பிக் பாஸ் 7: பூர்ணிமா அழுகையை விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் நடிகை ஸ்ரீப்ரியா நிக்சன் குறித்து நேற்று பதிவு வெளியிட்டு இருந்த நிலையில் அதைத்தொடர்ந்து பூர்ணிமா மற்றும் மாயா குறித்தும் விமர்சித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதோடு விசித்ராவை இன்னும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என்று நடிகை ஸ்ரீபிரியா கூறியிருக்கிறார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

bigg boss Tamil Season 7 Actress Sripriya Post About Poornima and maya

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளிலிருந்து இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் யார் சரி யார் தவறு என்று யோசிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது உள்ளே நடக்கும் பல பிரச்சனைகள் குறித்து பல பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பத்திலேயே பிரதீப் ரெட் கார்ட் சர்ச்சை பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் சில போட்டியாளர்கள் இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசுவது அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களும் பலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அதில் நேற்று நிக்சன் அர்ச்சனாவை கடுமையான வார்த்தைகளில் திட்டி இருந்தது குறித்து," நிக்சன் தம்பி... மூஞ்ச பாரு! நாயே! சொருகிடுவேன்!! இவ் வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல.. எதிரில் இருப்பவர் என்று பேசி இருந்தாலும்.. தீதும் நன்றும் பிறர் தர வாரா..." என்று பதிவு வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து மாயா மற்றும் பூர்ணிமாவை குறித்தும் ஸ்ரீ பிரியா பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், "என்னுடைய கருத்தின் படி மாயா ஒரு புத்திசாலியான வீராங்கனை. அவள் தன் தவறுகளை புரிந்து கொண்டவர் போல் இருந்தாள். ஆனால் இல்லை, அவளும் அவளுடைய தோழியும் செய்த அனைத்து வேலைகளையும் மறந்து விட்டாளா? ஒருவேளை மாயா செய்த வேலை சரியாக இருந்தால் இந்த விளையாட்டு இன்னும் சிறப்பாக இருக்கும்" என்றும் கூறியிருக்கிறார்.

அதோடு இன்னொரு பதிவில்," பிக் பாஸ் வீட்டில் போன்கள் இல்லை, எந்த வகையான தகவல் தொடர்பு இல்லை என்று நினைத்தேன். அட கடவுளே கண்ணாடியும் இல்லையா...!?" என்று கேட்டிருந்தார். இது நிக்சன் அர்ச்சனாவை குறித்து மூஞ்ச பாரு கருமம் என்று தீட்டியதால் இப்படி கலாய்த்தாரா? என்றும் யோசிக்க வைக்கிறது.

bigg boss Tamil Season 7 Actress Sripriya Post About Poornima and maya

அது போல இன்னொரு பதிவில் "பூர்ணிமாவும் மாயாவும் மிகவும் வேடிக்கையாக இருக்கிறார்கள். அவர்கள் எந்த விதமான யுக்தியும் இல்லாமல் விளையாடுவது போல அழுது கொண்டு அவர்கள் தான் நல்ல உள்ளங்கள் என்று பேசுகிறார்கள்" என்று பூர்ணிமாவின் அழுகையை விமர்சித்திருக்கிறார். அதோடு இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் 5 ஸ்டார் காண புது டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் விசித்திராவை கடுமையாக முயற்சி செய் என்று நடிகை ஸ்ரீபிரியா பாராட்டவும் செய்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+