிய நிகழ்ச்சியில் சொல்லி இருப்பார்.
ஆனாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த இந்துஜா பூர்ணிமாவை கண்டு கொள்ளவே இல்லை. மற்ற போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிய அளவு கூட பூர்ணிமாவிடம் பேசவில்லை. இதனால் பூர்ணிமா ரொம்பவே மனசு உடைந்து போய்விட்டார். அப்போது இது பற்றி விஷ்ணு மற்றும் மாயாவிடம் புலம்பி இருந்தார். அதில் என்னமோ நடக்குது, எனக்கு தெரியல. நாங்கள் நல்ல நண்பர்கள். ஆனால் இந்துஜா என்னிடம் சரியாக பேசவே இல்லை.
வெளியில் நடப்பதை குறித்து நான் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவள் என் கண்ணை பார்த்து கூட பேசவில்லை. ஏதோ தப்பா இருக்கிறது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அவள் என்னை பார்த்தால் எப்படி நடந்து கொள்வாள் என்று எனக்கு தெரியும். இது ரொம்பவே கஷ்டமா இருக்கு என்று பீல் பண்ணி பூர்ணிமா பேசியிருந்தார்.

இந்த நிலையில் பூர்ணிமா சொல்வது உண்மையா என்பதை சோதிப்பதற்காக இந்துஜாவின் இன்ஸ்டாகிராம் ஐடியில் அவருடைய பாலோவர்ஸை செக் பண்ணி பார்த்த ரசிகர்கள் அங்கு இந்துஜா பூர்ணிமாவை பாலோ செய்யவில்லை. இதனால் பூர்ணிமாவை இந்துஜா அன்பாலோ செய்து விட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதோடு அதற்கு ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதில்," சரியானதை செய்ய நேரம் எப்போதும் சரியானது" என்று கூறியிருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடுநிலை தன்மையோடு நடந்து கொண்டது பாராட்டுக்குரியது என்று கூறி வருகின்றனர்.
இன்னும் ஒரு சில ரசிகர்கள் சரியான தலைப்பு, அதோடு எதிர்மறையான நபரை புறக்கணிப்பது சரியானது என்று கூறியிருக்கின்றனர். அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இந்துஜா பூர்ணிமாவை புறக்கணித்ததை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஒரு சில ரசிகர்கள் என்னதான் பிரச்சனை என்றாலும் பூர்ணிமா செய்வது தவறாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை பூர்ணிமாவிற்கு அவருடைய நெருங்கிய தோழியாக இருக்கும் இந்துஜா தெரியப்படுத்தி இருக்க வேண்டும். இப்படி முகத்தை திருப்பிக் கொண்டு வந்திருக்கக் கூடாது என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications