இது எங்களுக்கு பிடிக்கல.. ஐஷுவை பற்றி அம்மாவே வெளிப்படையாக வெளியிட்ட பதிவு.. கூடவே சொன்ன அட்வைஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐசு பற்றி அவருடைய அம்மா வெளியிட்ட பதிவுதான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
ஐசு நிக்சன் உடன் பழகி வரும் விதம் குறித்து அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவருடைய அம்மா இந்த ஐசு எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சோகமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு விரிவாக கேப்ஷனும் ஐசுவின் அம்மா கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இருந்து சீசனில் காதல் ஜோடியாக நிக்சன் ஐசு இருந்து வருகின்றனர். தற்போது ஐசுவின் அம்மா தன்னுடைய மகள் குறித்து சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் உருவாவது சகஜம் தான். முதல் சீசனில் இருந்து நடந்து முடிந்த ஆறாவது சீசன் வரைக்கும் பல காதல் ஜோடிகள் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பதும் வெளியே போய் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து போனதும் உண்டு.
அது போல இப்போது 7வது சீசனில் ஆரம்பத்தில் ரவீணா,மணி பழகி வருவது குறித்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்து வந்த நிலையில் இப்போது அவர்களை தாண்டி நிக்சன் ஐசு ஜோடி பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கி கொண்டிருக்கின்றனர். ஐசு இருக்கும் இடத்தையே சுற்றி வரும் நிக்சன் ஆரம்ப காலகட்டத்தில் தனியாக தான் விளையாடிக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் நிக்சனே மணி மற்றும் ரவீனாவிடம் நீங்கள் இருவரும் பழகிக்கொண்டிருக்கும் விதம் தப்பாக மாறக்கூடும் என்றெல்லாம் அட்வைஸ் செய்தவர் தான். ஆனால் இப்போது ஐசுவுக்கு சாப்பாடு ஊட்டி விடுவது. ட்ரெஸ்ஸை சரி செய்வது, ஒரே பெட்டில் படுத்துக் கொள்வது போன்ற பல வேலைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
இதனால் இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதம் குறித்து வெளியே அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐசுவின் அம்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், எல்லாத்தையும் உணர்ந்து நீயாகவே இரு ஐசு,எங்களுக்கு இந்த ஐசு வேண்டாம். எங்களுடைய ஐசுவை பார்க்க விரும்புகிறோம்.

உண்மையான கண்கள் எது பொய் எது என உணர்வாய் என நம்புகிறேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications